ஏற்றுமதி வருவாயின் அனுப்புதலுக்கான வருமான வரி 15% விலக்கப்ட்டுள்ளது!
பெலாரஸ் அரசின் முயற்சியால் வரி அறவிடும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை ஏற்றுமதியாளர்களின் நேரடி நன்மையின் நிமித்;தம் இலங்கைக்கான அவர்களது ஏற்றுமதி வருவாயின் அனுப்புதலுக்கான வருமான வரி 15% விலக்கப்ட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று(11) வியாழன் கட்டாரில் வைத்து அறிவித்துள்ளார்.
பெலாரஸ் குடியரசிற்கும் இலங்கைக்குமிடையே இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் வெற்றிகரமாக இடம்பெற்ற கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் சாதக முடிவு எட்டியதை தொடர்ந்தே இந்த சலுகைகள் முன்னெடுக்கப்பட்டன.
கட்டாருக்கு தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த சமயம் அமைச்சர் ரிஷாட், இலங்கை பெலாரஸ் நாடுகளுக்கு இடையே சமீபத்திய வர்த்தக முன்னேற்றங்கள் தொடர்பாக அங்கு பதில் அளிக்கும் போதே இந்த அறிவித்தலை விடுத்தார்.
இருதரப்புக்கான புதிய வர்த்தக முயற்சிகள் வரலாற்று உறவுகளினை பலப்படுத்தும் செயல்முறைகள், மேலும் முக்கியமாக, உலகின் புதிய ஒற்றை பொருளாதார சந்தையில் நேரடியாக அணுகுவதற்கு வழிமுறைகள் என பல சாதகாமான முடிவுகள் விரைவில் முன்னெடுக்கப்படும்; என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை பரஸ்பர மரியாதை அடிப்படையில் இலங்கையும் பெலாரஸ}ம் பல ஆண்டுகளாக சுமூகமான உறவுகள் அனுபவித்து வருகின்றனர் .
எனவே பெலாரசும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய புதிய ஒற்றை சந்தைக்கான முதல் நுழைவாயில் ஆகும்.
2013 ஆம் ஆண்டில் இலங்கையின் 231 மொத்த ஏற்றுமதி; இலக்கு வரிசைகளில் பெலாரஸ், 77 வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பெலாரஸ் குடியரசிற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதி தேயிலையாகும்.இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2012 ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அத்துடன் அதே ஆண்டில் பெலாரஸிற்கான மொத்த ஏற்றுமதி 94சத வீதமாகும்.
இருதரப்பு வர்த்தகத்தினை பொறுத்தவரை 2013 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே மொத்த வர்த்தகம் 14.24 மில்லியன் அமெரிக்க் டொலர்கள் இருந்தது.