இளம் முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட (ஆர்.ஆர்.ரீ) என்ற அமைப்பு நேற்று(12)ஆம் திகதி இரவு வெள்ளவத்தை “மெரைன் ரைவ்” ஹோட்டலில் வைத்து வில்பத்து காடுகளை அழித்து முஸ்லீம்கள் குடியேற்றம் என்ற வீன் பழி சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வு கூட்டமொன்றை நடாத்தியது.
இந் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், முஸ்லீம் கவுண்சில், சூறா கவுன்சில், ஜம்மியத்துல் உலமா, மேமமன் சங்க உறுப்பிணர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வினை சட்டத்தரணிகளான சிராஸ் நூர்டீன், ருஸ்தி ஹபீப், யாட் ரீ.வி ஹில்மி அகமட், நவமணி ஆசிரியர் என்.எம்.அமீன், அன்வர் முஸ்தபா, றியாஸ் சாலி, ஊடகவியலாளர் ஜாவீத் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் ஆகியயோறும் இங்கு உரையாற்றினார்கள்.
இங்கு அமைச்சர் றிசாத் தெரிவிக்கையில் –
இப் பிரச்சினை ஒரு முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினையாகும். கடந்த 25 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் மீளக்குடியேறுவதற்காக தாம் வாழ்ந்த சொந்த இடங்களில் செல்லும்போது அதனை வேறுவிதமாக நோக்குகின்றனர். யுத்த காலத்தில் நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்போது மெனிக் பாமில் வாழ்ந்த 3 இலட்சம் தமிழ் மக்களுக்கு வேண்டிய சகல மீள் குடியேற்ற விடயங்களையும் உடனடியாக செய்தேன். ;சகல நிதி, அரை ஏக்கர் காணி பாடசாலை அடிப்படை வசதிகள் என பல வீடமைப்பு விடயங்களையும் துரிதமாகச் செய்தோம். முன்னைய ஜனாதிபதியும் பசில் ராஜபக்சையும் தமி; மக்களது மீள்குடியேற்றத்தை முன்னிலைப் படுத்தினார்கள். இவற்றை முடித்துவிட்டு வடக்கு முஸ்லீம்களது விடயங்களை கவணிப்போம் என எனக்க அறிவுறுத்தினார்கள். . அதன் பிறகு அதிர்ஸ்டவசமாக மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, குரணத்தின வீரக்கோன் ஆகியோர்கள் நியமிக்கபட்டனர். அவர்களிடம் பல முறை முஸ்லீம்களது மீள்குடியேற்ற விடயம் என்னால் சொல்லப்பட்டும் அவர்கள் அதனைச் செய்யவில்லை.
தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் ரீ.எம்.சுவாமிநாதன் கூட இவ்விடயத்தில் ; இதுவரையும் நடவடிக்கை எடுக்க வில்லை. இவ் விடயத்தில் சிரச, சக்தி, ஹிரு தொலைக்காட்சிகள் ஊடககாட்சிகளை எனது வொய்ஸ் கட்டுக்களை திரிவுபடுத்தி இதனை தொடர்ச்சியாக வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு சென்று இனரீதியாகவும் என்னை பிழையாகக் காட்டுவதற்கும் முஸ்லீம்கள் வில்பத்து காட்டினை ஆக்கிரமிக்கிரார்கள் எனவும் பெரும்பாண்மை மக்களிடையே பிரச்சாரம் செய்கின்றனர்.
இதுவரை முஸ்லீம்களது மீள்குடியேற்ற விடயத்தில் யாழ், கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களில் இரண்டு பக்கங்களிலும் நசுக்கப்பட்டுள்ளோம். ஏற்கனவே மண்ணார் மீனவர் கிராமம், அதற்காக ஆர்பாட்டத்தில் இருந்த 55 முஸ்லீம்கள் சிரை இருந்ததுதான் மிச்சம்.
முஸ்லீம்களது பிரச்சினைகளை நாம் வெளிக்கெணர்வதற்கு முஸ்லீம்களுக்கென்று ஒர் இலக்ரோணிக் மீடியாவோ, பத்திரிகையே எம்மிடம் இல்லை. இதுவும் நம்மிடையே உள்ள பாரியதொரு இழப்பாகும். இவ்விடயத்தில் சிகல உருமைய, பொதுபலசேனா, ஜே.வி.பி, சிகலராவாய போன்ற பல்வேறு விஜமிகள் இனத்துவேசத்தை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வியடத்தில் சகலரும் ஒன்று அரசியல் மற்றும முஸ்லீம் சமுத்தின் அமைப்புக்கள் ஒன்றுபட்டு இதனை நாம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகள் சிங்கள ஊடகங்களுக்கு தெளிபடுத்தல் வேண்டும். அதற்காக ஒரு அமைப்பும் உருவாக்கப்படல் வேண்டும். என அமைச்சர் றிசாத் வேண்டிக் கொண்டார்.
;ஆனால் வில்பத்து காட்டில் ஒரு அங்குல நிலமேனும் எனக்கோ சகோதருக்கு கிடையாது. இந்த மக்கள் வில்பத்து காட்டுப்பகுதியில் குடிஏறி இருந்திருந்தால் நான் பகிரங்கமாக பதவி விலகுவேன். என அவ்வாறு இருந்தால் நான் பதவி விலகுவேன். சில மேமன் சங்கங்கள் உதவி சில குடில்களை கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த மக்கள் குடிபெயரும் போது 1 குடும்பமாக இருந்தவர்கள் தற்பொழுது 25 வருடத்திற்குப் பிறகு 3 குடும்பமாக பெருகி உள்ளனர். அந்த மக்கள் இன்றும் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்pன்றனர். அமைச்சரவையில் மற்றும் ஜனாதிபதியின் கவுண்சில் போன்ற பல்வேறு சர்ந்தர்ப்பங்களில் இவ்விடயத்தை நாம் பேசியிருக்கின்றேன். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செல்லும் விடயங்கள் உடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால் முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினை எடுபடுவதில்லை. முஸ்லீம்களை ஆட்சிக்கு வருவதற்கு மட்டும் பாவிக்கின்றார்கள். ஆனால் இவ்வியடத்தில் பிரதமர் ரணில் இவ் விடயம் பற்றி கவணிக்க வில்லை
இவ் விடயத்தில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அவ்வாறு அங்கு ஒன்றும் இடம்பெறவில்லை. வில்பத்து காட்டை முஸ்லீம்கள் குடியேறவில்லை 25 வருடங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட முஸ்லீமகளுக்கு அவர்களுக்கு காணி பேமிட் உள்ளது. அதன் படியே அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியேறியுள்ளனர். எனத்தெரிவிக்கும்போது அதனை ஏற்க மறுக்கின்றனர். ஆனால் அந்த பெயர்பலகையை தவறாக இரானுவத்தினர் பதித்துள்ளனர். காடுகளுக்கிடையே முன்னாள் பாதுகாப்பபுச் செயலாளரும் இரானுவ அதிகாரிகளும் இடை இடையே தெற்கில் உள்ள சிங்கள கிராமங்களை உருவாக்கியுள்ளனர். அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை. எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *