உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே லங்கா இலங்கையிலும் தனது வர்த்தக நடவடிக்கைகளில் உச்ச நிலையில் இருக்கின்ற போதிலும் நாம் மிகவும் அவதானமாகவும் நிதானமானமாகவும் இருக்க வேண்டும். இலங்கையில்நாம் திடமான சந்தை வளர்ச்சினை எதிர்பார்கின்ற நிலையில் இங்கு தொடர்ந்து முதலீடுகளினையும் விரிவாக்கங்களினையும் மேற்கொண்டு வருகின்றோம். இதேவேளை எதிர்வரும் முதலீட்டு மதிப்புகள் குறித்தான விடயங்களினை தற்போது முன்வைக்கவில்லை ஆனால்; வளர்ச்சிக்கான பல திட்டங்களை நாம் வகுத்து வருகின்றோம. நெஸ்லே உலகளாவிய தகவலின்படி 103 .4 மில்லியன் அமெரிக்க டொலர் விற்பனையில் நிகர இலாபம் 11.9 மில்லியன் அமெரிக்க டொலராக பதியப்பட்டுள்ளது என சுவிஸ் இனை மையமாக கொண்டு இயங்கும் நெஸ்லே பூகோள நிறுவனத்தின் ,இரண்டாவது கட்டளை அதிகாரியும் நெஸ்லே ஆசியா , ஓசியானியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு மண்டல நாடுகளின் நிறைவேற்று துணை தலைவருமான நந்து நந்தகிஷோர்; தெரிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பு 10 இல் அமைந்துள்ள நெஸ்லே லங்கா பிஎல்சி அதன் கட்டிட வளாக தொகுதியில் முதல் முறையாக புதிய சில்லறை விற்பனை நிலையம் ஒன்றினை திறந்து வைத்தது. மேற்படி இந்த நிலையத்தின் அங்குராப்பண வைபத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே நந்தகிஷோர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த புதிய சில்லறை விற்பனை நிலையத்தினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் தெரிவித்ததாவது.
நெஸ்லே லங்கா பிஎல்சியின் புதிய சில்லறை விற்பனை நிலைய தொழில்நுட்ப வெளிபாடானது முன்மாதிரி தொடர் வியாபார கடைகள், தேநீர் கடை மற்றும் சில்லறை விற்பனை பொருட்கள் முழுக்க அடங்கிய தொடர் கடைகளாகவே காணபடுகிறது. இதன் நடைமுறை தொழில் பணியானது ‘துரித விற்பனை நுகர்வு பொருட்களுக்கான’ விநியோகஸ்தர்கள் இ நுகர்வோர்கள்;; மற்றும் கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சிக்கு தூண்டுதாலாக இருப்பதுடன் நுகர்வோர் மீதான நடத்தைகளுக்கு ஒரு பரீட்சார்த்த களமாக செயல்பட உதவுகிறது.
இதேவேளை பலதரப்பட்ட தயாரிப்பக்களின் மத்தியில் ‘துரித விற்பனை நுகர்வு பொருட்கள்’நெருக்கமாகவும் காணப்படுகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொடர்சியான வளர்ச்சி நடப்பு வருடம் 7மூ சத வீதம் எதிர்பார்க்கின்ற நிலையில் ‘துரித விற்பனை நுகர்வு பொருட்களின்’ வளர்ச்சி இதன் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எமது உட்கட்டமைப்பு உட்பட பல துறைகளின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை நாம் எதிர்பார்க்கின்றோம்.
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் 6748 பாரிய பலசரக்கு தொகுதி கடைகளின் 22மூ சதவீத பங்களிப்பும் நாடாளவிய ரீதியில் அமைந்துள்ள 13000 தேநீர் கடைகளின் முலம் பெறப்படுகின்ற 5 மூ சதவீத பங்களிப்பும் அதன் வருடாந்ந தேசிய விற்பனைக்கு உட்பாய்ச்சப்படுகின்றது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் இந்த விநியோக வளைப்பின்னலின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்ந சாதனையாளர்களுக்கு இந்த நிகழ்வின் இறுதியில் அமைச்சர் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஏட்டியன் பெனட் (நிர்வாக இயக்குனர் நெஸ்லே இந்தியாலிமிடெட்) பந்துல எகடகொட (ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும்; நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டுறவு விவகாரம் மற்றும் தொடர்பாடல் துணை தலைவர்) உட்பட பல பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
நெஸ்லே லங்கா நிறுவனம் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வரலாற்றில் முதற் தடவையாக அதியுச்ச அளவாக ஐந்துமில்லியன் லீற்றர்களுக்கும் அதிகமான பாலைக் கொள்வனவு செய்திருந்ததுடன், இந்தவருடத்தில் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுக்கு நெஸ்லே லங்கா நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூபா 2.6 பில்லியன் தொகையை செலுத்தவும் வழிவகுத்துள்ளது.
இந்நிறுவனத்துக்கு உலகெங்கிலும் சொக்லேட், கோப்பி மற்றும் பால் உற்பத்திப் பொருட்களுக்கான 17 ஆய்வு மற்றும் அபிவிருத்திமையங்கள் உள்ளன என்றும் அவற்றின் ஆய்வுக்காக வருடாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கினறன.