சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் இரண்டாவது மிக பெரிய வர்த்தக பங்காளியாக பாக்கிஸ்தான் திகழ்கின்றது. எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏற்றுமதியினை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.மேலும் இலங்கையின் சீனி உற்பத்தி துறையின் மீது பாக்கிஸ்தானுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை பாக்கிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கட்டண அமைப்பில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சாதகமான வாய்ப்பு தென்படுகின்றது மற்றும் எமக்குள் காணப்படுகின்ற சாத்தியமான புதிய முன்னேற்றங்களுக் காசிம் குரேஷி கான விதிமுறைகளை நாம் கூட்டாக ஆராய வேண்டும் என இலங்கை பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஐனரல் வலியுறுத்தினார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின வளாகத்திற்கு வருகை தந்திருந்த போதே காசிம் குரேஷி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: எமது இருதரப்பு நாடுகளுக்கிடையே நம்பமுடியாதளவிற்கு வலுவான வர்த்தக சாத்தியம் உள்ளன என்று நம்புகிறேன். சுதந்திர வர்த்தக ஒப்பந்;த முன்னேற்றம் ஆய்வுகள் கூட்டு பொருளாதார ஆணைக்குழு மூலம், நாம் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றோம். இதனால் எமது இரு தரப்பு சினேகபூர்வ வர்த்தகம் அதிக அளவில் அதிகரிக்கப்படுகின்றது. பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை இடையே வர்த்தக சமநிலையற்று காணப்படுகின்றது. இதனை நாம் குறைக்க வேண்டும் அத்துடன் அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் மற்றும் இலங்கையில் இருந்து மேலும் பொருட்கள் பாக்கிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன இதற்கான வழிமுறைகளையும் ஆராய வேண்டும். எனவே இதற்கான வழிமுறையாக தற்போது காணப்படுகின்ற 440 மில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக எதிர்வரும் வருடங்களில் விரிவுபடுத்த வேண்டும்.
இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தகம் ஆரம்பிக்கும் பட்சத்தில் நாம் பாரம்பரிய வணிக பொருட்கள் மட்டும் அல்லாது புதிய பொருட்கள் மற்றும் புதிய தயாரிப்புகள் மீது எமது கவனம் இருக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பாக்கிஸ்தான் நாட்டுக்கான புதிய வரிச்சலுகை கட்டண அமைப்பு இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சாதகமான வாய்ப்பை ஏற்;படுத்துகின்றது. உதாரணமாக, இலங்கை ஏற்றுமதியாளர்கள் இந்த ஜீ.எஸ்.பி. பயன்படுத்தி மேலும் மூல பொருட்களை பாக்கிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய முடியும.; இதற்கான விதிமுறைகளில் உள்ள சாத்தியங்களை நாம் கூட்டாக ஆராய வேண்டும் என்றும் காசிம் குரேஷி சுட்டிக்காட்டினார்.
வர்த்தக திணைக்களத்தின் படி, சார்க் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்து இலங்கை இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளி பாக்கிஸ்தானாகும். பாக்கிஸ்தானுக்கான இலங்கையின் ஏற்றுமதி 2013 ஜனவரி முதல் ஜூன் வரை முதலிடமாக 42.97 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. மிக முக்கியமாக, 2010 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை 60.38 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்து 82.75 மில்லியன் அமெரிக்க டொலராக ஒரு 27 சதவீத எழுச்சி பதிவு செய்ப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2005 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தபின், இருதரப்பு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் காணப்பட்டது. இது 2005 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரை மொத்த வர்த்தகத்தில் 158 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 433.69 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பினை ஏற்படுத்தியது. (2013 ஜனவரி முதல் ஜூன் வரை 289.23 மில்லியன் அமெரிக்க டொலராகும்) அத்துடன் வர்த்தக சமநிலை எப்போதும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
குரேஷி முதலீடுகள் குறித்து பேசுகையில்,
பாக்கிஸ்தானியர் இலங்கையில் புதிய முதலீடுகளை பெறுவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். இது பரஸ்பர வர்த்தக முதலீடுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி இருதரப்பு பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன், ஏனெனில் இலங்கை பாக்கிஸ்தானில் இருந்தும் முதலீடுளை கொண்டு வர முடியும் மற்றும் நாம் இப்போது இலங்கையின் சீனி உற்பத்தி துறையில் முனைப்போடு புதிய முதலீடுகள் எதிர்பாக்கின்றோம்.
2012 ஆம் ஆண்டில் இலங்கை இறக்குமதிக்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்தது. மற்றும் பாக்கிஸ்தானிலிருந்து இலங்கை 3.38 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீனியினை இறக்குமதியும் செய்தது. 2013 ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் பாக்கிஸ்தானிலிருந்து இலங்கைக்கான அன்னிய நேரடி முதலீடு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் இருந்ததுடன் 15 முதலீட்டு திட்டங்களும் நடைமுறைக்கு வந்தது என்றும் அவர் கூறினார்.
2013 ஆண்டு நவம்பர் மாதம் பாக்கிஸ்தான்-இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டாராக் எம். கான் கொழும்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறுகையில் பாக்கிஸ்தன் எமக்கு வழங்கும் ஆதரவுக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். எங்கள் அரசாங்கம் மேற்கொண்ட வர்த்தக கண்கானிப்பினை அடுத்து இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே இடம்பெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளின்; பதினோராவது பேச்சுவார்த்தை 2013 நவம்பர் 27 அன்று வெற்றிகரமாக முடிவுபெற்றது எனபதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.எமது இருதரப்பு வர்த்தக அளவு அதிகரித்து வருகின்றமை குறித்து சந்தோஷமாக இருக்கின்றது.உண்மையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான சர்வதேச வர்த்தகத்தின் தூர நோக்குக்கு எனது நன்றி, சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் அதிக தயாரிப்புகளை வாங்குபவரகளாக இந்தியாவும் பாக்கிஸ்தானும் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10மூ சத வீதம்; சார்க் பிராந்திய நாடுகளுக்கு இலங்கையினால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.என்றும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
பாக்கிஸ்தான் அதன் தற்போதைய வர்த்தக தொகுதிகளை ஓரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான இலக்கை அறிவித்ததனை தொடர்ந்து இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் இடையே இருதரப்பு வர்த்தகம் திடீர் ஊக்கம் பெற்றதுள்ளது. பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஓரு பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக இலக்கினை அடைய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்வோம்.
இலங்கையின் முதலீகள் மீது பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர் இவ்வர்த்தகர்களை நாம் வரவேற்பதோடு எப்போதும் எங்களது முழு உதவியை வழங்க தயாராக இருக்கிறோம்.
பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் கனரக கைத்தொழில்களில் முதலீடு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் இலங்கையை விரும்ப காரணம் அங்குள்ள கட்டமைப்பு வளாச்சி பெற்றிருப்பதாகும்.இதனால் அவாகள் 24 கோடி டொலர்களை முதலீடு செய்ய உள்ளார்கள் என பாக்கிஸ்தான்-இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டாராக் எம். கான் தெரிவித்திருந்தார்.
அடுத்து வரும் ஆண்டுகளில் நமது சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் வழங்கப்படுகின்ற அனைத்து வாய்ப்புகளையும் நாம் அதிகரிக்க வேண்டும் மற்றும் எங்கள் இருதரப்பு வர்த்தக அளவு அதிகரிக்க வேண்டும் என்றும் நம்புகிறேன். PSFTA ஒப்பந்தத்தின் கீழ் எமது ஏற்றுமதியாளர்கள் புதிய தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்வதற்கான தருணம் கிட்டியுள்ளது. தற்போது அவர்களிடம் 4800 மேற்பட்ட புதிய தயாரிப்புக்கள் உள்ளன என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.