இலங்கைக்கும் சீசெல்சுக்குமிடையிலான வர்த்தக செயற்பாடுகளை விஸ்தரிக்கும் பொருட்டு கூட்டு வர்த்தக குழுவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் சீசெல்சுக்கான நிதி, வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் பேயர் லாபோர்டெ க்குமிடையே உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இன்று காலை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம் பெற்றது.
இந்த புதிய ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையே பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும் அதேவேளை ஆபிரிக்க சந்தையை அணுகுவதற்கு இலங்கைக்கு ஒரு பாரிய வாய்ப்பும் காணப்படும்.