சிறு, நடுத்தர நிறுவனங்களின் கைத்தொழில் துறையானது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய மைல்கல் ஆகும். ஆனால் இலங்கையின் ஒழுங்கு முறை மற்றும் சட்ட கட்டமைப்பு இவ் வியாபார அபிவிருத்திக்கு இடையூறாக உள்ளது. சில வியாபார நிறுவனங்கள் ஆரம்பிக்க வேண்டுமானால் அவர்கள் இலங்கையில் கிட்டத்தட்ட 29 அரசு நிறுவனங்களுடாக எண்ணற்ற காகித படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இது இவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையும்; இணைந்து முதல் முறையாக ஒமேகா என்றழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட முட்டைகளை இலங்கை நுகர்வோர்; சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வுஇ வர்த்தக அபிவிருத்தி சேவை வழங்குநர் விபரக்கொத்தினை ஒன்லைன் மூலம் ;பெற்றுக்கொள்ளல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி சேவையடங்கிய வழிக்காட்டல் நூல் வெளியீடு ஆகிய அங்கு மூன்று நிகழ்வுகளின் அங்குரார்பண வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை ஹோட்டல் கலதாரியில் இடம்பெற்றது. அவ்வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார.;
சிறிய, நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கு பல வசதிகளைச் செய்து கொடுக்கும் நடவடிக்கைககளில் ஈடுப்பட்டு வரும் அரசு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும்; கலந்தாலோசித்து தீர்வு காண்பதற்கான ஒரு கடமைப்பாடாகவும் எம்மை ஆழ்த்திவிட்டுள்ளது எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.
தற்போது சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவ்வைபவத்தில் கலந்துக்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகைஇ எனது அமைச்சும், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கையின் சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மும்மடங்குகளாக பங்காற்றியுள்ளன.
இதேவேளை சிறு நடுத்தர வியாபாரத்தின் ஒன்லைனின் முயற்சி எங்களின் பொருளாதாரத்தின் வாழ்வாதாரத்தினை பெரிதும் உயர்த்தவுள்ளது. ஒன்லைன் மூலமாக எமது சிறு நடுத்தர வியாபாரம் முதல் முறையாக இணைக்கப்படுவதால் உலக சந்தையில் சர்வதேச கொள்வனவாளர்கள் நேரடியாக இணைக்கப்படுகின்றனர். இந்த சிறு நடுத்தர வியாபார ஒன்லைன் முயற்சியானது 650,000க்கும் மேற்பட்ட சிறு நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புக்களின் தரவுத்தள தகவல் முறை ஒன்றிணைக்கின்றது.
எமது இந்த பொது, தனியார் ஒன்லைன் கூட்டுமுயற்சிக்கு பக்கதுணையாக இருந்த இலங்கை லங்கா பெல் நிறுவனத்தினரின் மதிப்புமிக்க கடப்பாட்டிற்கு எமது நன்றிகளினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எமது மூன்றாவது முயற்சிக்கான வெளியீடாக ஒமேகா என்றழைக்கப்படும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் விற்றமின் வளம் ஊட்டப்பட்ட முட்டையாகும். இயற்கை செயல்பாடு மூலம் கோழிக்கு ஆகாரத்தை வழங்கி இந்த முட்டைகள் ஏற்படுத்தப்படுகிறது.இந்த முட்டை தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஒரு வலுவான சுகாதார உணவு ஆகும்.
உத்தியோகபூர்வமாக ஆசியா, பசுபிக் நடவடிக்கைகளில் பொறுப்பாக ஈடுபடுபட்டு வரும் பலம்வாய்ந்த சுவிட்சர்லாந்து குளோபல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அவர்களின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை வந்திருந்த போது தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்து சுவிட்சர்லாந்து சிறு நடுத்தர நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களினை எதிர்பார்ப்பதாக அறிவித்தனர். இது எமது சிறு நடுத்தர வியாபாரத்தின் அங்கீகாரத்தினை படிப்டியாக அறிமுகப்படுத்துவதற்;கான பாரிய வாய்ப்பாகும்.
மகிந்த சிந்தனை தூர நோக்கிற்கு அமைவாக சிறுதொழில் முயற்சியாளர்களை நடுத்தர தொழில் முயற்சியாளர்களாக உயர்த்துவதற்கும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை பாரிய தொழில் முயற்சியாளர்களாக்குவதற்கும் உரிய அபிவிருத்தி உபாயங்களையும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை எமது சிறு நடுத்தர வியாபார கட்டமைப்பை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு சிறு நடுத்தர சமூகத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.