ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது!
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தலைமையின் கீழ் இலங்கையில் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் முன்னெக்கப்படுகின்றது. இது வெளிப்படையான கொள்கைகளினை உறுதிசெய்கின்றது. இந்த சாதகமான மாற்றங்கள் இலங்கையுடனான சுவிட்ஸ்லாந்தின் வணிக தொடர்புகள் எளிதாக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.ஏற்றுமதி,வர்த்தகம் மற்றும் பரஸ்பர வர்த்தக ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நோக்கமாக உள்ளதால் சுவிட்ஸ்லாந்து – இலங்கை இரு நாடுகளுக்கிடையிலான இணைந்த பொருளாதார சந்திப்புக்கள் வெற்றிகரமான முயற்சியாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. வெளிநாட்டு முதலீடுகளை விருத்திசெய்து முக்கியமாக புதிய வர்த்தகத்துறைகளை அறிமுகப்படுத்துவதற்க்கும்,தற்போதுள்ள வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வர்த்தக கலந்துயாடல்கள் பயனுள்ளதாக அமையும்.
“சுவிட்ஸ்லாந்துடனான வர்த்தகம்”; என்ற கருப்பொருளில் நேற்று (13) புதன் கிழமை காலை கொழும்பு 02 இல் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர்கூடத்;தில் இடம்பெற்ற வட்டமேசை கலந்துறையாடல் ஒன்;றிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை வெளிப்படுத்தினார்.
இக்கலந்துறையாடலில் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான சுவிட்ஸ்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நிடர்கூன்வும் விசேட அதிதியாக கலந்துக்கொண்டனர்.
மேலும் இக்கலந்துறையாடலில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல எகொடகே மற்றும் இலங்கை வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ். குமாரரட்ன ஆகியோர் இடம்பெற்றனர்.
இங்கு அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில:;
ஏற்றுமதி,வர்த்தகம் மற்றும் பரஸ்பர வர்த்தக ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நோக்கமாக உள்ளதால் இரு நாடுகளுக்கிடையிலான இணைந்த பொருளாதார சந்திப்புக்கள் வெற்றிகரமான முயற்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை. வெளிநாட்டு முதலீடுகளை விருத்திசெய்து முக்கியமாக புதிய வர்த்தகத்துறைகளை அறிமுகப்படுத்துவதற்க்கும்,தற்போதுள்ள வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இவ்வாரான கலந்துயாடல்கள் பயனுள்ளதாக அமையும.;
2014 ஆம் ஆண்டு எங்கள் இருதரப்பு வர்த்தக 2 சத வீதம் அதிகரிப்புடன் 269 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்று உயர்ந்துள்ளது. எனவே; இதுவரை யாராலும் எதிர்பார்க்கப்படாத திறனை இரு தரப்பினராலும் ஆராயப்படலாம். 2014 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தக நடவடிக்கை சற்று உயர்ந்த போதிலும் இலங்கை தொடர்ந்து எதிர்மறையான வர்த்தக நிலுவைக்குட்பட்டு சுவிட்ஸ்லாந்;துக்கு ஆதரவாக இருந்தது. மாறாக 2014; ஆம் ஆண்டில் முதல் முறையாக மீண்டும் இலங்கை 10.17 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டு சுவிட்ஸ்லாந்துக்கு ஆதரவாகவும் மிதமாகவும் காணப்பட்டது.
இலங்கைக்கான சுவிட்ஸ்லாந்தின் முன்னணி இறக்குமதிகளாக தங்கம், மருந்து சிமெண்ட், மற்றும் வைரங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம.; அதே நேரத்தில் இலங்கையில் இருந்து சுவிட்ஸ்லாந்துகான சிறந்த ஏற்றுமதியாக மின் இயந்திர பாகங்கள், அச்சிடப்பட்ட சுற்றுகள், தங்கம், இரத்தினகற்கள் மற்றும் ஆடை காணப்பட்டன.பொருளாதார தூதுக்குழுவினரின் கொழும்புக்கான எதிர்வரும் விஜயம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும். உண்மையில், 2003 ஆம் ஆண்டில் இருந்து சுவிச்சர்லாந்தின் இலங்கைக்கான உதவிகள் பெருகியது.
சுவிச்சர்லாந்து முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் இங்கே முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். ; நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் அவர்களுக்கு எந்த நேரத்திலும் தேவைப்படும் உதவிகளை வழங்க முடியும்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அதே போன்று சீனாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தக உடன்படிக்கைகள் சுவிட்ஸ்லாந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை அளிக்கும்
2012 ஆம் ஆண்டில், இலங்கை சுவிட்ஸ்லாந்து இருந்து மொத்தமாக 14.,46 மில்லியன் அமெரிக்க டொலரினை நேரடி வெளிநாட்டு முதலீடாக பெற்றது. தற்போது இலங்கையில் முன்னணி சுவிட்ஸ்லாந்து முதலீடுகள் வரிசையில் நெஸ்லே ஹோல்சிம் (சிமெண்ட்), டீயரசள உள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சுவிட்ஸ்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நிடர்கூன்வும் கருத்து தெரிவிக்கையில:;
புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்றும் இத் திருத்தச் சட்டமூலத்தில் ஜனநாயகத்தைப்பாதுகாப்பதற்கான பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றை நாம் வரவேற்கின்றோம். இதனுடாக ஊடாக நல்லாட்சி உறுதிப்படுத்தப்படும்; மக்களின் இறைமை பாதுகாக்கப்படும் என்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்வாறு ஏற மக்களின் இறைமை பாதுகாக்கப்படும்விடத்தில் ஜனநாயகத்தை மீள உருவாக்குவதற்குரிய சூழல் உருவாகும். இதை நாம் மதிக்கின்றோம் இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உறுதி.
மேற்படி இவ் வர்த்தக வட்டமேசை கலந்துறையாடல் சுவிட்ஸலாந்து-இலங்கை இருதரப்பு பரஸ்பர உறவுகளின் ஆர்வத்தினை தீவிரப்படுத்தவதற்கான நோக்கமாக இருக்கும். நாம் இப்போது இலங்கையுடனான நம் உறவுகளை தீவிரப்படுத்த முயல்கின்றோம.; இலங்கையின் பொருளாதார உறவுகள் மீதும் முதலீடுகள் மீதும் அதிக சாத்தியக்கூறுகள் காணக்கூடியதாக இருக்கின்றது என நான் நம்புகிறேன். சுவிட்ஸ்லாந்து வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
வர்த்தகம் இ பொருளாதாரம் மற்றும் முதலீட்டு என்பன சுவிச்சர்லாந்து, இலங்கையுடனான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவத்துவதோடு அரசியல் விருப்பங்கள் இருதரப்பு பரஸ்பர உறவுகளின் ஆர்வத்தினை தீவிரப்படுத்தவதற்காக அமையும.; என இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான சுவிட்ஸ்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நிடர்கூன் அறிவித்தார்.
இக்கலந்துரையாடலில் போது அமைச்சர் ரிஷாட்டும், சுவிட்ஸ்லாந்து தூதுவர் இலங்கைக்கான ஏனைய உதவி திட்டங்கள் குறித்து கலந்தாலோதித்தனர்.
இவ்வட்டமேசை கலந்துரையாடலில் சுவிட்ஸலாந்து-இலங்கை உத்தியோக பூர்வ அதிகாரிகள் வர்த்தக பிரதிநிதிகள் உட்பட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் கலந்தக்கொண்டனர்.