ஆசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது நாடான பிலிப்பைன்ஸ் இலங்கையுடனான வர்த்தகத்தை பெரியளவில் புதுப்பிக்க தயாராக உள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையே முதல் முறையாக நேரடி வழி விமான சேவை மற்றும் கடல் வர்த்தகம் சார்ந்த ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றிலேயே இந்த அழைப்பினை டாக்காவை மையமாக கொண்ட இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் விசன்டே விசென்சியோ டி பன்ட்லிலோ உறுதிப்படுத்தினார்.
கொழும்பு – மணிலாவுக்கான நேரடி விமான சேவை ஒத்துழைப்புக்கு நாம் ஆர்வமாக இருக்கின்றோம். ஆகாய மார்க்கமான சேவை துறையானது இருதரப்பினருக்கும் நேரடியாக பிரயாணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும.; ஸ்ரீPலங்கன் விமான நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க யோசனையை முன்வைக்கலாம். அதன் மூலம் அவர்களை நம் தேசத்திற்கு வரவேற்க முடியும். என பன்ட்லிலோ அச்சந்திப்பில் கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:
பிலிப்பைன்ஸ் ஒரு தீவாக காணப்படுவதால் நாம் இரட்டை ரக கட்டுமர படகுகளை சேவைக்கு பரவலாக பயன்படுத்துகின்றோம். அதேபோல் உள்ள10ர் கடல் மார்க்க சேவையினை பயன்படுத்தும் அடிப்படை அவற்றை ஆடம்பர அளவில் மேற்கொள்ள வேண்டும் என்பதால் இலங்கையின் படகு கட்டும் தொழில்நுட்பம் மற்றும்; இலங்கையுடனான கடல் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்க நேரம் நெருங்கியிருக்கின்றது. நம் நாட்டில் நவீன கட்டுமரம் மற்றும் படகுகளுக்கு வலுவான கேள்விகள் நிலவுவதால் இலங்கைக்கு அவ் விநியோகங்ளை ஆரம்பித்து எமக்கு வழங்க முடியும.; இதன்பொருட்டு இலங்கையின் படகு கட்டும் தொழில்நுட்பம் தொடர்பில் ஒரு நடைமுறை வழியில் நாம் வர்த்தக மேம்பாட்டுகளினை முன்னெடுத்தால்; அதற்கான ஏற்றுமதியினை பலப்படுத்த முடியும்.
பிலிப்பைன்ஸ்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் 40 மில்லியனாக நகர்ந்துள்ள நிலையில் நம்பிக்கைக்குரிய இருதரப்பு வர்த்தகத்தினை ஆரம்பிப்பதற்கு 1980 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தினை மீண்டும் செயல்படுத்துவது அவசியம்.
வர்த்தகதுறைகளுக்கான எமது ஒத்துழைப்புக்களை அடையாளம் காணும் பொருட்டு கொழும்பில் உள்ள எமது கௌன்ச10ல ஏப்ரல் மாதமளவில் மணிலாவுக்;கு வருகை தந்து எங்களது வர்த்தக சம்மேளன அதிகாரிகள் மற்றும்; உத்தியோகபூர்வ அதிகாரிகளை சந்திப்பார். அதனை தொடர்ந்து ஜூன் மாதமளவில் இலங்கை வர்த்தக பிரதிநிதிகளை மணிலாவுக்கு அழைத்துச்சொல்ல திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் எமது வர்த்தக பிரதிநிதி குழாம் மணிலாவில் இருந்து கொழும்புக்கு விஜயம் செய்வார்கள். அடுத்த கட்டமாக கௌன்ச10ல பிலிப்பைன்ஸ் வர்த்தக அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க முடியும.;
2014 ஆம் ஆண்டில் ஆசியாவில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் நாடான பிலிப்பைன்ஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9% சத வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. சீனாவிற்கு பின்னர் ஆசியா பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸின்; பொருளாதாரம் 2015 ஆம் ஆண்டில் 6.4% சத வீதம் கொண்ட மிக உயர்ந்த வளர்ச்சியினை எடடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்க்கிறது என்றார் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர்.
இச் சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவ்க்கையில்: இரு நாடுகளுக்கும் இடையே வருடாந்த மொத்த வர்த்தகம் சுமார் 35-40 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டங்களில் இருக்க வேண்டும். சமீப காலங்களாக எங்களுக்கிடையில் குறிப்பிடத்தக்க வர்த்தக முன்னேற்றம் காணக்கூடிதாக இருக்கவில்லை என்பதை நான் அறிந்துக்கொண்டுள்ளேன். இருநாடுகளுக்கிடையே குறைப்பாடாகவுள்ள வர்த்தக சாத்தியங்களை ஆராய நேரம் வந்துள்ளது. பல்வேறு துறைகளிலும் உங்கள் வர்த்தக சம்மேளனங்களின் உள்வாங்குவதற்கு நாம் அவர்கள் வரவேற்பதோடு இலங்கையில் கூட்டுபங்குதாரர் வேண்டும் என அழைப்பு விடுவிக்கின்றேன்.
அதன் பிறகு, அவர்களுக்கு வணிக இணைப்புக்களை மேற்கொள்வதற்கு நாங்கள் வசதிகளினை ஏற்படுத்திக்;கொடுப்;போம். நாம் 1980 ஆம் ஆண்டில்; நாம் பிலிப்பைன்ஸுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திட்டோம். ஆனால் அது செயலில் இல்லை. இந்த முக்கியமான உடன்படிக்கையினை நாங்கள் மீண்டும் செயல்படுத்த வேண்டும.; இருபுறமும் கொள்கை தயாரிப்பாள்கள் மற்றும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் கூட்டிணைந்து ஆழமான பரிசீலனை மற்றும் விவாதங்களை நடத்தி இவ் உடன்படிக்கையினை விரைவில் முன்னெடுக்கலாம். நியாயமான மற்றும் பரஸ்பர நலன்கள் அடிப்படையில் அபிவிருத்தி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு உட்பட நேரடி வர்த்தகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் முதலாவது வர்த்தக ஒப்பந்தம் 1980 ல் கையெழுத்திடப்பட்டது.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 40,19 மில்லியன் அடெரிக்க டொலர்களாக இருந்தது.; இலங்கையின் ஆடை ஏற்றுமதி பிலிப்பைஸுக்கான முக்கிய ஏற்றுமதியாக இருந்தது.; அது 2013 ஆம் ஆண்டில் ஆடை ஏற்றுமதியின் அதன் மொத்த தொகுதிகளின் 46மூ சத வீதமாக இருந்து பிலிப்பைஸுக்கான ஏனைய ஏற்றுமதி பொருட்களாக ரப்பர் டயர், கையுறைகள், தேயிலை, டிரெய்லர்கள் மற்றும் அரை டிரெய்லர்கள் மற்றும் இரசாயன மூலங்கள் முதலியன இருந்தன, 2013 இல் இலங்கைக்கான, பிலிப்பைன்ஸ் இருந்து முக்கிய இறக்குமதியாக தானியங்கள் காணப்பட்டன. அதனை தொடர்ந்து மரத்தால் செய்யப்படும் பொருட்கள் (மொத்த இறக்குமதயில் 29%) இருந்தது.
1980 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த உடன்பாடிக்கையினை மீண்டும் செயல்படுத்தினால் வர்த்தகத்தின் மீதான மேலும் பல முயற்சிகள் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தினுடான வர்த்தக (டீ2டீ) சந்திப்புக்களை முன்நோக்கி நகர்த்துவதற்கும் பலதும் கொண்ட துறைகளைச் சார்ந்த ஒத்துழைப்புகளுக்குமான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இரு நாடுகளும் உயர் தென்னை ஏற்றுமதியாளர்களை கொண்டவர்களாக இருக்கின்றோம் என எனது வர்த்தக பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ் குமாரரட்ன இங்கே எனக்கு சுட்டிக்காட்டினார். டாக்டர் புஞ்சிஹேவ போன்ற இலங்கை ஆராய்ச்சியாளர்கள் பிலிப்பைன்ஸ் விஜயம் செய்து பிலிப்பைன்ஸ் தென்னை வளர்ப்பு விவசாயிகளுடன் தென்னை வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நம்; தொழில்நுட்ப அறிவினை பகிர்ந்துள்ளனர். அத்துடன் கூட்டு தெங்கு அபிவிருத்தி முயற்சிகளுக்கு பரஸ்பர நலன்கள் பெற வாய்ப்புக்கள் எட்டப்பட்டுள்ளது. தென்னையுடன் வலுவான சாத்தியங்கள் கொண்ட ஆடை உற்பத்தி , மீன்பிடித்துறை மற்றும் படகுதுறைகளில் உலகிற்கே வலுவான விநிளோகஸ்தராக இலங்கை இருக்கின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார் அமைச்சர்.
இச்சந்திப்பினை அடுத்து விசன்டே விசென்சியோ டி பன்ட்லிலோ வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ் குமாரரட்ன உட்பட ஏனைய அதிகாரிகளுடன் அமைச்சர் பதியுதீன் இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *