இத்தாலியில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மாபெரும் ‘எக்ஸ்போ மிலோனோ 2015’ வர்த்தக சந்தையில் இலங்கை கலந்துகொள்ளவதுடன் தனது சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தயுள்ளது. இக்கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான இலங்கை ஏற்றுமதியாளர்கள் கலந்துக்கொண்டு தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துவர்.

இச்சர்வதேச சந்தையில் 20 மில்லியன் பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை தீர்மானம் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம் , இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை வர்த்தக திணைக்களம் மற்றும் ரோம் நகரில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து இலங்கையின் பங்குபற்றுதலுக்கு ஏற்பாடு செய்தனர்.

அரிசி, கொக்கோ, சாக்லேட், மசாலா, மற்றும் கிழங்கு வகைகள், கடல் உணவுப்பொருட்கள் , தெங்கு பொருட்கள், உலர் பழங்கள் , உலர் உணவுப்பொருட்கள் , வாசனை திரவியங்கள், கோப்பி, காய்கறிகள், பானங்கள், பேக்கரி பொருட்கள், சுகாதார பொருட்கள், மூலிகை , கரிம பொருட்கள், தானிய சார்ந்த பொருட்கள், இரத்தினகற்கள் ,நகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பன் இச்சந்தையின் கருப்பொருள்களாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வர்த்தக சந்தையில் கலந்து கொள்வது தொடர்பாக விசேட சந்திப்பு ஒன்று கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைசசர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.

‘ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களின் 100 நாள் நிகழ்ச்சியில் முக்கிய நோக்கமாக ஏற்றுமதி மேம்பாட்டு கவனம் செலுத்தப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில் எங்கள் எற்றுமதியினை 20 பில்லியன் அமெரிக்க டொலர் வரை ஈட்ட இலக்காகவுள்ளோம்.

‘எக்ஸ்போ மிலோனோ 2015′ ஒரு உலகளாவிய வர்த்தக சந்தையில் ஆகும். சுமார் 145 நாடுகள் இவ் வர்த்தக கண்காட்சியில் பங்குகேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இவ்வர்த்தக சந்தை மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை இத்தாலி நகரில் நடைபெரும்; இச்சந்தையில் சர்வதேச தரம் வாய்ந்த எமது பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும்’; என்று விசேட சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *