எதிர்வரும் இலங்கை – சீனா ஒப்பந்தமானது 8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு குறையாத மாபெரும் உலக ஆடை வர்த்தகத்திற்கு இட்டுச்செல்லுவதோடு உலகில் பாரியளவிலான சேட் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ஒப்பந்தம் தொடர்பில் நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றோம். தீர்வையற்ற சந்தை அணுகலுக்கு சீனா இலங்கைக்கு மிகவும் ஒரு முக்கிய நாடாக திகழ்கின்றது. இது ஆடை பங்கீட்டு நிறுவனங்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் காணப்படும். இந்த தீர்வையற்ற சந்தை அணுகல் எங்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆசியாவில் இருந்து 30மூ மான எமது கணிசமான வருமானத்தினை கால்வின் கிளைன் பிராண்ட் மூலமாக பெற்றுக்கொள்கின்றோம் என நியூயோர்கினை மையமாக கொண்ட உலகிலேயே பாரியளவிலான சேட் தயாரிப்பு கூட்டுநிறுவனத்தின் (PVH) உலக விநியோக சங்கிலி நிறைவேற்று துணை தலைவர் மார்க் கிறின் கூறினார்.

கொழும்பு 3 அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடான சந்திப்பொன்றிலேயே மார்க் கிறின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடாந்து கூறுகையில்:

நியூயோர்க் PVH கூட்டுநிறுவனத்துடனான விவகாரங்கள் நல்லப்படியாக செயல்படுகின்றது. சமீபத்தில் நாங்கள் உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.இதனுடாக இலங்கையுடன் 80 மில்லயன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் நடைப்பெற்றது. உலக தர அடையாளம் கொண்ட உள்ளார்ந்த ஆடை தயாரிப்பான கால்வின் கிளைன் எங்களது வருவாய்க்கு மிகவும் முக்கிய பாத்திரமாக திகழ்கின்றது. இலங்கையின் பாரியளவில் ஆடை விநியோகத்தில் ஈடுபடும் MAS, Brandix, Jinadasa, and Hirdramani Group ஆகிய நிறுவனங்களோடு நாம் பணியாற்ற விரும்புகின்றோம்.

இலங்கையுடனான எங்களது வர்த்தக செயற்பாடுகளை நாம் மேலும் அதிகரிக்க வேண்டும். ஆடைதுறையில் இலங்கை மிகவும் உசச்நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக எனது அனுபவ ரீதியாக உள்ளார்ந்த ஆடைதுறையிலேயே சிறந்து வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து நாம் மூலங்களை பெற்றுக்கொள்கின்றோம். நான் இங்கே பார்த்த விஷயங்களில் ஒன்று இலங்கையின் ஆடைதுறையானது மற்றைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றது. இதனை கற்றுக்கொள்வதற்கு சகலவற்றையும் பின்பற்ற வேண்டிய ஒரு காரணம் MAS அதன் உள்ளார்ந்த ஆடைதுறையில் குறிப்பிடத்தக்க சிக்கன உற்பத்தி மாதிரியினை பயன்படுத்த தொடங்கியமையாகும். இலங்கையின் சிக்கன உற்பத்தி ஒருவேளை உலகிற்கே சிறந்தாக இருக்கும்.

இணக்க பதிவு, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு மற்றும் பேண்தகைமை , கார்பன் நடுநிலை தொழிற்சாலைகளின் வேலை போன்றே இலங்கையானது உலகிலேயே ஆடை உற்பத்தியில் ஒரு நிபுணத்துவம் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. ஏனைய பிராந்தியங்களிலுள்ள ஆடை தயாரிப்பாளர்களுடன் ஒப்பிடும் போது, இலங்கை முன்னோக்கி உள்ளது. இந்த தீர்வையற்ற சந்தை அணுகல் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆசியாவில் இருந்து 30மூ மான எமது கணிசமான வருமானத்தினை கால்வின் கிளைன் பிராண்ட் மூலமாக பெற்றுக்கொள்கின்றோம் சீனா சந்தையில் தீர்வையற்ற சந்தை அணுகல் கொண்ட இலங்கையில் உற்பத்தி நிலையம் வைத்திருப்பது உண்மையில எங்களுக்கு ஒரு உத்வேகம்.

PVH கூட்டுநிறுவனமானது உலகின் மிக பெரிய வாழ்க்கைமுறை கொண்ட ஆடை நிறுவனங்களில் ஒன்றாகும் என நியூயோர்க் பங்குச்சந்தை பட்டியல் படுத்தியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சேட் வழங்குனர் என்றும் கூறப்படுகிறது. உண்மையிலேயே Calvin Klein, Tommy Hilfiger, Van Heusen, IZOD, Bass, ARROW and Eagle ஆகிய பிராண்டுகள் கூடுதலாக அதன் வீட்டு தர அடையாளத்தினை கொண்டிருக்கின்றது. Pஏர் கூட்டுநிறுவனத்தின் தகவலின் படி 2013 ஆம் ஆண்டில் அது 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயினை முந்தைய கணிப்பினை விட அதிகமாக ஈட்டியுள்ளது. PVH கூட்டுநிறுவனம் உலகம் முழுவதிலும் 2035 விற்பனைக்கூடங்களை கொண்டிருக்கின்றது. இதில் 1025 ஐரோப்பாவில் உள்ளது.

இந்த சந்திப்பின் போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் சீனாவுடன் புதிய நிலைகளிலான இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பு இலக்கினை நாம் கொண்டுள்ளோம். இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கும். இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மீதான கூட்டு செயலாக்க ஆய்வுகள் நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நாம் இப்போது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த வரலாற்று உடன்படிக்கை மூலம் இலவச வரி சலுகைகளுக்கான பொருட்களில் ஆடை துறையினை நாம் எதிர்நோக்குகிறோம் என்பதை இங்கே தெரிவிக்க நான் மகிழ்ச்சி அடைகிறேன்! எதிர்வரும் இலங்கைக்ககான சீன பிரதமரின் முதல் விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ், சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாம் நோக்கமாக இருக்கின்றோம்.

இந்த வரலாற்று உடன்பாடிக்கையினுடாக எங்களது மூலோபாய மையமாக பொருந்தல் சக்தியை விரும்பும் Pஏர் போன்ற அந்நிய கூட்டுநிறுவனம் மட்டுமல்லாது பல உலக பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இலங்கை – சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2012 ஆம் ஆண்டு 2.67 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டில் 15.2 மூ ஆக உயர்வடைந்து 3.08 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 2012 ஆம் ஆண்டு 108.12 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்து 2013 ஆம் ஆண்டில் 12.49 மூ அதிகரிப்புடன் 122 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டியது. இலங்கையின் பொருட்கள் மீதான சீனாவின் பயண இலக்கு முதல் 20 ஏற்றுமதிகளுக்குள் காணப்படுகின்றது.

மேற்படி இந்த நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான பந்துல எகொடகே , வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ் குமாரரட்ண, பிராண்டிக்ஸ் மார்க்கட் வோட்ச் , பிராண்டிக்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ரகுராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *