பொது பல சேனா அமைப்பு உடனடியாக தடை செய்யப்படவேண்டும்இ அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்;இ இன வாதம் மற்றும் மதங்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் உடனடியாக   அமுழுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழியுறுத்தியுள்ளார்.

நேற்று அதிகாலை சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் பேருவளை மற்றும் அளுத்கம சிங்கள பிரதேச எல்லைகளில் வாழும் முஸ்லிம்கள் அச்சுறுத்தல் காரணமாக இடம் பெயர்ந்து பேருவளை அல்-{ஹமைசரா மத்திய கல்லூரியில் தஞ்சமடைந்துள்ளார்கள். அவர்கள்  மத்தியில் உரையாற்றும்போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரனைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்பில் அரச உயர் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளேன.;;
பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற கொலைகளும் சொத்து அழிவுகளுக்கும் பொது பலசேனாவின் ஞானசார தேரர் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் இருப்பதையிட்டு வேதனையும் வெட்;கமும் அடைகிறேன். அளுத்கம மற்றும் பேருவளை பிரச்சினைக்கு இந்நாட்டில் தீர்வு கிடைக்காவிடின் சர்வதேசத்தை நாடவும் பின்னிக்கப்  போவதில்லை.
ஞானசார தேரர் ஒரு மிகப்பெரும் பயங்கரவாதி. பொது பலசேனாவை தடைசெய்வதற்கும், ஞானசார தேரரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கும் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்று பட்டு கோஷமெழுப்ப முன்வர வேண்டும்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை  அழிப்பதே பொது பலசேனாவின் ஒரே இலக்கு. நான் சவூதியில்  இருந்தபோது அங்கு வாழும் நூற்றுக்கணக்கான பேர் ஒன்று பட்டு இந்த பொது பலசேனாவை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி கேட்டனர்.
இந்த பாசிச  பொது பலசேனாவின் சதியை முடிவுக்கு கொண்டுவர முஸ்லிம்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக. அத்துடன் இப்பாடசாலையில் தஞ்சம் புகுந்திருக்கும் இந்த மக்களை அவர்களுக்கான அச்சுறுத்தல் நீங்கும் வரை பலவந்தமாக இங்கிருந்து வெளியேற்ற   அனுமத்திக்கப்போவதில்லை.
அளுத்கம, தர்கா நகர், பேருவள முஸ்லிம்கள் மீது இனவெறிபிடித்த காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்தையும் பாதிக்கப்பட்ட மக்களையும்  நேரடியாகச் சென்று பார்தேன.; இவ்வாறான நாசகார செயல்களை செய்த பௌத்த தீவிரவாத அமைப்புக்கு எனது கண்டனத்தையும்   தெரிவிக்கின்றேன்.
எந்தளவுக்கு மிகவும் கேவலமாக இறங்கி முஸ்லிம்களையும் அவர்களது வர்த்தகத்தையும் அழிக்க முடியுமோ அந்தளவுக்கு இனவெறியர்கள் கீழிறங்கியிருப்பதை என்னால் அங்கு உணர முடிந்தது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதலினால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள், சொத்தளிப்புக்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இயல்பு வாழ்க்கையினை மீள கொண்டு வருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அரச உயர் தரப்பினர்pடம் வலியுறுத்தியுள்ளேன்.

இற்றைவரையான முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சம்பவங்களும் அனைத்தும் பொலிஸார் பார்த்தக் கொண்டிருக்கும்போதே இடம்பெற்றுள்ளது. எனினும் இவர்களில் ஒருவரேனும் இதுவரை கைதுசெய்யப்படாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.
ஜூன் 15ஆம் திகதி பொதுபல சேனா அமைப்பு நிகழ்த்திய உரைகளின் பிரதிபலனாகவே இனவாதம் தூண்டப்பட்டு  மிலேச்சத்தனமான தாக்குதல் தொடரப்பட்டடுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *