KRISHNI IFHAM:
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளார்.
சமுகத்திற்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு இன்று முற்பகல் (22.12.2014) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர் அணியுடன் இணைந்துக்கொண்டு இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளார்.
சமுதாயத்திற்கு எந்வொரு உத்தரவாதமும் தராவிட்டால் நாம் வெளியேறுவோம் என்பதை அமைச்சர் ரிஷாட் அலரி கடந்த வாரம் (15-12-2014) மாளிகைக்குள்ளிருந்தே தைரியமாகவும் பகிரங்கமாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘புதிய அரசாங்கத்தின் மலர்ச்சி சிறுபான்மை மக்களுக்கு விடிவையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுக்கும். அடுத்த ஆண்டே அம் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் இனப்பிரச்சினைக்கான தீர்வு மைத்திரியால் எட்டப்படும். தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் ஒரு விடுதலை தேவைப்படுகின்றது. இன்று சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளையும் சலுகைகளையும் இழந்து தனித்து விட்டனர். அவற்றினை நிச்சயம் வென்றெடுக்க வேண்டும். அதற்கு எமது கட்சி உத்தரவாதம்’ என அமைச்சர் ரிஷாட் எதிர் அணியுடன் இணைந்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு இவ் உத்தரவாதத்தினை தெரிவித்தார்.
இது இவ்விதமிருக்க இலங்கையில் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலையில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றது என்று கூறப்பட்டு வரும் நிலையில் இன்றும் வடக்கு மக்கள் கைதிகளைப் போன்று வாழ்ந்து வருகின்றனர். யாழ்ப்பாண மக்கள் தங்களது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கான உரிமையை இழந்துள்ளனர் வடக்கு மக்கள் இராணுவத்தின் கைதிகளாக காணப்படுகின்றனர. வடக்கு மக்களினாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும்; விடுக்கப்பட்டு வரும் நியாயமான எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ் மக்களை புலிகளாகவும், தமிழ் புலம்பெயர் மக்களை சூழ்ச்சிகாரர்களாகவும் அரசாங்கம் நோக்குகின்றது.வடக்கு வாழ் மக்களை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதது. ஒவ்வொரு நகர்வும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு வாழ் மக்களின் கல்வி சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளுக்கு உரிய தீர்வுத் திட்டகள் முன்வைக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை என தமிழ் பேசும் மக்கள் குறியா இருக்கின்றார்கள்.
இந்நிலையில்; தெரியாத பேயோட வாழ்வதைவிட தெரிஞ்ஞ பேயோட வாழ்ந்திடலாமே……என்ற மனநிலை நிலையிலும் சிலர்; காணப்படுகின்றது.
அதேபோல நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்ததல் குறித்த முழுக்க முழுக்க முஸ்லிம் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான பிரபல முஸ்லிம் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கிம் ஆகியோரின் நிலைப்பாடு நேற்று வரை வெளியிடப்படவில்லை.ஆனால் இன்று அமைச்சர் ரிஷாட் நிலைப்பாடு வெளியாகிவிட்டது.அடுத்து என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்……
அமைச்சர் ரிஷாட்
பதவியில் இருந்தால் தான் தமிழ் பேசும் மக்களுக்கு உதவ முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்த அமைச்சர் ரிஷாட் அதனையும் தூக்கி எறிந்துவிட்டார்.
அமைச்சர் ரிஷாட் வடமாகாண அபிவிருத்தியிலும் மக்களின் பொது நலன்களிலும் அதிக கரிசனை காட்டினார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொருளாதார அமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரிடமிருந்து பல திட்டங்களை பெற்று அதனூடாக வடமாகாண அபிவிருத்திக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு உதவி செய்தார்கள் என்பது முற்றிலும் உண்மை.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கின்றாரோ அந்த தீர்மானத்திற்கு நாம் கட்டுப்பட்டு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிஷாட்; பதியுதீனிடம் மேற்படி உறுதி மொழியை வழங்கியுள்ளனர் என்பது தெரிந்த விடயமே!
மக்களால் உருவான தேசியத் தலைவரும் வயது குறைந்த அமைச்சர் பட்டியலில் அடங்கிய அமைச்சருமான ரிஷாட் (42) தனது 15 வருட பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையில் தம் மக்களின் அவலத்தை போக்க எப்படிப்பட்ட அமைச்சு தேவையோ அப்படிப்பட்ட அமைச்சை அவர் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.அந்த அடிப்படையில் அவருக்கு வன்னி புனர்வாழ்வு அமைச்சு அதன் பிறகு மீள்குடியேற்ற அமைச்சு வழங்கப்பட்டது.தற்போது வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்து அவரது சேவை தொடர்கிறது. மேற்படி மூன்று அமைச்சுகளின் ஊடாக தன்னால் முடிந்த அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார்;, செய்து கொண்டும் வருகிறார். தற்போது இருக்கின்ற முஸ்லிம் தலைமைகளுடன் ஒப்பிடுகையில் ரிசாட் பதியுதீனின் மக்கள் சேவை அபாரமானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிமை விட அமைச்சர் ரிஷாட் மீது முஸ்லிம் மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக நேரடி ஸ்தல ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவருகிறது.