நடப்பாண்டில் (ஜனவரி- ஆகஸ்ட்) நம் நாட்டின் ஏற்றுமதி 7.34 பில்லியன் அமெரிக்க டொலர் வலுவான அதிகரிப்பை பதிவுசெய்ததுடன் 14.03 சத வீத உயர்வையும் எட்டியுள்ளது. இது கடந்த வருடத்தை (2013) விட அதிகமாகும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சமீபத்திய இடைக்கால புள்ளி விபர தரவுகளின் அறிக்கையில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதத்திற்குள்; இந்த வலுவான வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எங்கள் ஏற்றுமதியாளர்களை நாம் வரவேற்க வேண்டும். இது 2020 ஆம் ஆண்டுக்கான 20 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கு வெற்றிக்கான ஒரு சமிக்ஞைசையாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் குறிக்கோளுக்கான வெற்றி இலக்குகள் தொடர்பில் சமீபத்திய அறிக்கைகளும் எங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கிறது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.
கடந்த வாரம் 25 ஆம் திகதி ஏற்றுமதி அபிவிருத்தி சபை வளாகத்தில் நூற்றுக்கும் அதிமான ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் பங்கேற்றுக்ககொண்ட ஐந்தாவது தேசிய ஏற்றுமதி சம்மேளன கருத்துக்கள அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்:
உண்மையில் இந்த ஆரோக்கியமான ஏற்றுமதி வளர்ச்சி போக்கிற்காக உந்துசக்தியாக செயற்பட்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன.;

2013 ஆண்டு (ஜனவரி-ஆகஸ்ட்) ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஏற்றுமதி 14.03 சத வீத அதிகரிப்புடன் 7.34 பில்லியன் அமெரிக்க டொலர் ஒரு வலுவான அதிகரிப்பை ஈட்டியது. மாதாந்த (ஜனவரி-ஜுலை2014) அடிப்படையிலும் 2.4 சத வீதம் அதிகரிப்புடன் 955 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 978 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ஏற்றுமதி அதிகரித்து வந்துள்ளது என்பதை கூறிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமீபத்திய இடைக்கால தரவுகளின் படி, (ஜனவரி-ஆகஸ்ட்) இந்த எற்றுமதிகள் மீpதான அதிகரிப்பு சகல துறைகளிலுமிருந்து ஈட்டப்பட்டது.
விவசாய பொருட்கள் 3.18மூ சத வீத அதிகரிப்புடன் 1.778 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. விவசாய உற்பத்தி பொருட்கள் 2.5மூ சத வீத அதிகரிப்புடன் 1.623 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. ஆடை உற்பத்திகள் 0.65மூ சத வீத அதிகரிப்புடன் 3.24 பில்லியன் அமெரிக்க டொலரையும் தொழில்துறை உற்பத்திகள் 0.91மூ சத வீத அதிகரிப்புடன் 5.343 பில்லியன் அமெரிக்க டொலரையும் தேயிலை 3.09மூ சத வீத அதிகரிப்புடன் 1.07 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. தேங்காய் ஏற்றுமதி 4.2மூ சத வீத அதிகரிப்புடன் 356 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. பிற ஏற்றுமதி பயிர்கள் 4.7மூ சத வீத அதிகரிப்புடன் 315 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. இதேவேளை சர்வதேச ரப்பர் விலை சரிவு காரணமாக, இயற்கை ரப்பர் ஏற்றுமதி சரிவை காட்டியது.
இதன்படி , தேயிலை உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகள் வழியாகவும் விவசாயம் பொருட்கள் , ஆடை , ஏற்றுமதி பயிர்கள் , தொழில்துறை உற்பத்திகள் மூலம் ஏற்றுமதிக்கு திருத்திகரமான பங்களிப்பு இருக்கின்றமை புள்ளி விவரங்களின் ஒப்புநோக்கு விடயங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.
இலங்கையின் ஏற்றுமதித்துறையானது, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் துரித வளர்ச்சியைக் கண்டதன் பின்னர், 2012 ஆம் ஆண்டில் ஏற்றுமதிச் சம்பாத்தியங்களில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டு பின்னடைவைக் கண்டது. உலகளாவிய சந்தைகளில் கேள்விகளில் காணப்பட்ட தடைகளும் உள்நாட்டில் வழங்கல்களில் காணப்பட்ட தடைகளும் இதற்கு ஏதுவாக அமைந்தன.
கடந்த வருடங்களில் ஏற்றுமதிகளில் காணப்பட்ட வீழ்ச்சியைக் கவனத்தில் எடுத்து, உலகளாவிய சந்தைப் போக்குகளை; எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பிலும் ஏற்றுமதித் துறையை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான உபாயங்களை உருவாக்குவது தொடர்பிலும் கருத்துக்களைப் பெறுவதற்காக கைத்தொழில், வர்த்தக அமைச்சுடனும் பிரதான ஏற்றுமதியாளர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டினுடைய உச்ச ஏற்றுமதியின் அங்கமாகவும் ஏற்றுமதி அபிவிருத்திக்கும் ஊக்குவிப்புக்கும் பொறுப்பான அரசாங்க நிறுவனம் என்ற வகையிலும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது, இலங்கையின் ஏற்றுமதித்துறையின் அபிவிருத்திக்கு மூன்று தசாப்தங்களாக பாரிய பங்காற்றியுள்ளது இப்போது அச்சபை 2020 ஆம் ஆண்டுக்கான 20 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கி உழைக்கின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதியாளர் கருத்துக்களம் நிகழ்ச்சி பட்டியலில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு பிரச்சினைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது. இந்த சாதகமான விளைவுகள் என் அமைச்சின் கீழ் உள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்றுக்கொண்டுள்ள அணுகுமுறையின் ஒரு முடிவு ஆகும். வேறுவிதமாக கூறினால் எமது கூட்டு உறுதிபாடுகள் மற்றும் முயற்சிகளின் முடிவாக உள்ளது என்று அமைச்சர் பதியுதீன் கூறினார்.
அரசு நிறுவனங்கள் மற்றும் சுங்க திணைக்களம்,திறைசேரி, முதலீட்டுச்சபை, மொரட்டுவை பல்கலைக்கழகம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, விவசாயம், கைத்தொழில் அபிவிருத்தி சபை, துறைமுக அதிகார சபை, மற்றும் செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களம்,உட்பட பல்வேறு நிறுவனங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கேள்விகளுக்கு விசாரணைகளுக்கும் பதில் அளிப்பதற்கு உடனிருந்தனர்.
மேற்படி இக்கூட்டதில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியமான பந்துல எஹொடகொட உட்பட பல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *