தங்கொட்டுவ கைத்தொழில், வர்த்தக வலயத்தில், கைத்தொழிற் துறையை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (31/05/2016)இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கைத்தொழில்,வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் தென்னகோன், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிருவனங்களின் உயரதிகாரிகள், முதலீட்டாளர்கள்,திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், முதலீட்டுத் துறையில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினர். அத்துடன் தொழிலாளர்களின் நல உரிமைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 10 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தில், கைத்தொழிற் துறையின் பங்களிப்பு தொடர்பிலும், அவற்றை முன்னேற்றுவதற்கான உபாயங்கள், கருத்திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.