சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் மூன்றாவது மிக பெரிய வர்த்தக பங்காளியான மாலைத்தீவு இலங்கையுடன் மீன் பிடி வர்த்தக செயற்பாட்டு உறவுகளை பலப்படுத்தவுள்ளது. எமது அரசாங்கம் கடல் மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறையினை விஸ்தரிக்க ஆர்வமாக உள்ளது. சாத்தியமான இவ் முயற்சிக்கு ஒரு பெரிய பங்குதாhராக இலங்கை எங்களுடன் செயற்பட முடியும் என்று நம்புகிறேன். இலங்கை கடல்வாழ் உயிரின சர்வதேச சந்தையில் ஒரு வலுவான உற்பத்தி திறனை கொண்டுள்ளது. ஆகவே ஒரு உயர் மதிப்புள்ள கடல்வாழ் உயிரினங்கள் அடிப்படையாக கொண்டு முதலாவது தெற்காசிய பிராந்திய கடல் மீன் வளர்ப்புக்கான எமது நம்பிக்கைக்குரிய கூட்டு முயற்சி திகழவுள்ளது.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைத்தந்த மாலைத்தீவின் நிதி மற்றும் திறைசேரி அமைச்சர் அப்துல்லா ஜிஹாத் , கைத்தொழில் ,வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை வர்த்க அமைச்சில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்: கடல் வெள்ளரி உயிரினம் வளர்ந்து வரும் சர்வதேச சந்தையை கொண்டுள்ளது. இலங்கை எமது திட்டத்தில் ஒரு பெரிய பங்குதாரக இருக்க முடியும். இரு நாடுகளும் கூட்டாக இணைந்து கடல் வெள்ளரியினை உற்பத்தி செய்து ஏற்றுமதி வருவாயை பெற முடியும். உப்புத்தன்மை, கடல் மண் தரம் காரணமாக கடல் வெள்ளரி இலங்கை கடல் நீரில் இருமடங்கு வேகமாக வளருகின்றது என எங்கள் ஆய்வுகள் தெரிக்கின்றன. இந்த மதிப்புமிக்க கடல் பொருட்கள் ஆராய்வதற்காகவும் நாம் இலங்கையுடன் கூட்டுத்தொழில் முயற்சிகளில் இணையவுள்ளோம். மன்னாரில் உள்ள கடல் மீன் வளர்ப்பு நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் ஏற்கனவே கடல் வெள்ளரி மீன் உற்பத்திக்கான திட்டமொன்றினை செய்து வருகின்றோம். இந்த திட்டத்தில் முடிவுகளில் இருந்து இது மிகவும் நம்பிக்கைக்குரிய முயற்சியாக காணப்படுகின்றது என்பதனை இங்கு தெரிவிக்க சந்தோஷமாக இருக்கின்றது. இரு நாடுகளினதும் இருதரப்பு துணிகர ஒத்துழைப்பு மூலம் ஏற்றுமதி அதிகரிக்க முடியும் எனவும் அப்துல்லா ஜிஹாத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, சார்க் நாடுகள் மத்தியில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கு பின்னர் மாலைதீவு இலங்கையின் மூன்றாவது மிக பெரிய வர்த்தக பங்காளியாக விளங்குகின்றது. இரு நாடுகளுக்கும் இடையே 2010 ஆம் ஆண்டு 50.64 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட மொத்த வர்த்தக மதிப்பு 2013 ஆம் ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சியை பதிவு செய்து 72 மில்லியனாக அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான மாலைதீவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டு 13.4மூ சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 69 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இறால் மற்றும் கடல் நண்டு வகைகளினை இலங்கை மாலைதீவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்தது (2013 ஆம் ஆண்டு இறால் 1.31 மில்லியன் அமெரிக்க டொலர் – நண்டு 0.65 மில்லியன் அமெரிக்க டொலர்) மாலைதீவில் இருந்து இலங்கைக்கான மீன் சார்ந்த இறக்குமதி 81% மாக இருந்தன.
இந்த சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசுகையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு வருகை தந்துள்ள மாலைதீவின் அதிகாரபூர்வ அதிகாரிகள் , அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரை எமது அரசாங்கத்தின் சார்பில் நாம் பெருமையுடன் வரவேற்கின்றோம். புதிய ஸ்திரமான அரசாங்கமொன்று இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான பல்தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும். உலகளவில் கடல் மீன் உற்பத்தி மற்றும் மீன்பிடித்துறை வர்த்தக நடவடிக்கைகள் கணிசமானளவு நடைபெறுகிறது.
மாலைதீவினுடைய கடல்வள உற்பத்திக்கான கூட்டு ஒத்துழைப்பு முயற்சிக்கு
எனது அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு தேவையான சகல உதவிகளையும் முன்னெடுக்கும.
இலங்கையுடன் கூட்டுத்தொழில் முயற்சிகளில் இணையும் பொருட்டு மதிப்புமிக்க கடல்வள ஆராய்ச்சியில் மாலைத்தீவு ஈடுபடுவது நல்ல விடயம். எனது தேர்தல் தொகுதியான மன்னாரில் மாலைதீவு உள்ள10ர் கடல் மீன் வளர்ப்பு நிறுவனத்துடன் இணைந்து கடல் வெள்ளரி மீன் உற்பத்திக்கான திட்டத்தின் முடிவுகள் நம்பிக்கைக்குரிய முயற்சியாக காணப்படுகின்றது என்பதனை மாலைத்தீவு அமைச்சர் அப்துல்லா ஜிஹாத் இங்கு தெரிவித்தமை எனக்கு சந்தோஷத்தினை ஏற்படுத்தியள்ளது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இலங்கை-மாலைதீவு கூட்டு ஆணைக்குழு முதலாவது கூட்டத்தில், மீன்பிடி துறையில் ஒத்துழைப்பு, மற்றும் ஏனைய துறைகள் தொடாபில் ஆழம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் பொருட்டு இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் மீள்பரிசீலனை சாதகமான பலனை தரும். அதேநேரத்தில், கூட்டு பொருளாதார ஆணைக்குழுவினூடாக நாம் ஒவ்வொரு துறையின் தொடர்புகளை எம்மால் பார்க்க முடியும் ! தொழில்நுட்பம் , கல்வி, கணக்கியல், மருத்துவ சேவைகள் மற்றும் கப்பல் / படகு பழுது போன்ற நிபுணத்துவம் பெற்ற துறைகளில் மாலைதீவு முதலீட்டாளர்கள் பலர் இலங்கையில் முதலீடு செய்துள்ளனர். மேலும் பல மாலைதீவு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு அழைக்கினறோம். எதிர்காலத்தில் வர்த்தக முதலீட்டுத் துறையில் இலங்கையில் மாலைதீவு முதலீட்டாளர்களை பெருமளவில் எதிர்பார்க்க முடியும். நம்ப முடியாத வலுவான சாத்தியங்களைக்கொண்ட மாலைத்தீவு – இலங்கை இருதரப்பு மொத்த வர்த்தக மதிப்பு தற்போது 72 மில்லியன் அமெரிக்க டொலாக காணப்படுகின்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான எமது இருதரப்பு வர்த்தகத்தினை முன்நோக்கிச்செல்வதற்கு வர்த்தக முதலீட்டு உறவுகள் உட்பட புதிய அணுகு முறைகளிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாட்டு உறவுகள் பலப்படுத்தப்படுவது முக்கியமாகும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் மாலைத்தீவின் நிதி மற்றும் திறைசேரி அமைச்சர் அப்துல்லா ஜிஹாத்துடன் மாலைத்தீவு வீடமைப்பு மாநில மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மொகமட் பாயிஸ் நிதி மற்றும் சுகாதார அமைச்சிகளின் அதிகாரபூர்வ அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் வந்திருந்தனர்.