எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம்.இனவாதம் என்பனபற்றி சிந்தித்ததே இல்லை என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த இரண்டும் எமது மக்களின் முன்னேற்றத்திற்கு சாபக் கேடு எனவும் கூறினார்.
தான் பிறந்து,வளர்;ந்து,கல்வி கற்ற பாடசாலையான மன்னார் தாராபுரம் அல்மினா பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் ஷரிபுதீன் தலைமையில் இடம் பெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கான பரிசிள்களை வழங்கிய அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும்; பேசுகையில்-
என்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை மீட்டிப் பார்க்கின்ற சந்தர்ப்பமாக இன்றைய இந்த நிகழ்வை என்னால் பார்க்கமுடிகின்றது.ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை இந்த அரசியல் வலிந்து இழுத்தது.எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்,எமது அகதி முகாம் வாழ்க்கை என்பவைகளை ஒரு போதும் மறக்க முடியாது.இந்த சமூகத்திற்கு விடிவினை தேடிக் கொடுக்க வேண்டும் என்றால் அன்று இருந்த ஆயுதம் இந்த அரசியல் தான்,அல்லாஹ்வின் உதவியால் பாராளுமன்ற உறுப்பினராக,அமைச்சராக,கட்சியின் தலைவராக என பல உயர்வுகளை அல்லாஹ் தந்தான்.அதனைக் கொண்டு இந்த மக்களுக்கு என்னால் பணியாற்ற முடிந்தது.
இந்த பாடசாலையில் மட்டுமல்ல ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் எமது மாவட்டத்தின் முன் உதாரணமாக திகழ வேண்டும்,வறுமையினை ஒரு காரணமாக கொண்டு கல்வி கற்பதில் இருந்து பிள்ளைகளை திசை திருப்பி விடாதீர்கள் என்று பெற்றோர்களிடம் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.அதே போல் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய சிரான கல்வியினை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகின்றேன்.எங்கு ஒழுக்கமும்,பணிவும்இல்லையோ அங்கு நல்லதை எதிர்பார்க்க முடியாது.இவ்வாறு இது பரிபொனால் நாம் எந்த முயற்சியினை செய்தாலும் அதில் இறைவனின் பொருத்தம் இருக்காது என்பதை கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.
வுடக்கில் வாழம் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து இந்த பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுத் தந்துள்ளனர்.அவர்களுக்கு பணியாற்ற வேண்டியது எனது கடமை என்பதை உணர்ந்து செயற்பட்டுவருகின்றேன்.
எனது பாராளுமன்ற பிரவேசத்தினையடுத்து இந்த மாவட்டத்திற்கு எந்த அபிவிருத்தியினை அல்லது நியமனங்களை கொண்டு வந்து கொடுக்கும் போது முஸ்லிம்கள் என்று பார்த்து கொடுப்பதில்லை.அது தமிழ் மக்களுக்கும் சரியாக போய் சேர்ந்துள்ளதை இங்கு கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.என்னில் பிரதேசவாதம் இருந்திருந்தால் முதலில் அனைத்து அபிவிருத்திகளையும் இந்த தாராபுரத்தில் செய்திருப்போன்,மாந்தை,நானாட்டான்,முசலி,என்று அங்கெல்லாம் என்னால் செய்துள்ள அபிவிருத்திகளை பாரக்கின்ற போது,அந்த உண்மையினை நீங்கள் நன்கு அறிவீர்கள்.இன்று சிலர் எமது அரசியல் பதவிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சிந்திக்கின்றனர்.செயற்படுகின்றனர்.அண்மைய கிராமமொன்றில் உள்ள மக்களின் நன்மை கருதி பதையொன்றினை இடும் பணியினை அரம்பிக்கும் வகையில் அடிக்கல் நடப்பட்டது.இந்த கல்லினை அகற்றியுள்ளனர்.இந்த அரசியல் கலாசாரத்தின் மூலம் எதனை அவர்கள் அடைந்து கொள்ளப் போகின்றார்கள் என கேட்க விரும்புகின்றேன்.அந்த கிராமத்தை சேர்ந்த தாயொன்று அவர்களது வீடின்மை பிரச்சினைகள் தொடர்பில் என்னிடம் தெரிவி;த்தார்.இப்படிப்பட்டவர்கள் இருக்கின்ற போது அவர்களுக்கு உதவி செய்ய நாம்,எண்ணியிருக்கின்றோம் என்பதை இங்கு சொல்லிக் கொள்ளவிரும்புகின்றேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்,ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிலர் அபிவிருத்திகளை நிறுத்தினார்கள்,தையல் பயிற்சி நிலையங்களை மூடிவிட முயற்சித்தனர்.சில தினங்கள் எமது அரசியல் அதிகாரம் கையில் இல்லை என்பதால் நிரந்தரமாக அதனை நீங்கள் அகற்றினால் உங்களது நிலையினை நீங்கள் எண்ணிப்பாருங்கள்,இன்னும் இந்த தாராபுரத்தில் வாழும் குடும்பங்கள் வீடின்றி கஷ்டப்படுகின்றனர்.அவர்களுக்கான வீடுகளை ஏக காலத்தில் நிர்மாணித்துக் கொடுக்க தேவையான நடவடிக்கையினை நாம் எடுக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
வுடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ,இளைஞர் சேவை மன்ற மாகாண பணிப்பாளர் எம்.முனவ்வர் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்ததுடன்,மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கினார்.
அமைச்சரின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தியும்,வாழ்த்துப் பா இசைத்தும் தமது நன்றிகளை பாடசாலை நிர்வாகம் தெரிவித்தமையினை காணமுடிந்தது.