கட்டார்- இலங்கை கூட்டு பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் பரிசீலனை செய்து வருகின்றன. ஒப்பந்தத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கு வசதியாக கூட்டு குழுவினை அமைக்க இலங்கை ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வாரம் டோகஹ பொர்சீசன் ஹோட்டலில் நடைபெற்ற கட்டார்- இலங்கை கூட்டு பொருளாதார ஒத்துழைப்புக்கான முதலாவது ஆரம்ப அமர்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் ஆரம்ப அமர்வுகளில் கலந்துக்கொள்வதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் முக்கிய 10 பேரடங்கிய இலங்கை வர்த்தக துறையைச்சேர்ந்த வலுவான உயர் மட்ட மற்றும் அரச அதிகாரபூர்வ பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.
மேற்படி இவ் அமர்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:
இலங்கையின் 33 ஆவது இறக்குமதி பங்காளர் என்ற பெரிய வர்த்தக உறவைப் பேணும் நாடாக கட்டார் காணப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் 66 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது.
நாம் இப்போது 2012 ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை- கட்டார் இடையே முதல் கூட்டு குழு கூட்டத்தை கூட்;ட ஆர்வமாக உள்ளோம்.
இதன் மூலம் இலங்கை- கட்டார் இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் புதியதொரு திருப்பத்தோடு முதலீடுகள் அதிகரிக்கப்படுவதை மேலும் வலுப்படுத்தும் என்றார்.
கட்டார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின் ஜசிம் பின் மொஹம்மது அல்தானி; தெரிவிக்கையில்:
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கட்டார் உலக வர்ததக அமைப்புடன் இயற்கை வாயு முயற்சிக்கான பயணத்தினை நோக்கியுள்ள இலங்கையின் ஆதரவினை அணுகிள்ளதோடு இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களுக்கான தனது ஆதரவிற்கு சமிஞை காட்டியுள்ளது.
பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு பகுதிகளில் விரிவாக்கம் செய்வதற்கான ஒத்துழைப்பு இரு நாடுகள் மத்தியில் பெரியளவிலான சாத்தியங்கள் மற்றும் ஆர்வம் இருந்தும் , இவை அபிலாஷைகள் தன்னம்பிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. உலக வர்த்தக அமைப்பில் சமர்ப்பித்துள்ள எங்களுடைய இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுச்சூழல் பொருட்களின் பங்குகளுக்கான முயற்சிக்கு இலங்கையினடைய ஆதரவினை நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.
இவ் ஆரம்ப அமர்வுகளில் இரு நாட்டு அரச அதிகாரபூர்வ தலைவர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.