ஐந்தாவது சார்க் வர்த்தகத்துறை அமைச்சர்கள் கான்கிளேவ் கூட்டம் கடந்த 16-18 திகதி வரை புது டில்லயில் நடைபெற்றது. இந்நிகழ்வின் இறுதி அமர்வுகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.இந்தகூட்டத்தின் இறுதி நாளன்று (ஜனவரி 18 ஆம் திகதி) இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் புது தில்லியில் கே.கே பிர்லா கேட்போர் கூடத்தில் இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர ரிஷாட் பதியுதீன் உட்பட சார்க் பிராந்தியத்தின் வர்த்தக அமைச்சர்களினை சந்திதார்.
சார்க்நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மேம்பாடுகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்காலில் உள்ள இடர்பாடுகள் குறித்து இவர்களுடன் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பேச்சு வார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பொதுநலன் சார்ந்த விவகாரங்களில் கருத்தொற்றுமையை உருவாக்குவது இதன் மூலம் சார்க் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான அடிப்படையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும் இந்த பேச்சுவார்த்தையூடாக இந்த வர்த்தக தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டது.
மேற்படி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இலங்கை வர்த்தகசார் உத்தியோக பூர்வ அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கொண்ட இலங்கை பிரதிநிதிகள் இந்த கான்கிளேவ் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
‘தெற்காசிய நூற்றாண்டில் மேம்பாட்டினை நோக்கிய பிராந்திய ஒருங்கிணைப்பு’ கருப்பொருளில் ஐந்தாவது சார்க் வர்த்தக தலைவர்கள் கான்கிளேவ் கூட்டம் ஓழுங்கு செய்யபட்டிருந்தது.
இறுதி அமர்வுகளின் போது சார்க் பிராந்திய பங்கேற்பாளர்கள் மத்தியில் விவாதங்கள் இடம்பெற்றதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் வர்த்தகம் தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் , எப்படி வர்த்தகத்தினூன வர்த்தகம் (டீ2டீ; வர்த்தகம்), தொடர்பிலான விவகாரங்களை எவ்வாறு முன்னேடுத்துச்செல்வது குறித்த விடயங்கள் பேசப்பட்டன.
இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் பிரடரிக் நாமன் அறக்கட்டளையின் பிராந்திய சபை இணைந்து சார்க் வர்த்தகததுறை அமைச்சர்களின் கான்கிளேவ் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சார்க் அமைப்பின் பொது செயலாளர் அகமட் சலீம் உட்பட 300 க்கும் மேற்பட்ட சார்க் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் உயர் வர்த்தக உத்தியோகபூர்வ அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.