எமது மக்கள் அதிகமான தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறானதொரு நிலையிலும் தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள பொற்கேணியில் தெரிவித்தார்.
முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 31 வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முஸ்லிம் நிறுவனத்தின் பணிப்பாளர் பைஸர்கான் தொழிலதிபர் அல்-ஹாஜ் நவாஸ்,முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான்,முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வர்ன உட்பட பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் –
இந்த மக்களது மீள்குடியேற்றம் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது.அவ்வளவுக்கு பெரும் சவால்களுடன் காணப்படுகின்றதொன்றாகும்.எதை செய்ய முற்பட்டாலும் அதற்கு ஏதாவது ஒரு பக்கத்தில் இருந்து எதிர்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திய வீடமைப்பு திட்டம் வருவதற்கு முன்னரே முஸ்லிம் எய்ட்
நிறுவனத்தின் இந்த திட்டம் இங்கு வந்தது.இன்று இந்த மக்கள் தமக்கென உரித்தான ஒரு வீட்டில் இருக்கின்றதை பார்க்கின்ற போது மகிழ்ச்சியாகவுள்ளது.
இந்த வீட்டினை பெற்றுத்த தந்த அனைவருக்கும் நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனைகளை செய்யுங்கள்.அதுவே அந்த மக்களுக்கு நாம் நாம் செய்யும் பெரும் உதவியாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.