வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக் காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காண்பதற்காக இங்கு தான் விஜயம் செய்ததாக மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் குணரத்தின வீரக்கோன் நேற்று முசலிப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதெ மெற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சருடன் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் குணரத்தின வீரக்கோன் தெரிவித்ததாவது :-

இல்லறமின்றி, காடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உங்கள் துயரத்தைக் கண்டு நான் வெதனையடைகின்றேன். இப்படிப்பட்ட உங்களுக்காக குரல் கொடுக்க ஓர் அமைச்சராகவும் தலைவராகவும் றிசாத் பதியுத்தீன் செயற்பட்டு வருகின்றார்.

உங்களுக்கு காணி பெற்றுத் தந்த காரணங்களுக்காக மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் அமைச்சராகவும் அவர் காணப்படுகின்றார். காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றுகின்றார். என்று அமைச்சர் றிசாத் மீது இன்று பெளத்த பேரினவாத அமைப்பொன்று நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிரசாரம் செய்கின்றது.

அத்துடன் மேல் நீதிமன்றத்திலும் அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்தவொரு குற்றமும் செய்யாத சூழ்நிலையில் இன்று நீதிமன்றத்தில் கைகட்டி நிற்கின்றார். உங்களுக்கு காணி பெற்றுத் தந்ததற்காகவே அவரை இவ்வாறு குற்றவாளியாக அந்தப் பேரினவாத அமைப்பு முயற்சிக்கின்றது.

அமைச்சர் றிசாத் புதியுத்தீனுடன் ஒற்றுமைப்படுவதன் மூலமெ இவ்வாறான பேரினவாத அமைப்பை அடக்க முடியும். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட உங்களைப் பற்றி மிக ஆக்ரோசமாக அவர் பேசுவதாலும் உழைப்பதாலும் உங்களது அமைச்சரை ஓர் இனவாதியாக, மதவாதியாக சித்தரிப்பதன் மூலம் உங்களது மீள்குடியேற்றத்தை தடுக்க பெளத்த இனவாதிகளோடு தமிழ் இனவாதிகளும் சேர்ந்துள்ளனர்.

புலிகள் எவ்வாறு உங்களை வெளியேற்றினார்களோ அதைவிட மோசமானதாக இவர்கள் செயற்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் காணிகளில் தான் குடியேறியிருக்கின்aர்கள் என்பது உண்மை. 20 வருடங்கள் நீங்கள் இல்லாத இந்தக் காணி இன்று காடாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட காட்டை துப்புரவு செய்யாமல் எவராவது வாழமுடியுமா? இந்த யதார்த்தமான கேள்வியை இனவாதிகளிடம் கேட்கவிரும்புகின்றேன். உங்களின் மீள்குடியேற்றத்திக்கா அமைச்சர் றிசாட் பதியுத்தீன் ஐனாதிபதிக்கு முன்பாக தைரியகமாக உரத்துப் பேசுவதையும் நான் கண்டுள்ளேன் அத்துடன் நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியிடத்திலும் அமைச்சரவையிலும் அநீதிக்கு எதிராக தைரியமாகவும் அச்சமின்றியும் பேசியதை நான் கண்டுள்ளேன்.

இனவே அதிக அபிவிருத்திகளை எதிர்பார்த்துள்ளதொரு சமூகமாக இருக்கின்ற நீங்கள் பிரிந்து விடாமல் ஒன்றுபடுங்கள் தெர்தல் காலங்களில் மட்டும் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளைப் போல அல்ல அமைச்சர் றிசாத் பதியுத்தீன் இந்தக் கட்டத்திலும் உங்களைப் பற்றி சிந்திப்பவர் றிசாத் பதியுத்தீன் என அமைச்சர் குணரத்தின வீரக்கோன் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *