இலங்கைக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான வர்த்தக செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக ஜோர்தானிய தூதுவரான ஹஸன் அல் ஜவார்னெ தெரிவித்தார். ஜோர்தானுக்கான இலங்கையின் வர்த்தகம் அதிகரிக்கப்படவுள்;ள அதேசமயம் கூட்டு பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டிய அவசியம் எனவும் தெரிவித்தார்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள ஜோர்தானிய தூதுவர் ஹஸன் அல் ஜவார்னெ நேற்று (01) பிற்பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அவரது அலுவலகத்தில் சந்தித்தவேளையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள ஜோர்தானிய தூதுவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்தார்.
இச்சந்திப்பில் ஜோர்தானிய தூதுவர் தொடார்ந்து கருத்து தெரிவிக்கையில:;இலங்கைக்கும் ஜோர்தானுக்கும் இடையில் 1965 ஆம் ஆண்டு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்; கைச்சார்திடப்பட்டது ஆனால் முந்தைய ஒப்பந்தத்திற்கு; பதிலாக 2007 ஆம் ஆண்டு புதிய கூட்டு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஓன்று கைச்சார்திடப்பட்டது. 2007 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை மீண்டும் தீவிரமாக செயல்படுத்துவதற்கான நேரம் இருதரப்பினருக்கும் வந்துவிட்டது. சகல வர்த்தகம் தொடர்பிலான ஆலோசனைகள் , வர்த்தகதினூன வர்த்தகம் (டீ2டீ) , வர்த்தக விரிவாக்கம், மற்றும் வர்த்தக கண்காட்சிகள் என அனைத்து உள்ளிட்ட கருத்தக்களை வெளிப்படையாக பேசுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம.; 2008 ஆம் ஆண்டு கூட்டு ஆணைக்குழு கூட்டம் இறுதியாக கொழும்பில் நடைபெற்றது. அடுத்த கூட்டத்தொடரினை; ஜோர்தானில் நடத்துவதற்கு இலங்கைக்கு அழைப்பினை மிகவும் சந்தோஷமாக விடுவிக்கின்றேன் என்றார்.
இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் கருத்து தெரிவிக்கையில:; எமது இச்சந்திப்பானது இருதரப்பு நல்லுறவுகளை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். வர்த்தக திணைக்களத்தின் படி, ஜோர்தானுக்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக கணிசமாக உயர்ந்து வருகிறது. 2002 ஆம் ஆண்டில் 26.19 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மொத்த வர்த்தகம், 2013 ஆம் ஆண்டில் 44.50 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்தடன் வர்த்தக சமநிலையும் இலங்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறது. ஜோர்தானுக்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதியாக தேயிலை காணப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 81மூ சத வீதத்திற்கும் மேற்பட்ட பங்களிப்பினை செய்கிறது.
இலங்கை ஜோர்டானுக்கு தேயிலையினை வழங்கும் பெரிய சப்ளையராக உள்ளது. ஜோர்டான் இலங்கையில் இருந்து தேயிலையினை பெற்றுக்கொள்ளளும் நான்காவது பெரிய நாடு. அத்துடன் தென்னை, முந்திரி கொட்டைகள், தையல் நூல் மற்றும் மிளகு ஆகியன ஜோர்டானுக்கான ஏனைய ஏற்றுமதி பொருட்கள் ஆகும். இலங்கையின் மாஸ் , டிப் ஆடை, மற்றும் மலிபன் ஜவுளி ஆகிய மூன்று நிறுவனங்களின ஆலைகள்; ஜோர்டானில் ஏற்கனவே வெற்றிகரமாக செயற்பட்டுவருகின்றன. மறுபுறம், 2013 ஆம் ஆண்டில் , ஜோர்தான் 0.287 மில்லியன் அமெரிக்க டொலரினை இலங்கையில் முதலீடு செய்துள்ளது. தற்போது ஜோர்தானில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர் தொழிலாளர்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
ஆசியாவில் பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியடைந்து வரும் 2 வது நாடு இலங்கையாகும். இலங்கைக்கு வருகை தந்து சேவை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக அறிந்து கொள்ளுமாறு ஜோர்தானிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். அத்துடன் இலங்கை மற்றும் ஜோர்தானுக்கும் இடையில் கூட்டு வர்த்தக ஒப்பந்தம் மீளாய்வு செய்வதற்கான வாய்ப்பிருப்பதாக இச்சந்திப்பின்போது இருதரப்பினரும் சுட்டிக்காட்டினர்