இலங்கைக்கும் பங்களாதேஷக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முன்னெடுக்கப்படுமானால் தற்போது காணப்படுகின்ற இருதரப்பு வர்த்தக அளவை ஏழு மடங்குகளாக அதிகரிக்க முடியும். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முன்னெடுப்பு தொடர்பில் இலங்கை சார்பில் சாத்தியக்கூறு அறிக்கையின் ஆய்வுகள் இப்போது நிறைவடைந்துள்ளது என கைத்தொழில்; மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன தெரிவித்தார்.;
கடந்த வாரம் கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக நிதி தொடர்பிலான செயலமர்வின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்துக்கொண்டு; உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச் செயலமர்வினை இலங்கை மற்றும் பங்காளதேஷக்கான சர்வதேச வர்த்தக சம்மேளங்கள் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். பங்காளதேஷின் சர்வதேச வர்த்தக சம்மேளத்தின தலைவர் மஹ்பூர் ரகுமான் தலைமையில் வங்கி மற்றும் தொழில்துறையினைச் சார்ந்த வலுவான 107; வர்த்தக பிரதிநிதிகள் பங்காளதேஷில் இருந்து இச் சர்வதேச நிகழ்வில் கலந்துக்கொண்டனர். இலங்கை சார்பில் வங்கி மற்றும் வர்த்தக சபைகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான சர்வதேச வணிக ஆணையத்தின் தலைவர் கீர்த்தி குணவர்தன , இலங்கைக்கான சர்வதேச வணிக ஆணையத்தின் இலங்கை முன்னால் தலைவர் திஸ்ஸ ஜயவீர , வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ். குமாரரட்ண , பங்களாதேஷக்கான சர்வதேச வணிக ஆணையத்தின பொது செயலாளர்; அட்டொர் ரகுமான், மற்றும் கொழும்பு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் நிறைவேற்று அதிகாரி ஜிம் மெக்காபே உட்பட முக்கிய சர்வதேச மற்றும் உள்நாட்டு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இச்செயலமர்வின் அங்குரார்ப்பண வைபவத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றும் தெரிவித்தாவது:
இதுவரையும் இல்லாத பெரிய எண்ணிக்கைக் கொண்ட வர்த்தக நிதி துறை சார்ந்த பிரதிநிதிகள் முதல் முறையாக பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கிடையே நிதி துறை ஒருங்கிணைப்பு கவனத்துடன் செய்யப்பட வேண்டும.;இலங்கைக்கும் பங்களாதேஷக்கும் இடையே கடந்த ஆண்டு டாக்காவில் இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான முதலாவது கூட்டு செயல்பாட்டுக் குழு கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வர்த்தக உடன்படிக்கையில் இலங்கைக்கும் பங்களாதேஷக்கும் இடையே காணப்படுகின்ற இருதரப்பு வர்த்தக உறவுகளை அடையாளம் காணுதல் மற்றும் மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பினை நிறுவுவதற்கான ஏற்பாடுகளின் சாத்தியவள ஆய்வு நிறைவு பெற்றுள்ளது. நிதி மற்றும் வங்கிகள் ஓன்று திரட்டு முயற்சிகள்; பரந்த ஆலோசனையுடன் செய்ய வேண்டும.;
2013 ஆம் ஆண்டில் பங்காளதேஷ் இலங்கையின் 25 ஆவது ஏற்றுமதி இலக்காக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக உறவு 2012 ஆம் ஆண்டு 83 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்து 2013 ஆம் ஆண்டு 67% சத வீதம் மூலம் 139 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. நாம் பரஸ்பர நலன்கள் ஆராய வேண்டும.; பாரியளவில் அடையப்படாத வர்த்தக சாத்தியங்கள் இருப்பதை இத்தரவுகள் காட்டுகிறது. நம் இரு நாடுகளும் ளுயுகுவுயுஇ யுPவுயு யனெ டீஐஆளுவுநுஊ ஆகிய அமைப்புக்களில் உறுப்பு அங்கத்தவர்கள். எனவே இது சம்பந்தமாக நாம் வேகமாக ஒருங்கிணைய முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். சமீப காலங்களில் பங்களாதேஷ் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த மிகப்பெரிய பிரதிநிதிகள் குழுவாக இக்குழு காணப்படுகின்றது . உயர் முக்கியத்துவம் கொண்ட பங்களாதேஷுடன் இலங்கை உறவுகள் பலப்படுத்த வேண்டும் என்பதில் நாம் மிகவும் தெளிவாக உள்ளோம். எனவே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த எங்கள் வர்த்தகம் மற்றும் வணிக ஒத்துழைப்பு முயற்சிகளின் இது ஒரு புதிய அத்தியாயம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
2013 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து பங்களாதேஷக்கான பிரதான ஏற்றுமதியாக பருத்தி, பின்னியபுடைவைகள், மற்றும் நொதி ஆகியன காணப்பட்டன மாறாக பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கான இறக்குமதி மருந்துவகைள் , ஆடைகள் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியன இருந்தன.
பங்காளதேஷின் சர்வதேச வர்த்தக சம்மேளத்தின தலைவர் மஹ்பூர் ரகுமான் தெரிவிக்கையில்:
இலங்கைக்கும் பங்களாதேஷக்கும் இடையே நெருங்கிய நாட்டம் காணப்படுகின்றது. உலக வர்த்தகத்தில் அதன் வர்த்தக அதிகரி;கூடிய திறனை தெற்காசியா கொண்டுள்ளது. இலங்கை-பங்களாதேஷ் இpடையே பொருளாதாரம் 2015 ஆம் ஆண்டளவில் விரிவுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இருதரப்பு வர்த்தகம் குறைந்த அளவில் காணப்பட்டாலும் அதனை 1 பில்லியன் அமெரிக்க டொலரை நோக்கிய சாத்தியமும் உள்ளது. எனவே நாம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை பெறுவதற்கு முயற்சி செய்கின்றோம். இத்தகைய வர்த்தக உடன்படிக்கையானது பங்களாதேஷக்கு ஆரம்பமாக காணப்படும் நிலையில் இது இலங்கைக்கு ஒற்றை வழிக்கான பங்களாதேஷ் , சீனா, இந்தியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு முக்கிய பிராந்திய பொருளாதாரத்திற்கான திறந்த பாதையாக காணப்படும.;