COVID-19 வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர், தாராபுர கிராமத்தின் மரண வீடொன்றில் கலந்துகொண்டதனால் அந்தக் கிராமம் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தவிவகாரத்தை இனவாத ஊடகங்களும், சில சமூக வலைத்தளங்களும் ஊதிப்பெருப்பித்து, தொடர்ச்சியாக இந்தக்கிராம மக்களை கொரோனா நோயாளிகளாக, வேண்டுமென்றே கதை பரப்பினர்.
கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளிவரும் முன்னரே இனவாத ஊடகங்கள் வேண்டுமென்றே முடிவுகளையும் வழங்கினர்.
எனினும் மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களில் கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகிய எட்டு பேரின் இரத்த மாதிரிகள் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இன்று (10.04.2020) கிடைத்த முடிவுகளில், அவர்கள் எவருக்கும் Covid19 தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இனவாத ஊடகங்கள் இனியாவது பொய்களை வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பாமல் ஊடக தர்மத்தை பேணவேண்டும்.