சமாதான சூழ்நிலையில் அதாவது யுத்தத்திற்குப் பின்னர் நாட்டை கட்டியெழுப்புதல், அபிவிருத்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இலங்கைக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க மலேசியா முன்வந்துள்ளது.
இலங்கைக்கும் மலேசியாவுக்கு இடையிலான உறவு மிகவும் பலமானது. இந்த இரு தரப்பு உறவுகளும்; தொடர்ந்தும் பேணப்படும் என்று இலங்கைக்கான மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் தெரிவித்தார்.
நேற்று (26) முற்பகல் கொழும்பு 02 இல் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றிலேயே உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: வடக்கிற்கான அதிவேக பாதை நிர்மானித்தல் உட்பட கைத்தொழில் துறை மற்றும் முதலீகள் தொடர்பில் நாம் அதிக நாட்டம் கொண்டுள்ளோம். அத்துடன் புதிய அரசாங்கத்தினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடக மக்களின் வாழ்க்கை நிலைகளின் ஸ்திரத்தன்மை பேணப்படவேண்டு;ம். வடக்கிற்கான அதிவேக பாதை நிர்மானித்தலுக்கான திட்டம் தொடர்பில் நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலோசித்துள்ளோம். மேலும் இலங்கையில் புதிய திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு தமது நாட்டு வர்த்தக சமூகமும் ஆவலாக இருக்கின்றனர் என்றார் உயர்ஸ்தானிகர்.

மலேசியாவை பொறுத்த மட்டில் இலங்கையுடனான உறவு மிகவும் பலமாக பேணப்படுகிறது. இலங்கைக்கும் மலேசியாவுக்குமான உறவு வலுவானதாக உள்ளது இந்த நிலையில் இருதரப்பு வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்த புதிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவும் கைத்தொழில் வளையங்களை உருவாக்க முன்வரவேண்டும் என அமைச்சர் ரிஷாட் மலேசியா இலங்கைகான மலேசிய உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீன் தலைமையிலன குழுவினரிடத்திலேயே இந்த வேண்டுகோளை விடுத்தார். தற்போது இலங்கை வர்த்தக முக்கியத்துவமிக்க இடமாக நோக்கப்படுவதால்,சிறந்த உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறியுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்னார்.
இச்சந்திப்பில் மலேசியா உயர்ஸ்தானிகர் அஸ்மி செய்னுதீனுடன் உயர் அதிகாரம் கொண்ட அரச அதிகாரிகள் இலங்கை சார்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட பலரும் இடம் பெற்றிருந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *