செரண்டிப் நாளிதழ், செரண்டிப் இணைய வானொலி மற்றும் செரண்டிப் தொலைக்காட்சி சேவை என்பன இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கௌரவ அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம், உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், விஷேட அதிதியாக உலக முஸ்லிம் முன்னணியின் தலைவர் அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், இலங்கையில் உள்ள தூதுவராலயங்களின் தூதுவர்கள், பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனும் தலைமை உரையை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் நிகழ்த்தினர்.
இதன்போது இணைய தொலைக்காட்சி சேவையை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், இணைய வானொலி சேiவையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவும், பத்திரிகை வெளியீட்டினை உலக முஸ்லிம் முன்னணியின் தலைவர் அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் ஆகியோரும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைத்தனர்.