இலங்கை பொதியிடல் நிறுவகம் மற்றும் அதனது தொழில்நுட்பப் பிரிவான பொதியிடல் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட லங்காபெக் 2014 சர்வதேச கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவம் இனறு காலை உத்தியோக பூர்வமாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம்மாதம் 18 19 20 ஆகிய மூன்று தினங்களில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்; பொதியிடல் தொடர்பாக இடம்பெறும் இவ் சர்வதேச கண்காட்சியில் தெற்காசிய நாடுகளின் காட்சிக் கூடங்களும் அமைந்துள்ளமை சிறப்பம்சம்.
இக் கண்காட்சி 10 ஆவது தடவையாகவும் இடம்பெறுகின்றது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதலாவதாக இக்கண்காட்சி நடத்தப்பட்டது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும், விவசாய அமைச்சும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.
குறிப்பாக இலங்கையில் உள்ள உணவு வழங்கல் இணைப்புக்களை வெளிக் காட்டுவதிலும், முதலீட்டார்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இலங்கையில் தயாரிக்கப்படும் பதனிடப்பட்ட உணவு பொருட்களையும் அறிந்து கொள்வதற்குமான சந்தர்ப்பமாக இது அமையும்
இலங்கையில் பொதியிடல் துறை வளர்ச்சி கண்டு வரும் இத்தருணத்தில் இந்த கண்காட்சி இடம்பெறுவது பாராட்டத்தக்கதாகும்.