இலங்கையில் மருத்துவ துறை இ மருத்துவமனை முகாமைத்துவம் மற்றும் முதலீட்டுசபை திட்டங்கள் மீது எமக்கு ஆர்வம் இருக்கின்றது. நானோடெக் முறைமையிலான அதியுயர் தொழில்நுட்பம் உடைய உயர் தர சுகாதார பராமரிப்பு முறைமை இ மருத்துவ உபகரணங்கள் இ மருத்துவம் வாயு முறைமை மற்றும் நிபுணத்துவம் பெற்ற துருக்கியின் செயற்பாடுகளினை இலங்கைக்கு வழங்க தயாராக இருக்கிறோம் என துருக்கியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஏ.எஸ். சும்சி தெரிவித்தார்.

கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்தவேளையே சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஏ.எஸ். சும்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான துருக்கிய தூதரக உயர்ஸ்தானிகர் ஸ்கென்டர் ஓகே மற்றும் துருக்கி மருத்துவ நிபுணர்கள்இ மருத்துவ துறை நிறுவன அதிகாரிகள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
சும்சி அச்சந்திப்பில் தொடர்ந்து கூறுகையில்: இது இலங்கைக்கான எங்கள் முதற் பயணம். நாம் இலங்கையின் மருத்துவ முறைமைகளை கற்றுக்கொண்டுள்ளோம்.ஆனால் இங்கு இன்னும் உயர் தொழில்நுட்பம் கொண்ட முன்னேற்றகரமான மருத்துவமனைகள் மற்றும் அவ்மருத்துவமனைகளுக்கு அதி நவீன மருத்துவ உபகரணங்களின் தேவைபாடுகள் இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். நானோடெக் முறைமையிலான அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட மருத்துவ தயாரிப்புகளில் நாம் முன்னணியில் இருக்கின்றோம். இதனைவிட மின்னியல் சத்திர சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை உபயோகப்படுத்தவதில் சர்வதேசத்தில் உயர்ந்த அடிப்படையில் நாம் உள்ளோம். இலங்கையுடன் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட எமது மருத்துவ துறை மற்றும்; மருத்துவ பராமரிப்பு செயற்பாடுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட ஆர்வமாக உள்ளோம்.

நானோடெக் முறைமையிலான எங்கள் அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட மருத்துவ தயாரிப்புகள் ஐந்து கண்டங்களில் உள்ள 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. நாம் எமது தலைநகரமான அங்காராவை தலைமை பீடமாக கொண்டியங்குகின்றோம். எங்கள் தயாரிப்புகள் ஐரோப்பிய ஒன்றிய தரத்தை சேர்ந்தது. மத்திய கிழக்கு நாடுகள்,ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் ரஷியன் மொழி பேசும் நாடுகளில் நாம் நன்கு அறியப்பட்ட ‘மருத்துவ பிராண்ட’ஆக இருக்கிறோம்.

1969 ஆம் ஆண்டில் இருந்து எமது ஆழ்ந்த நிபுணத்துவமானது மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ எரிவாயு அமைப்பு உபகரணகளை உற்பத்தி; செய்தல்; நிறுவுதல் ஆகியவற்றை கொண்டதாக இருக்கின்றது.நானோடெக் முறைமையே எமக்கு மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறனகளுக்கு கைகொடுத்துள்ளது. எமது உயர் திறன் மருத்துவ தயாரிப்பு கூடங்கள் துருக்கிலும் ஜெர்மனியிலும் இயங்குகின்றன.

இலங்கையில் துருக்கி மருத்துவமனைகளிலான திட்டங்கள் ஆரம்பிக்க எதிர்பார்கின்றோம.; மருத்துவமனை முகாமைத்துவ மற்றும் முதலீட்டுசபை திட்டங்கள் மீது எமக்கு ஆர்வம் இருக்கின்றது. உயர் தரமான சுகாதார முறைமை மருத்துவ உபகரணங்கள் மருத்துவம் வாயு முறைமை மற்றும் நிபுணத்துவம் பெற்ற துருக்கியின் செயற்பாடுகளினை இலங்கைக்கு வழங்க தயாராக இருக்கிறோம்.நாம் இலங்கையின் மருத்துவ முறைமைகளை கற்றுக்கொண்டுள்ளோம்.ஆனால் இங்கு இன்னும் உயர் தொழில்நுட்பம் கொண்ட முன்னேற்றகரமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகளில், நவீன மருத்துவ உபகரணங்களின் தேவை இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.

நாம் இங்கு மருந்து சாதனங்களின் தாயாரிப்புக்களில் ஈடுபடவில்லை. இங்கே மருத்துவ உற்பத்தி உபகரணங்கள் நிறுவுவதற்கு மாறாக தனியார் மருத்துவமனைகளினை நிறுவுவதற்கு உள்ள10ர் பங்குதாரர்களுடன் ஒரு கூட்டு முயற்சிக்குள் நுழையவுள்ளோம்..இதனூடாக எங்கள் சொந்த மருத்துவ உபகரண தொழில்நுட்பங்களினை மருத்துவமனை கட்டுமானம் ஊடாக உபயோகிக்கலாம். இந்த விஜயத்தில், அரசாங்கம்; மற்றும் தனியார் துறை நிறுவன அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து எமது நோக்கம் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

இங்கு அமைச்சர் ரிஷாட் உரையாற்றுகையில்: நாம் இலங்கைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம.; உலகளாவிய ரீதியில் உங்களுடைய வலுவான மருத்துவ இருப்புக்களின் சாதனை வரவேற்கதக்கது. நீங்கள் சிறப்பு மருத்துவ வழங்குநராக செயலாற்றுவதை நாங்கள் அவதானித்து வருகின்றோம். இலங்கையுடன் மருத்துவ தொழில்நுட்ப பரிமாற்றம் தொடாபிலான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. இதற்காக உங்களுக்கு நானும் எங்கள் அமைச்சின் அதிகாரிகளும் முழு ஆதரவினையும் வழங்கவுள்ளோம்.
துருக்கி நேட்டோ அமைப்பின் சக்தி வாய்ந்த கிழக்கு உறுப்பினர். தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகும.; இலங்கை மற்றும் துருக்கிக்கிடையேயான மருத்துவ துறை உட்பட வர்த்தக மற்றும் சுற்றுலா உடன்படிக்கைளை விஸ்தரிக்க முடியும.

இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அறிக்கையின் படி துருக்கியின் வர்த்தக மொத்த வருமானம் சமீபத்தில் அதிகரித்த போக்கை காட்டியது.2005 ஆம் ஆண்டில் இருதரப்பு மொத்த வர்த்தக தேறிய வருமானம் 97.4 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2012 ஆம் ஆண்டில் 190,57 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து கிட்டத்தட்ட 95.66 சத வீத மூலம் இரு மடங்கு அதிகரிப்பை காட்டியது. இலங்கைக்கும் துருக்கிக்குமிடையே காணப்பட்ட வர்த்தக சமநிலை கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கைக்கு ஆதரவாக இருந்தது.இது 14.7 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்து ஆறு மடங்குகளாக 2012 ஆம் ஆண்டு 88,39 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து.

இச்சந்திப்பில் வர்த்தகத்தினூடான வர்த்தகம் (பி2பி) மற்றும் முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *