சார்க் அமைப்பு பிராந்திய ஒருங்கிணைப்புகளில் இலங்கை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதற்கு உறுதி செய்துள்ளது. நாட்டின் தாராள வர்த்தக கொள்கைகக்கிணங்க சர்வதேச வர்த்தக தரவரிசையில் முன்னேருவதற்கு இது உதவுகின்றது. சார்க் அமைப்புப்பின் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பின் நோக்கங்களின் திட்டங்களை மேம்படுத்துவதற்கு ஆதரவாகவும் இலங்கை தொடர்ந்து முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் அத்துடன் வர்த்தக சுட்டெண் தரவரிசைகளினை அதிகரிப்பதற்கு ஓட்டுமொத்த சினேகபூர்வ வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழல் எங்களுக்கு உதவும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த 17 திகதி புது டில்லயில் நடைபெற்ற ஐந்தாவது சார்க் வர்த்தக கான்கிளேவ் நிகழ்வின் இறுதி அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அமர்வில் சார்க் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் (ளுயுகுவுயு) கீழ் ஜூலை 2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இலங்கையின் திரண்ட வர்த்தகம்; 2.34 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. இருந்தபோதிலும் தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான இலங்கையின் ஏற்றுமதி 2007 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரை 1132 மூ சத வீதமாக அதிகரித்த வந்தது.
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ளுயுகுவுயு கீழ் 2007 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரை இலங்கையின் திரண்ட ஏற்றுமதி 1.533 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. மேற்படி இந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கை தொடர்ந்து ஒரு பாதகமான வர்த்தக சமநிலை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் சேவைகள் வர்த்தகம் மீதான உடன்படிக்கைகளினுடனான எங்களது முனைப்புகள் வலுவான வழிமுறைகளினை கொண்டது. இவை சார்க் அமைப்புடன் ஒருங்கிணைந்து இருக்கின்றன. சேவைகள் வர்த்தகம் மீதான உடன்படிக்கையினை நாம் மேலும் படிக்க வேண்டும் என்று நம்புகிறேன். அத்துடன் ஒவ்வொரு நாட்டினதும் பலத்தினை அடையாளம் கண்டு அவர்களது ஏற்றுமதி தயாரிப்பு நகலினை தவிர்ப்பதன் மூலம், எங்களுடைய சிறந்த ஒருங்கிணைப்பனை சார்க் அமைப்புடன் நிலைப்படுத்த முடியும். இலங்கை ஒரு தீவு நாடு என்பதால், கடல் மற்றும் ஆகாய மார்க்கமான சிறந்த ஒத்துழைப்பினை சார்க் அமைப்புடன் வலுப்படுத்த முடியும். நமது நாட்டின் அமைப்பின் மைய நிலை காரணமாக சார்க அமைப்பு விநியோக சங்கிலியில் இலங்கை ஒரு பெரிய பங்கினை வகிக்க முடியும். தென் ஆசியாவில் ஒரு உயர் வளர்ச்சயுடைய நடுத்தர வருமான பொருளாதாரத்தை கொண்ட பிரதிநிதி என்ற முறையில், இந்த நிகழ்வில் ஆர்வமாக பங்குபற்றியவர்களுக்கு தாராளமான மற்றும் நம்பிக்கைக்குரிய பல வாய்ப்புகள் கிடைக்கும் பாராட்டுகிறேன் என அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்
உண்மையில், எங்கள் வளர்ச்சி வாய்ப்புக்களளோடு , வர்த்தக சுட்டெண் பட்டியலில் இலங்கை வலுவான தரவரிசை நிலையில் உள்ளது என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்திய வர்த்தக சுட்டெண் இலங்கையினை 84 வது தரவரிசைக்கான இடத்திற்கு இட்டுச்சென்றுள்ளது. இந்த வலுவான செயல்திறனிற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது அரசாங்கத்தின் தாராள பொருளாதார கொள்கைகள் வலுவான தரவரிசைக்கான இடத்தை பெற்று தந்துள்ளது எனலாம்.
மேலும், முதலீட்டு சபையில் வர்த்தக பதிவுகளினை வேகமாக மேற்கொண்டு 20 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி வர்த்தக சுட்டெண் அணிகளில் முன்நோக்கி செல்வதற்கு எங்களுக்கு ஒட்டுமொத்த வர்த்தக மற்றும் முதலீட்டு சினேகபூர்வ சூழலில் உதவும் என்று மகிழ்ச்சி தெரிவித்துக்கொள்கின்றேன்.
பிராந்திய வர்த்தக சமூகத்தினருக்கு இலங்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நெருக்கமாக ஆராய்வதற்கான சரியான நேரம் வந்துள்ளது என்று நான் நான் உறுதியாக நம்புகிறேன. எனவே, இன்று நான் உங்கள் அனைவருக்கும் மனமுவந்து வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு அழைப்பு விடுவிக்கின்றேன்.
சார்க் அமைப்பில் காணப்படுகின்ற பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்கான திட்டங்ளை மேம்படுத்துவதற்கு ஆதரவாக இலங்கை தொடர்ந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் என்று தெரிவித்து கொள்கிறேன்.