ஆபிரிக்காவின் முன்றாவது பெரிய பெற்றோல் வழங்குனரான  சூடான் தனது நாட்டின்பெற்றோல் ஆய்வுகளினை   மேற்கொள்வதற்கு இலங்கைக்கு அரிய சந்தர்ப்பத்தினைவழங்கியுள்ளதாக புதுடில்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கானசூடான் தூதுவர் ஈ எல் தாலிப் தெரிவித்தார்.
20160614_174943
 
கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேடஅழைப்பின் நிமித்தம் அமைச்சின் உத்தியோகபூர்வ காரியாலயத்திற்கு வருகைதந்திருந்த போது இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதனைதெரிவித்தார்.இந்த கலந்துரையாலில் சூடான் மற்றும் வர்த்தக அமைச்சின்உத்திN;யாகபூர்வ அரச அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
 
இக் கலந்துரையாலில் சூடான் தூதுவர் ஈல் தாலீப் மேலும் கருத்து தெரிவிக்கையில்:ஆபிரிக்கக் கண்டத்தில் பரப்பளவில் மிகப்பெரிய நாடும் வளம் மிக்க நாடும்சூடானாகும்.  இதன் தலைநகரம் கார்டூம் இது ஆபிரிக்காவின் மிகவும் நவீனமானபாதுகாப்பான தலைநகரங்களில் ஒன்று. நன்கு பயிற்சி பெற்ற எண்ணெய் தொடர்பானஆய்வு திறன்கள் கொண்டவர்கள் இங்கு வேலை செய்கின்றனர். அதிக போட்டிவிலையில் காணப்படுகின்ற பெற்றோலினை நியாயமான விலையில் இலங்கைக்குஎம்மால்; வழங்க முடியும். 1970 தெற்கு சூடான் பகுதியில் இருந்தே நாங்கள் எண்ணெய்ஆய்வினை தொடங்கினோம.;
 
எமது பிரதேசத்தில்   எண்ணெய் வளம்   அதிகமாக உள்ளது. ஏற்கனவே சீன,மலேசியா பொறியாளர்கள் புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை பயன்படுத்திஆய்வுகளை மேற்கொண்டு புதிய எண்ணெய் வள வைப்புக்களைகண்டுபிடித்துள்ளனர்.
 
உண்மையில், பெரிய பெற்றோல்  ஏரிகளினை எடுத்துக்கொண்டால் சூடானேமுன்னிலையில் உள்ளது என்று நாம் கண்டுபிடித்துள்ளோம்.   இப்போது உலகளவில் கச்சாவை  எடுத்துக்கொண்டால் எம்மை விட சவூதி அரேபியாவில் மட்டுமேபெரியளவில் கச்சா வள வைப்பு உள்ளது என சுட்டிக்காட்ட வேண்டும்! எங்கள் கச்சாமிகவும் சுத்தமானது! நாம் பெரும்பாலும் பெற்றோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிசெயற்பாடுகளில் ஈடுபட்ட வருகின்றோம். எம்மிடம்  டீசல் இல்லை.
 
இலங்கை அரசாங்கமோ அல்லது இலங்கையின் எந்தவொரு நிறுவனங்களுமோ சூடானின் தூய்மை பெற்றோலினை பெற்றுக்ககொள்ள முடியும். 
 
நாங்கள் பெற்றோலினை  மிகவும் நியாயமான விலையில் வழங்க தயாராக உள்ளோம்.மிகவும்  முக்கியமானது என்னவென்றால் சூடானில் எண்ணெய் ஆய்வுகளில் முதலீடுசெய்தல், ஆய்வு தொகுதிகளை வாங்குதல், எண்ணெய் பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல்மற்றும்   சூடானில் இருந்து நேரடியாக ஏற்றுமதி செய்பவர்களுக்கு எம்மால்உதவிகளை வழங்க முடியும.; 
 
எங்கள் நாட்டு பெற்றொலிய அமைச்சின் வழமையான ஏலத்தில் உங்கள்அரசாங்கத்தையும் தனியார் துறையினரையும்; பங்கேற்றுக்கொள்ளும் படி நாம்அழைக்கின்றோம். இலங்கை தனது பெற்றொலியத்தினை தாமேஉருவாக்குவதென்றால் சுடானுக்கு வந்து எங்கள் நாட்டு எண்ணை தொகுதிகளினைபெற்று பின்பு பிரித்தெடுத்து  சுத்திகரித்து முழுமையாக இலங்கைக்கு அனுப்பமுடியும். இதற்கு தேவையான உதவிகளை நாம் வழங்குவோம். அத்துடன் உயர்நியாயமான விலையினையும் நிர்ணயிபதற்கும் உதவிபுரிவோம்.சீனா,மலேசியா,இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே தமது சொந்தநிறுவனங்களினை எமது நாட்டில் நிறுவியுள்ளனர்;.இங்கு இவர்கள் தமது ஆய்வுகள்,உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதியினை இங்கிருந்த வண்ணம்  அவர்களின் நாட்டிற்குஅனுப்புகின்றனர். இவர்களுடைய விலைகளும் சர்வதேச விலைகளுக்கு ஒத்ததாகவேகாணப்படுகின்றன. இவ்வருட இறுதிக்குள் எண்ணை விலை சாதாரண விலைக்குதிரும்பினால் சூடானும் உலகளவில் சிறந்த  எண்ணை ஏற்றுமதியாளாராக  திகழும்.
 
பல சர்வதேச எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த எண்ணெயினைசுறுசுறுப்பாக சூடானில் உருவாக்குகின்றனர். இவ் சர்வதேச  உற்பத்தியாளர்களில்மத்தியில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமானவிதேஷ் லிமிடெட், முன்னிலையில்  இருக்கின்றது. எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு நிறுவனம் இந்தியப் பொதுத்துறை பெற்ரோலிய நிறுவனம் ஆகும். இதுஇந்தியாவில் அதிகமாக இலாபம் ஈட்டும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம்எண்ணெயின் ஆய்வுகள் மற்றும் உற்பத்தி தொடர்புடைய நிறுவனங்களில் ஆசியாவின்மிகப்பெரிய மற்றும் மிகவும் இயக்கத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும். 
 
எதிர்வரும் ஜுலை மாதம் சூடான் – கார்டூமில் நடைபெறவுள்ள தொழில்துறைமாநாட்டிற்கு இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கலந்துக்கொள்ளும் படிநாம் அழைப்பு விடுவிக்கின்றோம். அங்கு நாம் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளினை மேற்கொள்ளலாம். அத்துடன் இலங்கையோடு சலுகையுடனானவர்த்தக உடன்படிக்கைகளினை மேற்கொள்வதற்கும் நாம் ஆர்வமாக இருக்கின்றோம்.
 
சூடான் நாள் ஒன்றுக்கு 120,000 மேற்பட்ட பெற்றோல் பீப்பாய்களை விநியோகத்துவருடாந்த ஏற்றுமதி வருமானமாக  2 பில்லியன் அமெரிக்க டொலரினைசம்பாதிக்கின்றது. சூடானில்; ஒரு பில்லியன் கச்சா பேரல் வள வைப்புக்கள்இனங்காணப்பட்டுள்ளன. பாரமற்றதும் மற்றும் மெழுகு போன்ற  ‘நைல் கலப்பு’ என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய்யின் பிராண்டுகள் மதிப்புமிக்க பிராண்ட்ஆகும்.  கச்சா எண்ணெய்யில் மேலும் 160 வேறு வர்க்க பிராண்ட்கள்  காணப்படுகின்றன.  கச்சாவை சவூதி அராபியில் ‘அராப் லைட்’ என்றும் ஈரானில்; ‘ஈரான் லைட்’; என்றும் அழைக்கின்றனர். மெழுகு போன்ற ‘நைல் கலப்பு’ முதன்முறையாக  1999 ஆம் ஆண்டு உலக எண்ணெய்ச் சந்தைக்கு வந்தது. நைல் கலப்புவாங்கும் நாடுகளில் சீனா முன்னணயில் இருந்து வருகிறது என்றார்.
 
 
இக் கலந்துரையாலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்து தெரிவிக்கையில்:
சூடான் – இலங்கை உறவுகள் வரலாற்றுமிக்கவை.  கூட்டு அரசாங்கத்தின்தலைவர்களின்  தூரநோக்கின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பெரிய அளவில் தொழில் மற்றும் பொருளாதாரசீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். உங்களது தொழில் முயற்சியும்பெற்றோலிய வாய்ப்பும் நமது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெரிதும்உதவும். வர்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் என்ற ரீதியில் பெற்றோலியஆய்வுகள், உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர்ஆகியோருடன்; கலந்தாலோசிக்கவுள்ளேன்;.
 
வருகின்ற மாதம் சுடான் கார்டூமில் நடைபெறவுள்ள தொழில்துறை மாநாட்டில்கலந்துக்கொள்வதற்கு  இலங்கை ஆர்வமாக இருக்கின்றது. நீங்கள் கூறியது போலஅங்கு இருதரப்பு வர்த்தக பேச்சு வார்த்தைகளினை மேற்கொள்ளலாம்.சலுகையுடனான வர்த்தக உடன்படிக்கைகளினை வரவேற்கின்றேன். இதனை மேற்கொள்வதற்கு நாம் ஆர்வமாக இருக்கின்றோம்.தற்போதைய இருதரப்பு வர்த்தகம் 2மில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகின்ற நிலையில் வர்த்தக தொகுதிகளினைஅதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் எட்ப்பட்டுள்ளது.
 
வர்த்தக திணைக்களத்தின் அறிக்கைளின் படி, 2015  ஆம் ஆண்டில் சூடான் – இலங்கைஇரு தரப்பு  மொத்த வர்த்தகம் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதில்ஏற்றுமதி 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.  இலங்கையின்  தேயிலைமற்றும் காய்ந்த தேங்காய்கள்  சூடானுக்கான  முக்கிய ஏற்றுமதி பொருட்களாகஇருந்தன என்றார் அமைச்சர்.
 
இது தவிர இக்கலந்துரையாடலின் அமைச்சர் பதியுதீன், தூதுவர் ஈ எல் தாலிப் ஆகியஇருவரும்  இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம்,அபிவிருத்தி, ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும்முதலீடுகள் போன்ற விடயங்களை ஆராய்ந்தனர்.
Screenshot_41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *