இலங்கை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக திகழ்;கின்றது என்று உலகளாவிய முதலீட்டு ஆலோசனை நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் இலங்கை முன்னர் என்றும் இல்லாத அளவிற்கு உரிமை மற்றும் வெளிப்படைத்தன்மையான வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்துள்ளது.
பிரான்ஸ் உயர்மட்ட வர்த்தக மற்றும் கட்டுமான முதலீட்டு பிரதிநிதி குழு சகிதம் இலங்கைக்கு உத்தயோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஆக்செஞ்ச சேவை நிறுவனத்தின் ஆலோசகர் மற்றும் வணிக ஆய்வாளருமான டொட்பி கிபூ கடந்த வாரம் கொழும்பில் 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: எங்களுக்கு தேவை தகவல்களை சரியான நேரத்தில் உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்துக்கொடுத்த அமைச்சர் பதியுதீன் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எமது நன்றி. ஆக்செஞ்ச சேவை நிறுவனம் , ஏற்கனவே இலங்கை பிராண்டிக்ஸ் (Brandix) நிறுவனத்துடன் பணிபுரிந்து வருகின்றது. எனவே எமக்கு உங்களின் தரம் தெரியும். இதுவரை நாம் பார்த்தவை என்ன வென்றால் , இலங்கை கற்றவர்களை 90மூ சத வீத அளவு வரை ஊக்குவிக்கின்றது. என்னுடைய நிறுவனத்திலும் மிக சிறந்த சில பணியாட்கள் இலங்கையர்கள். இது இலங்கையின் தரத்தை சான்று பகிர்கினறது. அதுமட்டுமல்ல இலங்கை வணிக செயல்முறைகளுக்கு ஒரு சிறந்த இடமாகவும் காணப்படுகின்றது. உலக ATM மெஷின் செயல்முறைகளைக் கொண்ட சர்வதேச வங்கிகளும் இங்கே செயற்படுகிறது. எதிர்காலத்தில் இலங்கை வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்று ஆக்செஞ்ச சேவை நிறுவனம் நம்புகின்றது. இந்த வாரத்திற்குள் இலங்கையில் எங்கே எப்படி எவ்வாறு முதலீடு செய்வது தொடர்பில் சரியான முடிவுக்கு நாம் வரவுள்ளோம் என்றார்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, பிரான்ஸுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக 2012 ஆம் ஆண்டில் 329.03 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் இது 2013 ஆம் ஆண்டில்; 8.25% சதவீத அதிகரிப்புடன் 320.78 மில்லியன் அமெரிக்க டொலர் பதிவு செய்யப்பட்டது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இச்சந்திப்பின் போது தெரிவித்தாவது:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரநோக்கு எண்ணக்கருவிற்கு எனது நன்றியினை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன் , நாம் இவ்வாண்டு 7.5% சத வீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினை எதிர்பார்கின்றோம். பல சர்வதேச முதலீட்டாளர்கள் இப்போது இலங்கை மீது ஆர்வத்தினை காட்டுகின்றார்கள். கடந்த ஆண்டு இலங்கை 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்தது. எனினும், பிரான்ஸ் மூலமான அன்னிய நேரடி முதலீடு திருப்திகரமான அளவில் இல்லை, எனவே இங்கு சமூகளித்துள்ள பிரான்ஸ் நிறுவனங்கள் இலங்கையில் தற்போது சாதகமான முதலீட்டு கொள்கைகள் மற்றும் உங்கள் வணிக சமூகத்தினருக்கு உகந்த சூழல் இங்கே இருப்பது பற்றிய செய்தியை எடுத்துரைக்க வேண்டுகொள் விடுவிக்கின்றோம.; அதே நேரம் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடனான வர்த்தக உடன்படிக்கள் மற்றும் சீனாவுடனான எதிர்வரும் வர்த்தக உடன்படிக்களினை கொண்டு ஆற்றல்களின் தோற்றங்கள்; இலங்கையினுள் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கு வழிகோலுகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ,குறிப்பாக முன்னுரிமையுள்ள சுற்றுலா போன்ற துறைகளுக்குள் உள்வாங்கும் போது அவர்களின் மதிப்புமிக்க முதலீடுகளுக்கு நூறு சதவீத பங்கு உரிமையை எங்கள் அரசாங்கம் அனுமதிக்கின்றது. வெளிநாட்டு முதலீடுகளுக்கு 100மூ லாபம் கொண்ட பாதுகாப்பு ரீதியான அரசியலமைப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படுகின்றது. உங்களுக்கு இது ஒரு வகையான வாய்ப்பு! கட்டடக்கலை சேவைகள், முதலீட்டு ஆலோசனை மற்றும் கட்டுமான தொடர்பான நடவடிக்கைகள் வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்று இங்கு சமூகமளித்துள்ளீகள. சுற்றுலா மற்றும் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி, கலப்பு அபிவிருத்தி திட்டங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகள், ஆடை துறை, ரப்பர் சார்ந்த தொழில்கள்,வணிக செயல்முறை தொழில்கள் ஆகியன உங்களுக்கு வலிமையான ஆற்றல்திறன் கொண்ட பிரிவுகள் என்பதை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எனும் போது அங்கு பெரும் தேவைகள் இருப்பதால் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில். , நீர் விநியோக திட்டங்களை கருத்தில் கொள்ள உங்களை ஊக்குவிக்கிறோம.; இரு நாடுகளின் வணிக சமூகங்கள் இடையே வர்த்தக தொடர்பு தற்போது போதுமான இல்லை என்று நான் மேலும் வலியுறுத்துகிறேன. எனவே நாம் எங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த கூடிய வழிவகைகளை ஆழமாக ஆராய வேண்டும்.
வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர் . டி. எஸ் குமாரரட்ண , இலங்கையின் முக்கிய மைய ஆற்றல்களினை விவரிக்கும் போது கருத்து தெரிவிக்கையில்: வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் துறைமுக கட்டமைப்பு வசதிகள் பிரான்ஸ் முதலீட்டாளர்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தும். அத்துடன் விரைவான வளர்ச்சி கண்ட கொழும்பு மற்றும் மாகம் ருனுணுபுர துறைமுகங்கள் 10 மில்லியன் கொள்கலன் தரிப்பிடங்களை விரைவில் ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர அனுர சிறிவர்தன், வர்த்தக திணைக்கள் அதிகாரிகள் , வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பிரான்ஸ் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.