By:A.H.M.Boomudeen
வட மாகாண சபைக்கு மக்கள் வழங்கிய ஆணையை மதிக்கும் அதேநேரம் , நாடு பூராகவுமுள்ள மூவின மக்கள் மகிந்த சிந்தனைக்கு வழங்கிய ஆணையையும் நாம் மதிக்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் வடக்கு முதலாமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு மேலும் குறிப்பிட்டவை வருமாறு:

வட மாகாண முதலாமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றிய பொழுது அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றை குறிப்பிட்டார். அதனை வரவேற்கின்றேன். எனினும் அத்திட்டங்களை அமுல்ப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசுடன் பேச்சு நடத்தியே செய்ய வேண்டியுள்ளது.

வட மாகாண சபை தேர்தலின் போது கணிசமான அளவு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். இதனை கௌரவிக்கின்றோம்;. இந்த மக்கள் ஆணையை மதிக்கின்றோம்.

அதேபோன்றுதான் , மகிந்த சிந்தனையை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நாடு பூராகவுள்ள மூவின மக்களில் அதி பெரும்பான்மையானோர் வாக்களித்து ஆணை வழங்கியுள்ளார்கள்.
அதாவது மகிந்த சிந்தனையை இந்த மக்கள் ஏற்றுள்ளார்கள். இதனையும் நாம் மதிக்க வேண்டும் , கௌரவிக்க வேண்டும்.

வன்னி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக ஒருங்கிணைபபுக் குழுத் தலைவராக தான் செயற்படுவது தொடர்பாக முதலமைச்சர் இங்கு கருத்து வெளியிட்டார். நாடு பூராகவுமுள்ள பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களாக எம.;பிக்களும் அமைச்சர்ககளுமே உள்ளனர்.

எனினும் வன்னி மாவட்டத்தின் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக வடக்கின் மாகாண அமைச்சர்களையும் வடக்கின் ஏனைய எம்.பிக்ககையும் நியமனம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் நீங்கள் கோரிக்கை முன்வைத்;து அதனை ஜனாதிபதி அமுல்படுத்தினால் நிச்சயமாக அதனையும் சந்தேசமாகவும் மகிழ்சியுடனும் ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்.

வன்னி மாவட்ட மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கும் மாவட்டத்தின் அபிவிருத்தியுமே எனது இலக்கு என்றார் அமைச்சர் ரிஷாட் பதியதீன்.

தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வரும் பொது மக்களிடம் அரச அதிகாரிகள் கட்சி வேறுபாடு காட்டுகின்றார்கள் என்ற கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டுக்கும் , மக்கள் பிரதிநிதிகளை அரச அதிகார்pகள் புறக்கணிக்கின்றார்கள் என்ற மாகாணசபை உறப்பினர் ஜயதிலகவினதும் குற்றச்சாட்டுக்களை செவிமடுத்த அமைச்சர் ரிஷாட் பதியதீன், பொதுமக்களிடம் அரச அதிகாரிகள் அரசியல் பேசக் கூடாது. அவ்வாறு செயற்படுவது பிழையான நடவடிக்கை. இனிமேல் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அது குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யமாறும் மக்களின் பிரதிநிதிகளே அரசியல்வாதிகள் என்பதை அரச அதிகாரிகள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கண்டிப்பாக உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *