இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இருதரப்பு வர்த்தகத்தினை அதிகரிக்க செய்யும்.குறிப்பாக இலங்கை ஏற்றுமதியாளர்கள் இது சாதகமாக அமையும்.
நாம் குறைந்த பட்சம் சலுகையுடன் கூடிய வர்த்தக ஒப்பந்தம் பரிசீலிக்க வேண்டும். வலுவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் மூலம் இன்று நம் ஏற்றுமதி சாதனையாக 130 பில்லியன் அமெரிக்க டொலரினை அடைந்துள்ளோம் என்றார் இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் டென் சின் தான்.
பிரியாவிடைபெற்று செல்லும் இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் டென் சின் தான் க்கு இன்று (07) ஏற்றுமதி அபிவிருத்தி சபை வளாகத்தில் அளிக்கப்பட்ட விசேட அழைப்பு வைபவத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வைபவத்தில் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் டென் சின் தான் அங்கு மேலும் குறிப்பிகையில்: வியட்னாமும் இலங்கையும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும், அவை இன்னும் அதன் முழுமையான ஆற்றல் வளத்தை அடையவில்லை என்றார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில் : ஆகஸ்;ட் 21 ஆம் திகதி வியட்னாமுடன் நாம் வர்த்தகம் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பிக்கவுள்ளோம். பேச்சுவார்த்தைகளின் இருநாடுகளுக்கிடையிலான வர்த்த உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் வர்தக துறையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்படும். மற்றும் இரு நாடுகளின் பலம் மற்றும் தேவைகள் தொடர்பில் வியட்னாமுயுடன் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்புகிறது என்றார் அமைச்சர் ரிஷாட்.
இலங்கை மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கிடையிலான 8 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2011 ஆம் ஆண்டு இறுதிபகுதியில் இரு நாட்டு ஜனாதிபதிகள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வியட்னாம் ஜனாதிபதி டிரோன்க் டன் சன்ங் இற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் இவ் ஒப்பந்தங்கள் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டன.
அரசியல், நிதி, கைத்தொழில், கல்வி, பெற்றோலியம், தொழில்நுட்பம் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய துறைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக 08 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டது.