வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தலைஇரத்துச்செய்யுங்கள், ஜனாதிபதியிடம் முசலி மக்கள் கடிதம்மூலம் கோரிக்கை.
தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவும் முடிவு வில்பத்து வன சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ளவனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானபிரதேசதங்களை உள்வாங்கி பாதுகாப்பட்ட வனம் என அந்தப்பிரதேசத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதனால் முசலிப்பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சுமார் 10 கிராமங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேச மக்கள்குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென முசலிப் பிரதேசத்த்ன் பல்வேறு அமைப்புக்கள்கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அவசரக்கடிதமொன்றினையும்அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி பரிபாலனசபைகள், விவசாய அமைப்புக்கள், கிராமஅபிவிருத்தி சங்கங்கள், மாதர் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பொதுநலஅமைப்புக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றைஅனுப்பியுள்ளதாகவும், அதன் பிரதி முசலிப் பிரதேசசெயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அமைப்புக்களின்பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை அனைத்துப் பள்ளிவாசல்சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உட்பட மக்கள் சார்ந்தஅமைப்புக்கள் கொழும்பில் சந்தித்து தற்போது ஏற்பட்டுள்ளநிலமைகளை தெரிவித்தனர். கடந்த 13.03.2017 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டு முசலிப்பிரதேச செயலகத்தினால் முசலிப் பிரதேசத்திலுள்ளஅனைத்துப் பள்ளிவாசலுக்கும் இவ்விடயம் குறித்துகடிதமொன்று ஒப்படைக்கப்பட்டதாகவும் அக்கடிதத்தின் படிஅன்றைய தினத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் இவ்வாறுகுறிப்பிட்ட பிரதேசங்கள் காடுகளுக்குச் சொந்தமாக்குவதில்உங்களுக்கு ஏதாவது எதிர்ப்புக்கள், ஆட்சேபனைகள்இருப்பின் தெரிவிக்குமாறும் கூறப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பிட்ட திகதியிலிருந்து 2 வாரம் என்றுகுறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி அக்காலஅவகாசத்திற்கு முன்னரே இந்த வர்த்தமானி அறிவித்தலில்கையொப்பம் இட்டுள்ளமை ஏனோ என்று தமக்குவிளங்கவில்லை எனவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். மாவில்லு, வெப்பல், மறிச்சுக்கட்டி, விலாத்திக்குளம், பெறியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டேவனப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 3 ஆ பிரிவின் கீழ்மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம் என வர்த்தமானி அறிவித்தல்மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். முசலிப் பிரதேசத்தின் எல்லைக்குட்பட்ட 28 கிராமங்களில் 10 கிராமங்களுக்கு இந்த அறிவித்தல் மூலம் பாரிய பாதிப்புஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள இந்த பிரதேச மக்கள்தங்களுக்குச் சொந்தமான பரம்பரை குடியிருப்புக்காணிகளும்மேய்ச்சல் தரைகளும், விவசாய நிலங்களும் இந்தப்பிரகடனத்தின் மூலம் உள்வாங்கப்பட்டுள்ளதாககுற்றஞ்சாட்டுகின்றனர். நல்லாட்சியை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த பங்களிப்புச்செய்த முசலி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்துகவனயீர்ப்புப் போராட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் மறியல் போராட்டங்களைதொடர்ச்சியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்சமூக நல அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. நாடளாவிய ரீதியில் தமது போராட்டங்களை முன்னெடுத்துச்சென்று நீதி கோருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும்மக்கள் நலன் சார் அமைப்புக்கள், சர்வதேசத்தின் கவனத்திற்குஇதனைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ”1990 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்திலிருந்துவெளியேற்றப்பட்ட நாங்கள் சுமார் 25 வருட அகதி வாழ்வின்பின்னர் மீண்டும் சொந்தப் பிரதேசங்களுக்கு சென்றுநிம்மதியாக வாழ முற்படும்போது மரத்தால் விழுந்தவனைமாடேறி மிதித்தது போன்று மீண்டும் தமக்கு அநியாயம்செய்யபடுவதாக வேதனைப் பட்டனர்” அகதியாக வாழ்ந்த காலத்தில் தமது காணிகளில் அநேகம்இராணுவத்தினராலும் போராட்டக்குழுக்களினாலும்ஆக்கிரமிக்கப்பட்டு மாற்றார் குடியிருக்கின்றனர். விவசாயநிலங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. அத்துடன்2012 ஆம் ஆண்டு வன பரிபாலனத்திணைக்களம் எமக்குச்சொந்தமான காணிகளை கொழும்பில் இருந்துகொண்டு ஜி பிஎஸ் முறையைப் பயன்படுத்தி தமக்கு உரித்தான காணிகளாகபிரகடனப்படுத்தியது. அத்துடன் எஞ்சியிருக்கும் எமதுகாணிகளில் நாங்கள் குடியேறுவதற்காக அதனைத் துப்பரவுசெய்யும் வேளையில் காடுகளை வெட்டுவதாக இனவாதிகளும், இனவாத ஊடகங்களும் பொய்ப்பிரசாங்களை மேற்கொண்டுவருகின்றனர். ஜனாதிபதிக்கும் தவறான தகவல்களை வழங்கி பிழையானவர்த்தமானி பிரகடனத்தை வெளியிடுவதற்கு உந்துகோலாகஇருந்ததாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முசலி மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைவெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் இன்று (28) மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர் மாநாடொன்றையும்நடத்த உள்ளனர். புதிய வர்த்தமானிப் பிரகடனத்தினால் முசலிப் பிரதேசக்கிராமங்களான வேப்பங்குளம், பி பி பொற்கேணி, எஸ் பிபொற்கேணி, பிச்சைவாணிப நெடுங்குளம், அகத்திமுறிப்பு, தம்பட்ட முசலிக்கட்டு, கூழாங்குளம், மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, கொண்டச்சி, அளக்கட்டு ஆகியகிராமங்களின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.