இந்தியாவின் புதிய பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதக விளைவை ஏற்படுத்துமா?
• இந்தியாவுக்கான மொத்த ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 543,3 மில்லியன் அமெரிக்க டொலர்
• இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி 550 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டங்களில் இன்னும் இருக்கின்றன.
• எமது இருதரப்பு வர்த்தக உறவுகளின் வளர்ச்சிபோக்கு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது
இலங்கைக்கும்;, இந்தியாவுக்குமிடையிலான வரலாற்றுமிக்க உறவானது இருதரப்பு வர்த்தகத்தின் அளவினை 2013 ஆம் ஆண்டு 3636,0 மில்லியன் அமெரிக்க டொலருக்கு முன்னோக்கி இட்டுச்சென்றுள்ளது.
இந்தியாவினால் வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.அத்துடன் நாங்கள் சிறந்த வர்த்தக அளவினை பேணுவதற்கும் எதிர்பார்க்கின்றோம் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.a
பிரியாவிடைபெற்று செல்லும் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் துணை உயர்ஸ்தானிகர் பி. குமரனுக்கு கடந்தவாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை வளாகத்தில் அளிக்கப்பட்ட விசேட அழைப்பு வைபவத்தின்போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வைபவத்தில் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இவ்விசேட வைபவத்தில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து தெரிவிக்கையில்:
இந்தியா எமது வர்த்தக பங்காளி.எங்கள் இருதரப்பு வர்த்தக தொகுதிகள் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுகின்றது. எமது இருதரப்பு வர்த்தக தொகுதிகளில் சிறந்த வர்த்தக நிலைகளை காண விரும்புகின்றேன். அதுமட்டும் அல்ல இந்தியாவினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவு இலங்கையின் பல்வேறுபட்ட அபிவிருத்தி முயற்சிகளுக்கு உந்துசக்தி இருக்கின்றது.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி,இரு நாடுகளுக்கும் இடையேயான மொத்த இருதரப்பு வர்த்தகம் 2013 ஆம் ஆண்டு 3636,0 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.இலங்கையில் இருந்து இந்தியாவுக்கான மொத்த ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 543,3 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கான இறக்குமதி 3092,6 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. முக்கியமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக முதலீடு இருந்தமையினால் இந்தியா மற்றும் இலங்கை இடையே வர்த்தக சமநிலை எப்போதும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக பெற்ரோலிய பொருட்கள் மோட்டார் வாகனங்கள், புடவை சர்க்கரை என்பனவாகும்.இதேவேளை சாதகமற்ற வர்த்தக சமநிலையின் 2012 – 2013 ஆண்டுகளில் மிக குறுகியதாக இருந்தது. (2950,8 மில்லியன் அமெரிக்க டொலர் -2549.3 மில்லியன் மில்லியன் அமெரிக்க டொலர்)
இந்தியா இலங்கையின் மிகவும் தொன்மை வாய்ந்த முதலீட்டாளர். முன்னணி வாய்ந்த நிறுவனங்கள் இங்கு சகல பொருளாதார துறைகளிலும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறப்பாக உயர் கல்வி, ஆடைத்துறை, உட்கட்டமைப்பு உற்பத்தி, வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் மூலோபாய வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இலங்கையில் உங்களின் பதவிக்காலம் இலங்கைக்கு ஒரு வெகுமதி.எதிர்காலத்தில் உங்களுக்கு எட்டவுள்ள சிறப்பு பதவிக்கும் வெற்றிக்கும், எங்கள் வாழ்த்துக்கள் என்றார் அமைச்சர் ரிஷாட்.
பிரியாவிடைபெற்று செல்லும் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் துணை உயர்ஸ்தானிகர் பி. குமரன் விசேட அழைப்பு வைபவததில உரையாற்றுகையில்:
பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான புதிய இந்திய அரசாங்கம் சர்வதேச ரீதியில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் அதிகவனம் செலுத்தயுள்ளது. எனினும் இவ் அரசாங்கம் இன்னும் வழமைநிலைக்கு மீளாத நிலையில் இலங்கையுடான அதன் வர்த்தகத்தில் எந்த மாற்றங்களும் சுட்டிக்காட்ப்படவில்லை ஏனினும் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய- இலங்கை வர்த்தக மற்றும் முதலீடுகள் கணிசமான அளவு வளர்ச்சியற்றிருந்தமை மகிழ்ச்சியை தருகின்றது.எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக செய்ய முடியும்.
இந்திய பொருளாதாரம் ஏற்கனவே சாதகமாகவே காணப்படுகின்றது எனவே இந்நிலையில் இலங்கை, இந்தியாவில் இருந்து அதிக நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு என்பனவற்றில் மாற்றம் ஏதுவுமில்லை இலங்கையை நோக்கி நகர இந்தியாவின் புதிய நிர்வாகத்தில் எவ்வித அடையாளமும் இல்லை.
ஒப்பந்தங்களினை மேம்படுத்த இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் தேவைகள் தரம் மற்றும் சுங்க வசதிகள் பரிசீலனை செய்யப்படவேண்டும. நாம் ஏற்கனவே இலங்கைக்கு வரைவு திட்டங்களை சமர்ப்பித்திருக்கின்றோம் மற்றும்; முன்னோக்கி நகர்வதற்கு அவர்களின் பதிலை காத்திருக்கின்றோம். இலங்கை ஏற்றுமதியாளர்கள் சென்னையில் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்பதனையும் இலங்கை பக்கத்தில் இருந்துவரும் புகாரினை உண்மையில் குறிப்பிட வேண்டும.; இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் சில அம்சங்கள் பரிசீலனை செய்ப்பட்டு இலங்கை ஏற்றுமதியாளர்கள் தரப்படுத்தப்பட வேண்டும.; இந்த இரண்டு அம்சங்களில் வரைவு திட்டங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்டால், நாம், இந்த உடன்படிக்கையினை விரைவுப்படுத்த முடியும். அவ்வாறு உடன்படிக்கையினை நாம் உடனடியாக செயற்படுத்துவேமானால் சிறப்பு பொருளாதார கூட்டாண்மை வர்த்தகத்தினை அதிகரிக்கவும் பல எதிர்மறை பட்டியலினை குறைப்பதை நோக்கி நகர்த்தவும் முடியும். புதிய அரசாங்கத்தை பொறுத்தவரை, அது இன்னும் வழமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் பொருளாதார விஷயங்களில் குறிப்பாக மற்ற நாடுகள் மீதான கவனத்தனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாங்கள் சிறந்த இருதரப்பு வர்த்தக உறவினை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம.; இது இருபுற ஏற்றுமதியாளர்களுக்கு நன்மையினை இட்டுச்செல்லும் உண்மையில்,இலங்கைக்கான எங்களின் ஏற்றுமதி 550 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டங்களில் இன்னும் இருக்கின்றன. இலங்கையின், அன்னிய நேரடி முதலீடுகளின் பங்களிப்பு குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.இதற்காக நான் இலங்கை மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்ககொள்கின்றேன்.
உங்கள் அமைச்சுடனும், உங்களுடனும் இணைந்து மேற்கொண்ட பணிகள் எனக்கு மிக்க சந்தோஷத்தினை தந்துள்ளது. இலங்கையில் எங்களுடைய ஆதரவு ஒத்துழைப்பு, உதவிகள் பரந்தளவில் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல எமது இருதரப்பு வர்த்தக உறவுகளின் வளர்ச்சிபோக்கு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என துணை உயர்ஸ்தானிகர் பி. குமரன் தெரிவித்தார்.