பௌத்த மதகுருக்கள் குழு வொன்று நேற்று நடாத்திய ஊடகமாடொன்றில் தெரிவித்த கருத்துக்களை நான்; வன்மையாக கண்டிக்கின்றேன்.
அவர்கள் தெரிவித்தாவது – வடக்கில் உள்ள வில்பத்துப்பகுதியில் தமிழ் சிங்களம், ஆங்கிலம் மொழி தெரியாத வெளிநாட்டு முஸ்லீம்களே அங்கு குடியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர் அவ்வாறு அங்கு எந்தவொரு வெளிநாட்டவர்கள் குடியேறவில்லை.
அத்துடன் வில்பத்து பிரச்சினையை வைத்து எனக்கு ஊடகங்களில் சேறு பூசுகின்றனர். அங்கு வில்பத்து வனாந்திரத்திற்குள் யாரும் போய் குடியேற வில்லை அங்கு சட்டரீதியாக நீதிப்படி நியாயப்படி உரிய அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் கொண்ட குழுவின் பரிசீலனைக்கு ஏற்ப அங்கு பரம்பரையாக வாழ்நதவர்களே அங்கு குடியேறியுள்ளர்.
ஆனால் எனக்கு சேறு பூசினாலும் அப்பாவி முஸ்லீம்கள் மீது வீன் பழிசுமத்த வேண்டாம். எனவும் அமைச்சர் றிசாத பதியுத்தீன் தெரிவித்தார்.
இன்று ஏற்றுமதி இற்க்குமதி அதிகார சபையின் கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மேற்கண்டாவறு தெரிவித்தார்.
வடக்கு மக்கள் கடந்த 23 வருடங்களுக்கு முன் உடுத்த உடையோடு வெளியேறினார்கள் தானும் அவ்வாறு வந்த ஒருவன். அந்த மக்கள் தமது கல்வி, பொருளாதாரம், தொழிலகள்,; உறவுகள், செர்துக்கள் 70 பள்ளிவாசல்கள், 60 பாடசாலைகள், 20ஆயிரம் வீடுகள், தமது விவசாய நிலங்கள், மீண்பிடி வள்ளங்களென சகலதையும் இழந்து வந்த மக்கள்hகும்.
நாட்டில் சமாதானம் ஏற்பட்டு 6 வருடங்கள் பின்பு அம்மக்கள் தாம் வாழ்ந்த இடத்திற்குள் மீளச்; செல்லும்போது அம்மக்களை சிலர் வீன் பழி சுமத்துகின்றனர். அச்சுறுத்துகின்றனர். ஒரு தனியார் ஊடகமொன்று அம்மக்களை பலவந்தமாக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவிக்க அச்சுறுத்தப்படுகினற்னர்.
இந்த நாட்டு மக்கள் பரம்பரையாக நாட்டுப்பற்று உள்ளவர்கள். ஏனைய இனங்களோடு ஜக்கியமாகவும் சமாதான விரும்பிகளாகவும் ஏனைய இரு சமுகத்தின் உறவுப் பாலமாகவும் இருந்து நீண்டகாலமாக இருந்து வந்துள்ளனர்.
நான் இந்த கடும்போக்காளர்களுக்கும் இனவாதிகளுக்கும் ஒரு சவால் விடுக்கின்றேன். அப்படி வடக்கில் பிறந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களைத் தவிர வேறு நாட்டவர்கள் அங்கு குடியேற்றப்பட்டிருந்தால் அதனை ஆதாரபூர்வமாக நிருபிக்க வேண்டும். . இவ் விடயம் பற்றி வன வள அதிகாரிகளோ பௌத்த அமைப்புக்களிடம் எந்தவொரு அரசியல் வாதியிடமும் நான் இலக்ரோணிக் ஊடகங்களில் ஊடாக நான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன்
மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் கூட அவர்களது இறுதிக் காலத்தில் இனரீதியானதொரு கட்சியை தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் வாழும் சகல சமுகங்களையும் இணைத்துக் கொண்டு செல்வதற்காக தேசிய ஜக்கிய முன்னணி என்றதொரு கட்சியை உருவாக்கினார். அதேபோன்று தான் எனது கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியாகும். இக்கட்சியில் வடக்கில் சிங்கள தமிழ் முஸ்லீம் மாகாணசபை உறுப்பிணர்கள், பிரதேச சபை உறுப்பிணர்களும் உள்ளனர்.
கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் அமைச்சர்
பசில் ராஜபக்ச ஆகியோறு இணைந்து தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நான் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து பாடுபட்டேன் ஆனால் ;எனது மக்களை நான் குடியேற்ற முடியாமையிட்டு துரதிஸ்டமே. ஆனால் சில் மக்கள் குடியேற முன்வரும்போது சில ;தீவிர போக்குடைய அரசியல் பௌத்த அமைப்புக்கள், பெரும்பலான சிங்கள ஊடகங்கள் வேறு கோணத்திலும் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இந்த பிரச்சினையை ஒரு மற்றதொரு இனப்பிரச்சினையாக்க முயற்சிக்கின்ற்னர். எனவும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அங்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *