இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் : உலகில் உள்ள 1.7 பில்லியன் முஸ்லிம்களில் பல் துறைகளில் அதிக செல்வாக்கை செலுத்தும் முதல் 500 முஸ்லிம்களின் தெரிவில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தேசிய தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோர்தான் தலைமையகமாக கொண்டு இயங்கும் றோயல் இஸ்லாமிய கற்கை மையத்துக்கான ஆராய்ச்சி நிலையம் வெளியி்ட்டுள்ள தரப்படுத்தல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013/2014 ஆம் ஆண்டின் சிறந்த செல்வாக்குள்ள உலக நாடுகளில் உள்ள முஸ்லிம்களை ஆய்வுக்குட்படுத்தியதன் போது இலங்கையில் இருந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்வாங்கப்பட்டுள்ளமை இலங்கை்கு பெருமை சேர்த்துள்ளது.இவ்வாறு உலகலாவிய ரீதியில் சவூதி ஆரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அல் சவுத்,துயாய் நாட்டின் முடிக்குரிய இளவரசர் ஜெனரல் சேக் மஹம்மத் பின் செய்த் அல் நஹ்யான்,ஈரான் நாட்டின் ஆண்மீகத் தலைவர் ஆயத்துல்லா ஹாஜ் செய்த் அல் கொமெய்னி,,துருக்கிய பிரதமர் ரீசப் தையிப்,ஏர்டன்க்,பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்,டாக்டர் சாகிர் நாயக் போன்றவர்களும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.கடந்த 2010 ஆண்டின் தரப்படுத்தலில் பல் துறைகளில் இலங்கையில் இருந்து நீதியரசர் சலீம் மர்சூப்,ஜெஸீமா இஸ்மாயில்,அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை தலைவர் றிப்தி முப்தி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்அமைச்சர் றிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் குறிப்பாக 2008-2009 களில் இறுதி யுத்தத்தின் போது இடம் பெயர்ந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை பராமரித்து குறுகிய காலப்பகுதிக்குள் அவர்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுத்திருந்தமையினை சர்வதேசம் பாராட்டியிருந்தது.
அதே வேளை இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக தாம் வகிக்கும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சு பதவியினைக் கொண்டு வர்த்தக உலகில் இலங்கையின் சர்வதேச வர்த்தக உறவிற்கான புதிய அடித்தளத்தினை இட்டுவருகின்றமை சிலாகிக்க கூடியதொன்று.இலங்கையின் அரசியல் வராற்றில் உலகத்தரப்படுத்தல் வரிசையில் ஒரு அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளவாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.