சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின்  கவனத்திற்கு கொண்டுவர முடிவு- அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம், ஆளுநருடனும் பேச தீர்மானம்

சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு ஆவன நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (06) காலை…

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன்செயற்பட்டால்  நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில்இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்துஅரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்துசெயற்பட முடியாதென்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர்ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்தஇல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக அவர்  (01) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது, மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் 2015 ஆம்ஆண்டில் குதித்த போது ,  மூடியிருந்த கதவை நாங்கள்திறந்து விட்டதானாலேயே அவருக்கு ஆதரவு பெருகி,  வெற்றிபெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா?  மஹிந்தவா? என்று பெரிய பிரளயம் கிளம்பியிருந்த போது நாம் என்னமுடிவை எடுக்கப்போகின்றோம் என எல்லோரும் அப்போதுஎதிர்பார்த்திருந்தனர். “நாம் போக மாட்டோம்” என அடித்துகூறியவர்களுக்கு நாம் எடுத்த தீர்க்கமான முடிவு மரணஅடியாக மாறியது. அதே போன்று ஜனாதிபதி மைத்திரி அண்மையில்மேற்கொண்ட  ஜனநாயக விரோத செயற்பாடுகளின் போதும்,  நாம் அவருக்கு ஆதரவளிப்போமென பலர் எண்ணினர் .எனினும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாம் எடுத்தமுடிவு அவரது முயற்சிகளை பாழாக்கியது. ஜனாதிபதி தேர்தலின் போது “நாம் வந்ததனாலேயே அவர்வெற்றி பெற்றார்”. இப்போது “நாம்  வராததனாலேயே அவரதுமுயற்சிகள் தோல்வியுற்றன”. இதனை முன்னாள் ஜனாதிபதிமஹிந்தவுக்கும் உணர்த்தி இருக்கின்றோம். கோடிகளுக்கும்பதவிகளுக்கும் விலை பேசப்பட்ட போதும் நாம் எதற்கும்அசைந்து கொடுக்க வில்லை . தற்போதைய அரசியல் சூழல் இடியப்பச்சிக்கலாகவும் , கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார்?அடுத்த பிரதமர் யார் ?  எவரது கையில் இனி வரும் ஆட்சி?என்று தீர்மானிக்கும் காலம் நெருங்கி வருகின்றது. கடந்த காலங்களில் வன்னியில் உதித்த எமது கட்சியானது ஆட்சியை தீர்மானிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றாகஇருந்தது. அதே போன்று இனி வரும் காலங்களிலும் இந்தகட்சியின் பங்களிப்பு அவர்களுக்கு அவசியமே. வன்னியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டால் கடந்த காலங்களைபோன்று  சவால்களை முறியடித்து , ஆட்சியில்  தவிர்க்கமுடியாத, முக்கிய ஒரு கட்சியாக பரிணமித்தது போல, இனிவரும் காலங்களிலும் அதனை விளங்க செய்ய முடியும். அதன்மூலம் நாம் சொல்வதை செய்ய கூடிய நாட்டுத்தலைமையைஉருவாக்க முடியும். எல்லா இனத்தையும் மதத்தையும் சமமாகமதித்து போஷிக்கும் ஒரு ஜனாதிபதியையும்  உருவாக்கலாம். எமது செயற்பாடுகள் சிறு பிள்ளைத்தனமாக இருக்க கூடாது.தூர இலக்குடன் செயற்பட வேண்டும்.இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும்ஐக்கியத்தை சிதைத்து எங்களை பிரித்து வேறாக்கநினைப்பவர்களுக்கு நமது ஒற்றுமையின் மூலம் சிறந்தபதில்களை வழங்குவோம் . இவ்வாறு அமைச்சர்தெரிவித்தார்.

“ஒரே நாளில் 200  பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :-  அமைச்சர் ரிஷாட்!

கல்விக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டத்தில் மேலுமொரு படியாக “ அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “ தேசிய…

“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த  திட்டங்கள் ! அமைச்சர் ரிஷாட் வவுனியாவில் தெரிவிப்பு..

கிட்டத்தட்ட  10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு  சதவீத  பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும்…

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில்: பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பு!

“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு” எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர்…

“வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்” தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையும் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மன்னாரில் அறிவிப்பு!  

தெற்கில் இடம்பெற்று வருவது போன்று வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும்  அந்தவகையில் மன்னார் மாவட்டத்திலும்  சுற்றுலாத்துறை மேம்பாடு , திருமலைக்கான  அதிவேக நெடுஞ்சாலை , தலைமன்னார் – இராமேஸ்வர கப்பல் சேவையை…

“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும்  பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்!!!

நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்திற்கும்…

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள்  பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக்கூட்டத்தில் ஆராய்வு!

மன்னார் மாவட்டத்திலுள்ள  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றல் ,  முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகள் கடற்படையினரால் இன்னும் விடுவிக்கபடாமை மற்றும் வன பரிபாலன திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள…

“புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் மன்னார் கூட்டத்தில் கோரிக்கை !  

புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று  இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. பிரதமர்…

டிஜிட்டல் தளதரவு  ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

‘இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்   தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த…