புரிந்துணர்வு ஒப்பந்தம் , நல்லிணக்க உடன்படிக்கைள் மற்றும் வர்த்தக கொள்கைகளை மறுசீலனை செய்யவதற்கான தேவைகள் இலங்கைக்கு இருக்கின்றது!
ஜப்பானுடான இருதரப்பு பொருளாதார தொடர்புகளை பலப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள ஜப்பான் பொருளாதாரம் , வர்த்தகம் மற்றும் கைத்தொழில் உப அமைச்சர் காயூயோஷி அக்கபா வை சந்தித்த போதே அமைச்சர் ரிஷாட் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற சந்திபொன்றின் போதே இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளையும் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது ஜப்பான் பொருளாதாரம் , வர்த்தகம் மற்றும் கைத்தொழில் உப அமைச்சர் காயூயோஷி அக்கபா கருத்து தெரிவிக்கையில் சமாதான சூழ்நிலையில் மிகக்குறுகிய காலத்தில் இலங்கை அரசாங்கம் மிக வேகமாக அபிவிருத்தி அடைந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்றும் இலங்கை தனது புரிந்துணர்வு ஒப்பந்தம் , நல்லிணக்க உடன்படிக்கைள் மற்றும் வர்த்தக கொள்கைகளை மறுசீலனை செய்யப்பட வேண்டிய தேவைகள் இருப்பதபாகவும் தெரிவித்தார்.