சுவிட்ஸ்லாந்து , வெளியுறவு அமைச்சின் விஜயமும் வர்த்தகம் , பொருளாதாரம் மற்றும் முதலீட்டு தூதுக்குழுவினரின் விஜயமும் சுவிச்சர்லாந்து, இலங்கையுடனான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவத்துவதோடு அரசியல் விருப்பங்கள் இருதரப்பு பரஸ்பர உறவுகளின் ஆர்வத்தினை தீவிரப்படுத்தவதற்காக அமையும் என இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான சுவிட்ஸ்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் வோக்கர் நிடர்கூன் அறிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை (02) பிற்பகல் கொழும்பு 02 இல் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல எகொடகே மற்றும் இலங்கை வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ். குமாரரட்ன ஆகியோர் இடம்பெற்றனர்.
தொடர்ந்து சுவிட்ஸ்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் கருத்து தெரிவிக்கையில:;
வெளியுறவு அமைச்சின் விஜயம் மற்றும் சுவிச்சர்லாந்து நாட்டு இருதரப்பு பொருளாதார உறவு பிரிவின் தலைவரும் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலத்தின் மத்திய கவுன்ஸிலின் தூதுவருமான லிவா லே வின் விஜயம் அரசியல் விருப்பங்கள் மற்றும் இருதரப்பு பரஸ்பர உறவுகளின் ஆர்வத்தினை தீவிரப்படுத்தவதற்கான நோக்கமாக இருக்கும்.
நம் இரு நாடுகளுக்குகிடையேயான உயர் மட்டத்திலான விஜயங்கள் இதுவரை பற்றாக்குறையாகவே இருந்தது. ஆனால் நாம் இப்போது இலங்கையுடனான நம் உறவுகளை தீவிரப்படுத்த முயல்கின்றோம.; இலங்கையுடன் சுவிட்ஸ்லாந்து , அதன் பொருளாதார உறவுகளை பலப்படுத்தம் நோக்குடன் மார்ச் மாதம் நடுப்பகுதியில் சுவிட்ஸ்லாந்;தின், வெளியுறவு அமைச்சின் வருகையை தொடர்ந்து மே மாதம் நடு பகுதியில் முன்னொருபோதுமில்லாத வகையில் சுவிச்சர்லாந்தின் உயர் ஆற்றல்மிக்க வர்த்தகம் , பொருளாதாரம் மற்றும் முதலீட்டு தூதுக்குழுவினரின் விஜயம் அமையும். பொருளியளாளர் என்ற ரீதியில் இலங்கையின் பொருளாதார உறவுகள் மீதும் முதலீடுகள் மீதும் அதிக சாத்தியக்கூறுகள் காணக்கூடியதாக இருக்கின்றது என நான் நம்புகிறேன். சுவிட்ஸ்லாந்து வர்த்தகர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம், சுவிஸ் பன்னாட்டு நிறுவனங்கள் பல தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்து இலங்கையில் முதலீடுகள் மேற்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸ் கருத்துக்களுக்கு அமைச்சர் பதியுதீன், பதிலளிகக்கையில் தெரிவித்தாவது: இது எங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில், சுவிஸ் பொருளாதார பிரதிநிதிகளை இலங்கைக்கு வரவேற்கிறேன். 2014 ஆம் ஆண்டு எங்கள் இருதரப்பு வர்த்தக 2 சத வீதம் அதிகரிப்புடன் 269 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்று உயர்ந்துள்ளது.எனவே; இதுவரை யாராலும் எதிர்பார்க்கப்படாத திறனை இரு தரப்பினராலும் ஆராயப்படலாம். 2014 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தக நடவடிக்கை சற்று உயர்ந்த போதிலும் இலங்கை தொடர்ந்து எதிர்மறையான வர்த்தக நிலுவைக்குட்பட்டு சுவிட்ஸ்லாந்;துக்கு ஆதரவாக இருந்தது. மாறாக 2014 ஆம் ஆண்டில் முதல் முறையாக மீண்டும் இலங்கை 10.17 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டு சுவிட்ஸ்லாந்துக்கு ஆதரவாகவும் மிதமாகவும் காணப்பட்டது.
இலங்கைக்கான சுவிட்ஸ்லாந்தின் முன்னணி இறக்குமதிகளாக தங்கம், மருந்து சிமெண்ட், மற்றும் வைரங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம.; அதே நேரத்தில் இலங்கையில் இருந்து சுவிட்ஸ்லாந்துகான சிறந்த ஏற்றுமதியாக மின் இயந்திர பாகங்கள், அச்சிடப்பட்ட சுற்றுகள், தங்கம், இரத்தினகற்கள் மற்றும் ஆடை காணப்பட்டன.பொருளாதார தூதுக்குழுவினரின் கொழும்புக்கான எதிர்வரும் விஜயம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும். உண்மையில், 2003 ஆம் ஆண்டில் இருந்து சுவிச்சர்லாந்தின் இலங்கைக்கான உதவிகள் பெருகியது.
ஏற்றுமதியை ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நோக்கமாக உள்ளதால் இரு நாடுகளுக்கிடையிலான இணைந்த பொருளாதார சந்திப்புக்கள் வெற்றிகரமான முயற்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஏற்றுமதியை விருத்திசெய்து முக்கியமாக புதிய வர்த்தகத்துறைகளை அறிமுகப்படுத்துவதற்க்கும்,தற்போதுள்ள வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இவ்வாரான விஜயம் பயனுள்ளதாக அமையும் என்று அமைச்சர் பதிலலிக்கும் போது தெரிவித்தார்.
எனது அமைச்சுடன் சுவிட்ஸ்லாந்;தினை சார்ந்த சர்வதேச வர்த்தக மையமும் உலக அறிவுசார் சொத்து அமைப்புமும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றன. சுவிச்சர்லாந்து முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் இங்கே முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். ; நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் அவர்களுக்கு எந்த நேரத்திலும் தேவைப்படும் உதவிகளை வழங்க முடியும்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அதே போன்று சீனாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தக உடன்படிக்கைகள் சுவிட்ஸ்லாந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை அளிக்கும்
2012 ஆம் ஆண்டில், இலங்கை சுவிட்ஸ்லாந்து இருந்து மொத்தமாக 14.,46 மில்லியன் அமெரிக்க டொலரினை நேரடி வெளிநாட்டு முதலீடாக பெற்றது. தற்போது இலங்கையில் முன்னணி சுவிட்ஸ்லாந்து முதலீடுகள் வரிசையில் நெஸ்லே ஹோல்சிம் (சிமெண்ட்), உள்ளன. 2013 ஆம் 2014 ஆம் ஆண்டுகளில்;, உலகின் தனியார் தனிநபர் சொத்துக்கள் பட்டியலில், சுவிட்ஸ்லாந்து முதலிடத்தை பிடித்ததுள்ள நிலையில் அமெரிக்க இரண்டாவது இடத்தில் உள்ளது.
இக்கலந்துரையாடலில் போது அமைச்சர் ரிஷாட்டும், சுவிட்ஸ்லாந்து தூதுவர் ஹெய்ன்ஸும் இலங்கைக்கான ஏனைய உதவி திட்டங்கள் குறித்து கலந்தாலோதித்தனர். (வீட்டுத் திட்டங்கள், குடிநீர், கிராம உள்கட்டமைப்புக்கான முதலீடு , சுனாமி மீள்கட்டுமானம்,மீன் வளர்ப்பு மற்றும் கடல்-களை கலாச்சாரம், சமரசம் மற்றும் பொறுப்புக்கூறல்