இம்மாதம் 18, 19, 20 ஆகிய மூன்று தினங்களில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் பொதியிடல் தொடர்பாக இடம்பெற்ற சர்வதேச கண்காட்சியில் (‘லங்காபெக் 2014’) தெற்காசிய நாடுகளின் காட்சிக் கூடங்களின் காட்சிகள் சிறப்பம்சமாக திகழ்ந்தது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதலாவதாக இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இலங்கை பொதியிடல் நிறுவனம் மற்றும் அதனது தொழில்நுட்பப் பிரிவான பொதியிடல் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘லங்காபெக் 2014’ கண்காட்சிக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு பக்க பலமாக இருந்தது. குறிப்பாக இலங்கையில் உள்ள உணவு வழங்கல் இணைப்புக்களை வெளிக் காட்டுவதிலும், முதலீட்டார்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இலங்கையில் தயாரிக்கப்படும் பதனிடப்பட்ட உணவு பொருட்களையும் அறிந்து கொள்வதற்குமான சந்தர்ப்பமாக இது அமைந்தது.
இலங்கையில் பொதியிடல் துறை வளர்ச்சி கண்டு வரும் இத்தருணத்தில் இந்த கண்காட்சி இடம்பெறுவது பாராட்டத்தக்கதாகும்.
13 ஆவது தடவையாகவும் இடம்பெற்ற இப் பொதியிடல் கண்காட்சி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உத்தியோகபூர்வ பிரதிநிதிகள மத்தியில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றுகையில் தெரிவித்தாவது:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கை கட்டமைப்பின் கீழ் இலங்கையின் பொதியிடல் துறை ஒரு முன்னுரிமை பகுதியாக கருதப்படுகிறது. தொழில்துறையாக விளங்கும் பொதியிடல் வேகமாக நகரும் ஒரு குறுக்கு வழி முறையை கொண்டுள்ளது.உண்மையில், உலக பொதியிடல் தொழில்துறையானது 2012 ஆம் ஆண்டில் 799 பில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியுள்ளது. இது 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியை எட்டும் தருனத்தில் 4மூ சத வீதம் வளர்ர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சமீபத்திய சர்வதேச பொதியிடல் ஆராய்ச்சி திட்டம் கூறுகிறது. உலக பொதியிடல் தொழிலதுறை விற்பனைகள் 2013 ஆம ஆண்டில் 824 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து காணப்பட்டது.
இலங்கையினுடைய சர்வதேச வர்த்தக வெற்றிக்கு பொதியிடல் முக்கியத்துவத்தில்; இரகசியம் ஏதுவும் இல்லை மேலும் சிறந்த பொதியிடல துறை வேகமாக மாறிவரும் சர்வதேச சந்தைகளில் எங்கள் தயாரிப்புகளின் தொடர் இருப்பை உறுதிசெய்யும். உண்மையில், நாம் ஏற்றுமதி ஆதரவு துறைக்கு ஒரு முன்னுரிமையாக இத் துறையினை அங்கீகரிக்ப்பதற்கான சரியான நேரம் வந்துள்ளது என்று நான் நம்புகிறேன். சர்வதேச நேரடி வெளிநாட்டு முதலீடு வரை பொதியிடல் துறையினை ஊக்குவிக்க வேண்டும் அப்படி ஊக்குவிப்பதனால் அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.
பொதியிடல் துறையானது , நீண்ட கால முதலீடு என்பதால் பசுமை துறையிலும்; முதலீடுகளினை முன்னோக்கி செல்வதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் உள்ளது. இதற்காக நாம்; சமீபத்திய தொழில்நுட்பங்களை பிரயோகப்படுத்து முடியும் என்று நான் நம்புகிறேன். தெற்காசியாவில் வீழ்ச்சி காணப்படும் ஒட்டுமொத்த பசுமை துறை முதலீடுகளினை இலங்கை மிக சிறப்பாக கொண்டு செல்லும் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன.; வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, 2013 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் அந்நிய நேரடி முதலீட்டினை கூடுதலான பெறும் நாடுகளில் இலங்கையை தவிர பசுமை துறை திட்டங்கள் ஒரு குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்தது. அந்த ஆண்டில், மொத்தம் தெற்காசியாவின் பசுமை துறை முதலீடுகள் இலங்கையை தவிர ஒரு வலுவான 38 சதவீத சரிவை காட்டிய போதும் அங்கு இலங்கையின் முதலீடுகள் ஒரு உயர் மட்டமாக 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
அரசாங்கத்தின் ஆதரவை வெளிப்படுத்த குறிப்பிட்ட ஏற்றுமதி பிரிவுகளில் பொதியிடல் துறை வகைப்பபடுத்தப்படவில்லை எனவே நாம் அதை குறிப்பிட்ட ஏற்றுமதி வளர்ச்சிக்கு சுட்டிக்காட்ட முடியாதுள்ளது. எனினும், பல தரப்பட்ட ஏற்றுமதி பொருட்களின் வளர்ச்சி;;க்கு பொதியிடல் துறை சாதகமான ஒரு அறிகுறியாகும் என்று நாம் நம்புகிறோம். இதற்கு அச்சு சார்ந்த ஏற்றுமதி ஒரு எடுத்துக்காட்டு ஆகும். 2009-2013 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில ;இலங்கையின் அச்சு சார்ந்த ஏற்றுமதி ஒரு வலுவான 25 சத வீத அதிகரிப்புடன் 101 மில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியுள்ளது என்பதனை நாம் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகின்றோம்.அத்துடன் பொதியிடல் துறைக்கு எமது அமைச்சின் ஆதரவு அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில இத்துறைக்கென அமெரிக்க டொலர் 42ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையினை நாம் செலவு செய்துள்ளோம். அதே ஆண்டில் 50 சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு தேசிய மட்டத்தில் பொதியிடல் தொடர்பான இரண்டு விழிப்புணர்வு திட்டங்களுக்கு உதவியுள்ளோம். 2013-2014 ஆம் ஆண்டுகளில் ,இலங்கை பொதியிடல் நிறுவனமும் அச்சு மற்றும் கிராபிக்ஸ் நிறுவனமும் இணைந்து ஓழுங்கு செய்த இலங்கை பொதியிடல் சான்றிதழ் பயிற்சிநெறிக்கென நாம் அமெரிக்க டொலர் 10 ஆயிரம் செலவு செய்தோம். அத்துடன் 15இ300 அமெரிக்க டொலருக்கு குறையாத தொகையினை இன்றைய பொதியிடல் நிகழ்வுகளுக்கு நாங்கள் ஆதரித்து வருகின்றோம்.
இந்த துறையின் மீது சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுவதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை ஒருங்கிணைப்பு வடிவமைப்பு பீடத்திற்கு இலவச கண்காட்சி கூடங்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம். இ;த்துறையில் முக்கிய ஆராய்ச்சிகளினை மேற்கொள்ள அபிவிருத்தி நிறுவனம், இலங்கை தரப்படுத்தல் நிறுவனம் , கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தேசிய சுத்த உற்பத்தி நிலையம் போன்ற நிறுவனங்களினை பட்டியல்படுத்தி அவ் நிறுவனங்களினூடாக வெற்றிகரமான முன்னெடுப்புக்களை எனது அமைச்சு எடுத்தள்ளது. 2013 ஆம் ஆண்டில் பொதியிடல் துறையை சேர்ந்த 15 பேர் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் 20 பேரை 2015 ஆம் ஆண்டில் மும்பையில் அமைந்துள்ள இந்திய பொதியிடல் பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு அனுப்ப திட்டமிட்டபபட்டுள்ளது. இதற்கான செலவு 15 ஆயிரம் அமெரிக்க டொலராகும் என அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
பொதியிடல் தொழில் துறைக்காக அரசாங்கத்தின் ஆதரவு பாராட்டதக்கது. தற்போது இலங்கையின் பொதியிடல் தொழில்துறைக்கு முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் தேவை.இத் துறையில் காணப்படுகின்ற முக்கியத்துவத்தை வெளிகாட்டுவதற்கு பசுமை துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டிற்கு அமைச்சர் பதியுதீன் அழைப்பு விடுவித்தமைக்கு நாங்கள் வரவேற்கிறோம். எங்களுக்கு வலுவான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை இதற்கு நான் மிகவும் ஆதரவாக இருப்பேன். பசுமை துறை முதலீடுகள் போன்றன எங்களுக்கு அவசியம.; இதற்காக சர்வதேச தொழில்நுட்பங்களை ஏற்படுத்த முடியும். மேலும், பல ஆண்டுகளாக எங்களுக்கு அரசாங்கம் மற்றும்; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வழங்கப்பட்ட மகத்தான ஆதரவுவை வரவேற்கின்றோம். இந்த மகத்தான ஆதரவு ஒரு சிறந்த வழிகாட்டியாக எங்களுக்கு உதவியது என்பதில் சந்தேகம் இல்லை என இவ்வைபவத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய இலங்கை பொதியிடல் துறை நிறுவனத்தின தலைவர்; ஜே.டி.சி.பெரேரா கூறினார்.
பொதியிடல் தொழில் துறையானது தேயிலை மற்றும் தெங்கு உற்பத்தி துறைகளுக்கு சமமான அளவுக்கு வளர்ந்து வருவதை காணமுடியும. லங்காபெக் 2014 கண்காட்சியானது இலங்கையின் பொதியிடல் துறையில் மறைந்திருக்கின்ற பரந்தளவான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகின்ற அதேவேளை, வளர்ச்சியடைந்து செல்கின்ற சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு புது வகையான சர்வதேச உற்பத்திகளையும் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வாக அமையும். வரவேற்கும் பண்புடைய வாடிக்கையாளர் தளத்திற்கு அதிமுன்னேற்றகரமான பொதியிடல் உபகரணங்கள் மற்றும் புதிய உற்பத்திகளின் வழங்குனர்கள் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை காட்சிப்படுத்துவதற்காக அவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு கேந்திர மையமாக கொழும்பு நகர் எப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இறக்குமதி செய்யப்படுகின்ற மூலப் பொருட்கள் மற்றும் பொதியிடல் உபகரணங்களில் முற்றுமுழுதாக தங்கியிருக்கும் நாடு என்ற வகையில் இலங்கையானது, கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அதிகமான ஏற்றுமதிப் பொருட்களில் உயர்தரமிக்க பொதியிடல் வடிவமைப்பு மற்றும் செயன்முறைகளை மேற்கொண்டதன் ஊடாக – தனது பொதியிடல்சார் மாற்றியமைத்தல், அதன்மூலம் ஏற்றுமதி உற்பத்திகள் போன்றவற்றுக்கு மேலும் பெறுமதியை சேர்க்கும் கலையில் பூரணத்துவமான ஆற்றலைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அநேகமாக தென்னாசியாவிலேயே பொதியிடல் துறையில் மிகவும் பழமைவாய்ந்த அமைப்பாக திகழ்கின்ற
இலங்கை பொதியிடல் நிறுவமானது, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மிகவும் மனம் வருந்தத்தக்க ஒரு நிலையில் காணப்பட்ட இலங்கையின் பொதியிடல் துறையின் தராதரத்தை இன்று காணப்படுகின்ற உயர் மட்டத்திலான போட்டிகரமிக்க நிலைக்கு மேம்பாடடையச் செய்த ஒரு பெருமைமிக்க வரலாற்றுக்கு சொந்தக்காரராக இருக்கின்றது. உள்நாட்டு பொதியிடல்சார் அபிவிருத்திகள் மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டும் ஊக்குவிப்புப் பிரசார கண்காட்சிகள், பொதியிடல் துறையில் அங்கம் வகிக்கின்ற பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சியில் ஆசிய பொதியிடல் சம்மேளனத்தின் அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த பொதியிடல் உள்ளீடுகள் மற்றும் இயந்திர சாதன விநியோகஸ்தர்களின் செயற்றிறன்மிக்க பங்குபற்றுதலை இலங்கை எதிர்பார்க்கின்றது. குறிப்பாக இலங்கையின் பொதியிடல் துறைக்கு இவ்வாறான பொருட்களை பெருமளவுக்கு விநியோகித்துவரும் இந்தியா,சீனா ஆகிய நாடுகள் மீது இவ்வகையான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றது. இவ்வருடம் நடைபெற்ற லங்காபெக் 2014 கண்காட்சியின் வெற்றி சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
இலங்கை பொதியிடல் நிறுவனம் 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1980களின் முற்பகுதியில் இருந்து கொழும்பில் நடாத்திவரும் பொதியிடல் கண்காட்சிகளின் ஊடாக, இந்நாட்டின் பொதியிடல் துறைசார் அபிவிருத்திகளை வெளியுலகுக்கு காட்சிப்படுத்துகின்ற உரிமையை நடைமுறையில் இந்த நிறுவகமே அனுபவித்து வருகின்றது. ஆசிய பொதியிடல் சம்மேளனத்தின் செயலாற்றல்மிக்க உறுப்பினரான
இலங்கை பொதியிடல் நிறுவனமானது, அங்கத்துவ நாடுகளான சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மூலப் பொருள் மற்றும் இயந்திர உற்பத்தியாளர்கள் லங்காபெக் 2014 கண்காட்சியில் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்கு ஊக்கமளிக்குமாறு மேற்படி நாடுகளிடம் கோரிக்கை விடுத்தது.