கைத்தறி நெசவு  தொழில் முயற்சிகளும் எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் கைத்தறி நெசவு தொழில் முயற்சிகள்  பாராட்டப்படக்கூடியவை. மஹிந்த சிந்தனையின் எதிர்கால திட்டதிற்கு அமைய இலங்கையின் கைத்தறி நெசவுத் துறை உயர்ந்த நிலைக்கு கொண்டுவரப்படவேண்டும்.

அதற்கமைய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிக்குழு கைத்தறி நெசவுக்கான வெளியூர் பயிற்சிக்கென  11 நெசவாளர்களை தெரிவுசெய்துள்ளது. இவர்களுக்கான பயிற்சி கேரள மாநிலத்தின் கண்ணூர் என்ற பகுதியில் அமைந்துள்ள ‘இந்தியன் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில்’ நடைபெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஒரு மாத காலம் கொண்ட பயிற்சிக்காக பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த நெசவாளர்களுக்கான விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாண ரீதியாக தெரிவு செய்யப்ட்ட இந்த 11 பேருக்கும் நேற்று காலை  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் வைத்து அவர்களுக்கான விமான டிக்கட்டு மற்றும் பயிற்சிக்கான விபரம் அடங்கிய ஆவணங்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீனhரால் வழங்கப்பட்டது.

இந்த நெசவாளர்கள் எதிர்வரும்  டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தமது பயிற்சிக்கான பயணத்தினை மேற்கொள்ளுவார்கள். கைத்தறி நெசவு தொழிலில் நன்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற திறமைவாய்ந்த நெசவாளர்களுக்கே  இந்த பயிற்சி நெறி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தெரிவு செய்யப்ட்ட இந்த 11 பேரில் வடமாகணத்தை சேர்ந்தவரும் அடங்குகின்றார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஆலோசனை குழு உறுப்பினரும்இ கைத்தறி மற்றும் வீட்டு ஜவுளி துறைக்கான அதிகாரி  கே. ஜெகதீசன் தலைமையில் இந்த  கைத்தறி நெசவாளர்கள் பயிற்சிக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து பேசுகையில்:

வரவு செலவுத் திட்டத்தில் கைத்தறிஇ நெசவுத் துறையையும் மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளமையை நான் பெரிதும் வரவேற்கின்றேன். இந்த வரவு செலவுத் திட்டம் பிரதானமாக சமூக பொருளாதார அபிவிருத்தியையும்இ வறிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நிவாரணத்தையும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை வலுப்படுத்துவதுமான முன்மொழிவுகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இதில் பெண்கள் தொழில் முனைவோருக்கு ரூ 250இ000 வரை வட்டி இல்லாத கடன் வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் தங்கள் சொந்த வருவாய்யினை ஈட்டிக்கொள்வதோடு சமூகத்தில் ஒரு வலுவான பொருளாதார பங்கை வகிக்க முடியும்.அத்துடன் இது புதுமையான மாற்றத்திற்கான பெண்களின் அதிகாரத்திற்கு படிமுறையாக அமையும;

இலங்கையின் ஏற்றுமதியில் கைத்தறி நெசவு உற்பத்திகள் கணிசமான பங்களிப்பை அளித்து வருகின்றன. கைத்தறி நெசவுத்துறையை மேம்ப டுத்துவதன் மூலம் நாங்கள் சர்வதேச சந்தைகளில் எமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வழிவகுப்பதுடன் கைத்தறி நெசவுத்துறையை நவீனப்படுத்தி இளைஞர் யுவதிகளையும் ஈடுபடுத்துவதற்கு வழிவகுக்குமெனகுமென நான் நம்புகின்றேன்.

எமது நாட்டில் உற்பத்தியாகும் கைத்தறி நெசவு பொருட்கள் இத்தாலிஇ மாலைதீவுஇ ஜேர்மனிஇ பிரான்ஸ்இ ஐக்கிய இராச்சியம்இ தாய்லாந்துஇ நெதர்லாந்துஇ நோர்வே ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

தற்போது இலங்கையில் 511 கைத்தறி நெசவு நிலையங்கள் இருப்பதுடன் 2971 நெசவாளர்கள் கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தனியார் துறையினரும் கூட்டுறவுத் துறையினரும் பல கைத்தறி நெசவு ஆலைகளை நடத்தி வருகின்றனர். கைத்தறி நெசவு இலங்கையில் வடமேல்  மற்றும் மத்திய மாகாணங்களிலே பெருமளவு செய்யப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணம் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றதாக இருந்த போதிலும் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரலையின் அழிவினால் இத்துறைக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் கிழக்கு மாகாணத்தில் கைத்தறி நெசவு சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து வருவதைக் காணமுடிகிறது. அத்துடன் யுத்தம் முடிவுற்ற பின்பு வடமாகாணத்திலும் கைத்தறி நெசவு தொழில் முன்னேற்றம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அமைச்சர் பசில் ராஜபக்ஷ மஹிந்த சிந்தனையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு வழிசமைக்க கைத்தறி நெசவுக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிவருகின்றார்.

மேற்படி இந்த நெசவாளர்கள் கைத்தறி நெசவு உற்பத்தியில் நவீன பயிற்சிகளை பெற்றுவந்த பின்னர் அவர்களின்  பங்களிப்பினை நாட்டிற்கு நல்கலாம். அவர்களின்; வழிக்காட்டலில் சந்தைப்படுத்தல்களினையும் முன்னெடுப்பதால; கணிசமான வருமானத்தை மாகாண சபைக்கு வழங்க முடியும்.தொழில் வாய்ப்புக்களையும் அதிகளவில் உருவாக்கலாம்.

மேற்படி இந்ந நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பிரதி அமைச்சர்லஷ்மன் வசந்த பெரேரா செயலாளர் அனுர சிறிவர்தன உட்பட  பல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *