சர்வதேச வர்த்தகம் மற்றும் ஆரோக்கியா (INTRAD EXPO -2014 2014- கண்காட்சியானது உள்ளுர் மற்றும் சர்வதேச ஆகிய இரு சாராருக்கும் தங்கள் உற்பத்திககளை எடுத்து காண்பித்து பல்வேறு உற்பத்தி பொருட்களையும் , சேவைகளையும் . சந்தை வாய்ப்புக்ளையும் வளங்ளையும் இனங்காண்பதற்கு அரிய வாய்ப்பாகும் சுகாதாரப்பராமரிப்பு மருத்துவம் , கைத்தொழில் ஆகிய இரண்டு முக்கிய துறைகள் இலங்கையை முன்னேற்றுவதற்கு பங்களிப்புச் செய்யும ஒரு பெறுமதியான துறையாகும். ஆரோக்கியா 2014 சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவ சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவரும்வகையில் இலங்கை மருத்துவத்துறை குறித்து விழிப்புணர்வை வழங்குவதற்கும் கணிசமான பங்களிப்புக்களை வழங்கும். அதேபோன்று ஐNவுசுயுனு நுஓPழு 2014 கண்காட்சி கைத்தொழில் வர்த்தகம் போன்ற முக்கிய பொருளாதாரதுறைகளுக்கு சிறிய மற்றும் நடுத்தர , நுண்தொழில் முயற்சியாளர்களுக்கும் அவர்களது உற்பத்திகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்தி உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் புதிய வியபார தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (மே மாதம் 16 ஆம் திகதி) வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக – இன்ட்றாட் மற்றும் ஆரோக்கியா கண்காட்சியின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா , பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ எம். லலித் திசாநாயக்க , பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி .சிவஞானசோதி,தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சுனில் விஜேசிங்க ,இன்ட்றாட்/ ஆரோக்கியா நிகழ்வின் செயற்குழு தலைவர் திலக் கொடமானஇவியட்நாம், தாய்லாந்து, இந்தியா, மாலைதீவு மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தொடாந்து அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்: இந்நிகழ்வில் என்னை கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ், வழங்கிய இன்ட்றாட் மற்றும் ஆரோக்கியா- 2014 நிகழ்வின் அமைப்பாளர்கள் மற்றும் அனுசனையாளர்களுக்கு, எனது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று மே மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தேசிய வர்த்தக சம்மேளனம் அதன் சர்வதேச அங்கிகாரம் கொண்ட 2014 ஆம் ஆண்டுக்கான ‘இன்ட்றாட் மற்றும் ஆரோக்கியா’ என்ற இரண்டு முக்கியமான கண்காட்சிகளினை ஒரே நேரத்தில் ஆரம்பிக்கவுள்ளது என்பதனை இத்தருணத்தில் அறிவிக்கின்றேன்.
கடந்த 65 ஆண்டுகளாக வணிக சமூகத்தினருக்கு தங்கள் சேவைகளை வழங்கிவரும் தேசிய வர்த்தக சம்மேளனம் இலங்கையில் உள்ள பழமையான சம்மேளனங்களில் ஒன்றாகும். உலக சந்தைகளில், இலங்கை தயாரிப்புகளை விருத்தி செய்வதற்கு சம்மேளனத்தினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மற்றும் சேவைகளை பாராட்ட வேண்டும்.

கொழும்பில் வளர்ச்சி துறைகளின் வளைப்பின்னல் நிகழ்வாக அமையப்போகும் இன்ட்றாட் மற்றும் ஆரோக்கியா என்ற இந்த இரட்டை தொடர் நிகழ்வு எங்கள் வர்த்தக சமூகத்தினர் மத்தியில் படிப்படியாக அங்கீகாரம் பெறும்.

இன்ட்றாட் என்பது தொழில்துறை , ஏற்றுமதிதுறை மற்றும் இறக்குமதிகளினை உள்ளடக்கிய பரந்த கண்காட்சி, ஏற்றுமதி துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில், இந்த தொடர் நிகழ்வு மூலம் எங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க உங்கள் முயற்சிகளினை வரவேற்கின்றேன். இரு வாரங்களுக்கு முன்பு கிடைக்கப்பெற்ற, எங்கள் ஏற்றுமதி தொடர்பான நல்ல செய்தியொன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதாவது இலங்கையின் ஏற்றுமதியானது கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு முதல் காலாண்டில் , 16 சதவீத சாதகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வருடாந்த அடிப்படையில் , தொழிற்துறை ஏற்றுமதி 2013 ஆண்டு டிசம்பர் மாதம்; வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்தது. டிசம்பர் மாதம் மட்டும் தொழிற்துறை ஏற்றுமதி 15.2 சதவீத அதிகரிப்புடன் 741 மில்லியன் டொலரினை ஈட்டியுள்ளது என்று குறிப்பிடுவதில் நான் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். 2013 ஆம் ஆண்டு எமது ஏற்றுமதி வருவாய் 6.3 சதவீத வளர்ச்சியுடன் 10.38 பில்லியன் அமெரிக்க டொலர்களினை ஈட்டியுள்ளது.
மீன்பிடித்துறை , விவசாய துறை மற்றும் கைத்தொழில்துறை ஆகியவற்றின் ஏற்றுமதியூடாக இவ்வாண்டு முதல் காலாண்டில் தற்காலிக ஏற்றுமதி வளர்ச்சி ஈட்டியள்ளது. மீன்பிடித்துறை ஏற்றுமதி 23 சத வீத அதிகரிப்புடன் 71 மில்லியன் அமெரிக்க டொலராகவும் விவசாயத் துறை ஏற்றுமதி 21 சத வீத அதிகரிப்புடன் 635,24 மில்லியன் அமெரிக்க டொலராகவும் மற்றும் தொழில்துறை ஏற்றுமதி 18 சத வீத அதிகரிப்புடன் 2086 மில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. தொழில்துறை ஏற்றுமதி வளர்ச்சியினுள் ஆயத்த ஆடை ஏற்றுமதி 20 சத வீத அதிகரிப்புடன் 1257 மில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சினை காட்டியது. தற்காலிக ஏற்றுமதி அதிகரிப்பு இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தினை விட மார்ச் மாதம் மட்டும்; 27 சத வீத ஒரு வலுவான போக்குடன் 1.06 பில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியை தோற்றுவித்து ஒரு ஏற்றுமதி சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது 2020 ஆம் ஆண்டுக்கான 20 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கு வெற்றிக்கான ஒரு சமிக்ஞைசையாக கருதப்படுகின்றது.

அதே நேரத்தில் மற்றைய ஆரோக்கியா கண்காட்சி தொடர் சுகாதார உடல் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. இலங்கையில் மருத்துவ சுற்றுலாவினை ஊக்குவித்து சிறந்த மருத்துவ சுற்றுலா மையத்தினை மேம்படுத்த நீண்ட கால திட்டம் எமக்கு தேவைப்படுகின்றது.

ஒரு தனிநபர் சுகாதார உடல் ஆரோக்கியத்திற்கான செலவினம் மட்டும் 175 டொலர்கள் ஆகும். ஆரம்பத்தில் வளர்ந்த நாடுகள் போன்று இலங்கையில் மேம்பாடான உயாந்த சுகாதார உள்கட்டமைப்பு காணப்படவில்லை. எனினும், இது எமக்கு முழுயான விபரத்தினை காட்டவில்லை.

உயர் தரமான உடல் ஆரோக்கிய சுகாதார நிபுணர்களின் சிறந்த பயிற்சி , கிடைக்கக்கூடிய சிகிச்சை மையங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய ஒளடதங்கள் ஆகியவற்றின் ஆதரவு காரணமாக ஒரு புதிய துறை எழுச்சி எங்கள் , மருத்துவ சுற்றுலா சேவை ஏற்றுமதிக்கு பங்களிப்பு செய்கின்றது.

மாலைதீவு போன்ற 15மூ சத வீதமான, வெளிநாட்டு நோயாளிகள் இலங்கையில் சிகிச்சை பெறுவதாக ஆய்வுகள் காண்பிக்கின்றன.

இலங்கையில் இருக்கின்ற இரண்டு சுகாதார மருத்துவமனைகளான ஸ்ரீலங்கா மற்றும் டேடன்ஸ்( Lanka Hospitals and Durdans) ஏற்கனவே சுற்றுலா பயணிகள் மருத்துவ செயல் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது என்பதை நான் மகிழ்ச்சியாக தெரிவிக்கின்றேன்.

உண்மையில், என் அமைச்சின் கீழ் செயற்படும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது இன்ட்றாட் மற்றும் ஆரோக்கியா நிகழ்வின் பங்குதாரரா ஆவர்.இது எங்கள், மருத்துவ சுற்றுலாதுறையில் அந்நிய செலாவணி வருவாயினை பெற்றுக்கொடுக்ககூடிய ஒரு நம்பிக்கைக்குரிய சேவைதுறைக்கான நிறுவனம் என்று நான் நம்புகின்றேன்.

மருத்துவ சுற்றுலாத்துறையில், ஒரு வலுவான நிலையை உருவாக்கினால், நீண்ட காலத்தில் இலங்கையில் ஒரு சிறப்பு சுற்றுலா வர்த்தக குறியினை ஏற்படுத்தலாம். இலங்கை சுற்றுலாதுறை அலுவலக அறிக்கையின் படி, 2013 ஆம் ஆண்டு; 1.2 மில்லியனுக்கு மேற்பட்;டோர் சுற்றுலா துறை நிமித்தம் இலங்கைககு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கான உந்து சக்தியாக எமது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ இருந்துள்ளார் என்பதனை நான் தெரிக்க விரும்புகிறேன்.

மருத்துவ சுற்றுலாதுறையானது சுற்றுலா, உடல் ஆரோக்கிய சுகாதாரம் மற்றும் உள் பயண தொகுப்பு என பல தொடர்புடைய துறைகளுக்கு, மையத்தில் உள்ளது. நம்பிக்கைக்குரிய இ;த் துறையினை வலுப்படுத்த, பொது மற்றும் தனியார்துறை கூட்டுபட்டுப்பங்காளிகளுக்கு ஒரு நல்ல பாதை இருக்கின்றது என நாம் நம்புகிறேன. அதனால் எங்கள் அரசாங்கத்தின், சுற்றுலாத்துறை இலக்குகள் தொடர்பான மைய முயற்சிகளினை முழுமையாக பயன்படுத்தலாம்.

மே 16- 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 2014 – இன்ட்றாட் மற்றும் ஆரோக்கிய நிகழ்வின் வெற்றிகரமான செய்தியை எம்முடன் இணைந்து எடுத்து செல்வதற்கு இலங்கையின் பொறுப்புள்ள வெகுஜன ஊடகங்களின் முழு ஆதரவு தேவை என அவர்களுக்கு நாம் இன்று அழைப்பு விடுக்கின்றோம்

இறுதியாக , இன்ட்றாட் மற்றும் ஆரோக்கியா நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவத்தில் என்னை கலந்துக்கொள்வதற்கு அழைப்புவிடுத்த இன்ட்றாட் அமைப்பாளர் குழுவினர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு 2014 – இன்ட்றாட் மற்றும் ஆரோக்கியா நிகழ்விற்கு எனது வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *