தெற்காசியாவினை உள்ளடக்கிய இலங்கையின் அலங்கார மீன் வர்த்தக மாநாடு இம்முறை முதல் தடவையாக நாளை கொழும்பில் இடம்பெறும். ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த மாநாடு நாளையும் (10) நாளை மறுநாளும் (11) கொழும்பு கலதாரியில் ஹோட்டலில் நடைபெறும். தெற்காசியாவின் மீன் விற்பனைக்கான அலங்கார மாநாட்டுக்கு தெற்காசியாவின் அனைத்து வர்த்தக பொருளாதார மேதாவிகளும் இணைந்து ஓர் வர்த்தக பொருளாதார கலந்துரையாடலொன்றினையும் மேற்கொள்ளவுள்ளனர்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் சர்வதேச அலங்கார மீன் வளர்ப்பு துறையின் தலைவர் டாக்டர். ஜெறாலட் பாஸ்லீரும் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்துக்கொள்வர்.
மீன் உற்பத்தி பல தசாப்த காலம் தொட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இது கைத்தொழிலாளாக வளர்ச்சி அடைந்தது கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியிலாகும். கடல் மீன்பிடி தொழிலில் பெற்றுக் கொள்ளப்படும் முறைமையானது பொருளாதார ரீதியாக இலாபம் பெறக் கூடியதாகும்.அதேநேரம் அலங்கார மீன் வளர்ப்பு, இலங்கையர்களாகிய எமக்கு ஒரு புதிதான அம்சம் அல்ல. இது நாடு முழுவதும் பொதுவாக நடைமுறையில் காணப்படுகின்ற வீட்டு வளர்ப்பு பொழுதுபோக்காக காணப்படுகின்றது. மேலும் இலங்கையானது ஒரு வரலாற்று மீன்பிடி பாரம்பரியத்தினை கொண்டுள்ளதுடன் அது நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது. எனவே வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், உணவு பாதுகாப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய் அடிப்படையில், அலங்கார மீன் உட்பட மீன்வளர்ப்பு துறையானது பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
உண்மையில், இலங்கையில் 90 வகையான, நன்னீர் மீன் காணப்படுகின்றது. இதில் 50 வகையானவை இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றமை நன்கு தெரிந்த விடயமாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பான தொலை நோக்கின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அலங்கார மீன் தொழில் முனைவோருக்கு சர்வதேச சந்தைகளில் அணுகுவதற்கான பாதுகாப்பான புதிய தொழில்நுட்பங்களுடன் தகவல் மற்றும் சலுகைகள் வழங்குதற்கு அரசு தனது முழு முயற்சியினையும் கொண்டுள்ளது. உண்மையில் 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் மீன்வளர்ப்பினை பாதுகாக்க இதற்கு முன் நிகழ்ந்திராத முயற்சிகளினை முன்வைத்துள்ளார். இந்த முயற்சி கிட்டத்தட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக எட்டப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வரவுசெலவுத்திட்டத்தின் முயற்சிகள் மத்தியில் எங்கள் மீன்வளர்ப்பினை பாதுகாக்க, மொத்த மீன் உற்பத்தியில்; உள்நாட்டு மீன் உற்பத்தியை 20% அதிகரித்தல்,சிறிய நடுத்தர தொழில் முனைவோருக்கு உதவுதற்கான கடன் திட்டம். அவர்களின்; மீன் உற்பத்தி பண்ணைகள் விருத்தி செய்யவும் 1000 உள்நாட்டு மீன் விவசாய கிராமங்களில் உருவாக்கவும் நாரா (தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாம்) மீன் வளர்ப்பு மையங்கள் விரிவாக்கவும் 1.5 மில்லியன அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. மற்றும் அலங்கார மீன் ஏற்றுமதியினை விருத்திசெய்ய 380,000 மில்லியன் அமெரிக்க டொலரும் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
இதேவேளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுசரனையில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஆறு அலங்கார மீன் வளர்ப்பு ஊக்குவிப்புக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நன்னீர், கடல் நீர், மற்றும் உவர் நீரில், வரையிலான பலவிதமான அலங்கார மீன்களை இலங்கை வழங்க கூடியதாக உள்ளது.
இலங்கையில் வழக்கமான 40 ஏற்றுமதி நிறுவனங்கள், 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட உலக சந்தையில், 2.7 சதவீதம் பங்குகளினை வெற்றிகரமாக பெற்றுள்ளது.
இலங்கையின் வருடாந்த அலங்கார மீன் ஏற்றுமதி 41 சத வீதமாக அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அலங்கார மீன்களினை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ் ஏற்றுமதியானது 41 சத வீத ஒரு வலுவான அதிகரிப்பினை காட்டியுள்ளது.
நம்முடைய முதல் ஐந்து அலங்கார மீன்களினை பெற்றுக்கொள்பவர்களாக அமெரிக்க, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.அத்துடன் எங்கள் உற்பத்திக்கான முக்கியமான நம்பிக்கைக்குரிய புதிய உலக சந்தைகள் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டன. இலாபகரமான மற்றும் நம்பிக்கைக்குரிய புதிய சந்தைகள் மத்திய கிழக்கு நாடுகளிருந்து வந்தன. கட்டார், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்தே 2013 ஆம் ஆண்டு;, முதல் முறையாக எங்கள் அலங்கார மீன்;களுக்கான அவர்களது வலுவான கோரிக்கை அதிகரித்தது. 2013 ஆம் ஆண்டில், ஏனைய புதிய நம்பிக்கைக்குரிய, சந்தைகளாக சுவிச்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் தைவான் இருந்தன. கடந்த வருடம் 17 இலங்கை நிறுவனங்கள், சிங்கப்பூரில் இடம்பெற்ற சர்வதேச அலங்கார மீன் நிகழ்வில் மிக வெற்றகரமாக பங்கேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் அலங்கார மீன் ஏற்றுமதி உறுதியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
மொத்தம் 33 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புள்ள உலக அலங்கார மீன் சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 0.8 சதவீதம். சிறிய நாடான இலங்கையின் பங்கு 8 சதவீதம். எனவே இந்தியாவின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. தற்போது அலங்கார மீன் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ள இலங்கையை இந்தியா முன்மாதிரியாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.