2014 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு (ஜனவரி – ஜூன்) பகுதியில் இலங்கையின் ஏற்றுமதியானது முதல் முறையாக மும்மடங்கு வெற்றி இலக்கையடைந்துள்ளது. இந்த சாதனைக்காக அர்ப்பணிப்புடைய எங்கள் ஏற்றுமதியாளர்களை நாம் வரவேற்க வேண்டும. இது 2020 ஆம் ஆண்டுக்கான 20 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கு வெற்றிக்கான ஒரு சமிக்ஞைசையாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் குறிக்கோளுக்கான வெற்றி இலக்குகள் தொடர்பில் சமீபத்திய அறிக்கைகளும் எங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கிறது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.
தற்காலிக ஏற்றுமதி வருவாய் புள்ளி விவரங்களின் ஒப்புநோக்கு தொடர்புடைய விடயங்களை ஆராயுமுகமாக கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அவருடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்திய முக்கிய கூட்டதிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து அவ் அதிகாரிகள் மத்தியில் தெரிவிக்கையில்:
2014 ஆம் ஆண்டு இலங்கையினுடைய தற்காலிக ஏற்றுமதி வருவாயின் எண்கள் முதல் அரையாண்டு சம்பாத்தியத்தில் அதியுயர்வாக பதியப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வருடத்துடனான வருட வருவாய்களுடன் ஒப்பிடுகையில் அனைத்து முதல் அரையாண்டு சம்பாத்தியங்கள் அதிகரித்து வந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பகுதியில் ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதியானது ஒரு நிலையான போக்கில் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இலங்கையினுடைய தற்காலிக ஏற்றுமதி வருவாயின் முதல் அரையாண்டு சம்பாத்தியம் அதியுயர்வாக பதியப்பட்ட நிலையில் பெரியளவிலான 45% சத வீத அதிகரிப்புடன் ஒட்டுமொத்த சம்பாத்தியமாக 5410.4 மில்லியன் அமெரிக்க டொலர் காணப்பட்டது.அத்துடன் 2010 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் மட்டும் 3741 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாத்தியம் பதியப்பட்டது.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டில் முதல் அரையாண்டு வேளாண்மை ஏற்றுமதி அதிகூடிய 100% சத வீத பங்களிப்பினை வகித்தது. அத்துடன் வேளாண் ஏற்றுமதி (70மூ) , தொழில்துறை ஏற்றுமதி (69%), மீன்வளம் ஏற்றுமதி (65%), ஆடை உற்பத்தி (57%) மற்றும் தேயிலை (56%) பங்களிப்பினை வகித்தன.
சமீபத்திய அதிகரிப்புக்களை வருடத்துடன் வருடம் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் 4.66 பில்லியன் அமெரிக்க டொலர் காணப்பட்ட சம்பாத்தியம் 2014 ஆம் ஆண்டு அது 16.08% சத வீத வளர்ச்சியினை ஈட்டியது. இந்த வளர்ச்சிகளின் அடிப்படையில் முக்கிய துறைகளின் எழுச்சி;யினை பொறுத்தவரை, 2013 – 2014 ஆம் ஆண்டுகளில் மீன்பிடி துறை 24% சத வீதத்துடன் 140.22 மில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியினை ஈட்டியது. இதனை தொடர்ந்து, விவசாயம் 22% சத வீதத்துடன் 1303.2 மில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியினை ஈட்டியது ஆடை உற்பத்தி 20.40% சத வீதத்துடன் 2400,5 மில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியினை ஈட்டியது. பகுத்தறியப்படாத உற்பத்தி 17% சத வீதத்துடன் 18.81 அமெரிக்க டொலர் வளர்ச்சியினையும் பொருள் உற்பத்தி 14,15% சத வீதத்துடன் 1171.39 மில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியினையும் தொழில்துறை உற்பத்தி 14% சத வீதத்துடன் 3948.19 மில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியினையும் ஈட்டியது.
நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதியினை ஒப்பீட்டுகையில் , அதிக ஏற்றுமதி வளர்ச்சி கொண்ட நாடுகள் முறையே ஆப்பிரிக்க பிராந்தியம் (41%), ஐரோப்பிய ஒன்றியம் (19%) மத்திய கிழக்கு (19%), அமெரிக்கா (17%), மத்திய கிழக்கு ஐரோப்பா (15%), BRICS ( (14%), இலத்தீன் அமெரிக்கா (12%), தெற்காசியா (11%) மற்றும் பொதுநல வாய சுதந்திர நாடுகள் (6%) ஆகும். இங்கிலாந்து, அமெரிக்க, இத்தாலி, இந்தியா, மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் ஏற்றுமதி சந்தைகளில் முன்னணி காணப்படும் ஐந்து நாடுகள் ஆகும்.
மாத வளர்ச்சி அடிப்படையில், சமீபத்திய தற்காலிக ஏற்றுமதி வருவாய் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 882 மில்லியன் அமெரிக்க டொலராகவும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அது 12.09% சத வீத அதிகரிப்புடன் 988.63 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்புக்கள் 22,32%சத வீத வளர்ச்சியுடன் 444,39 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்து. தொடர்ந்து, தொழில்துறை உற்பத்தி 14,12% சத வீத வளர்ச்சியுடன் 714.68 மில்லியன் அமெரிக்க டொலருக்கு உயர்ந்து. விவசாய பொருட்கள், 10.26% சத வீத வளர்ச்சியுடன் 251.80 மில்லியனாகவும் பொருள் உற்பத்தி 2.36% சத வீத வளர்ச்சியுடன் 204.59 மில்லியனாகவும் மற்றும் பெற்ரோலிய பொருட்கள் 1.69%சத வீத வளர்ச்சியுடன் 30 மில்லியன் அமெரிக்க டொலருக்கு உயர்ந்து. விவசாய பொருட்களில் தேயிலை ஏற்றுமதி 9.06% சத வீத வளர்ச்சியுடன் 151.13 மில்லியனாகவும் தேங்காய், 5.01% சத வீத வளர்ச்சியுடன் 48,25 மில்லியனாகவும் மற்றைய ஏற்றுமதி பயிர்கள் அதாவது மசாலா, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றன 22,08% சத வீத வளர்ச்சியுடன் 49,48 மில்லியனாகவும் பொருள் உற்பத்திகளான மின்னணு, மின்சார மற்றும் இயந்திரங்கள் 3.13% சத வீத வளர்ச்சியுடன் 31 மில்லியனாகவும் காலணி உற்பத்தி 46% சத வீத வளர்ச்சியுடன் 9.03 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு உயர்ந்து.
இதன்படி , தேயிலை உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகள் வழியாகவும் விவசாயம் பொருட்கள் , ஆடை , ஏற்றுமதி பயிர்கள் , தொழில்துறை உற்பத்திகள் மூலம் ஏற்றுமதிக்கு திருத்திகரமான பங்களிப்பு இருக்கின்றமை புள்ளி விவரங்களின் ஒப்புநோக்கு விடயங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.
இலங்கையின் ஏற்றுமதித்துறையானது, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் துரித வளர்ச்சியைக் கண்டதன் பின்னர், 2012 ஆம் ஆண்டில் ஏற்றுமதிச் சம்பாத்தியங்களில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டு பின்னடைவைக் கண்டது. உலகளாவிய சந்தைகளில் கேள்விகளில் காணப்பட்ட தடைகளும் உள்நாட்டில் வழங்கல்களில் காணப்பட்ட தடைகளும் இதற்கு ஏதுவாக அமைந்தன.
கடந்த வருடத்தில் ஏற்றுமதிகளில் காணப்பட்ட வீழ்ச்சியைக் கவனத்தில் எடுத்து, உலகளாவிய சந்தைப் போக்குகளை; எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பிலும் ஏற்றுமதித் துறையை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான உபாயங்களை உருவாக்குவது தொடர்பிலும் கருத்துக்களைப் பெறுவதற்காக கைத்தொழில், வர்த்தக அமைச்சுடனும் பிரதான ஏற்றுமதியாளர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டது.
நாட்டினுடைய உச்ச ஏற்றுமதியின் அங்கமாகவும் ஏற்றுமதி அபிவிருத்திக்கும் ஊக்குவிப்புக்கும் பொறுப்பான அரசாங்க நிறுவனம் என்ற வகையிலும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது, இலங்கையின் ஏற்றுமதித்துறையின் அபிவிருத்திக்கு மூன்று தசாப்தங்களாக பாரிய பங்காற்றியுள்ளது இப்போது அச்சபை 2020 ஆம் ஆண்டுக்கான 20 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கி உழைக்கின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி இக்கூட்டதில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியமான பந்துல எஹொடகொட உட்பட பல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.