பொதுபல சேன அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார ஹிமி அவர்களுக்கு எதிராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது சட்டத்தரணி ஊடாக நேற்று 07-05-2014 காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
மன்னிப்பு அல்லது ரூபா 500 மில்லியன் நட்ட ஈடாக கோரி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சட்டத்தரணியால் அனுப்பட்ட கடிங்களுக்கு வண.கலகொட அத்தே ஞானசார ஹிமி பதில் ஒன்றும் அனுப்பமையினால் இந்த வழக்கு அவருக்க எதிராக தாக்கல் செய்யப்பட்டுளள்ளது.
2014 மார்ச் 20 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களிலோ வண.கலகொட அத்தே ஞானசார ஹிமி ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சருக்கு எதிராக தீங்கு விளைவிக்கககூடிய பெய்யான மற்றும் அமைச்சரின் நட்பெயருக்கு பாதகம் விளைவிக்கககூடிய கூற்றுகக்ளை தேரர் அவர்கள் வெளியிட்டதாக இந்த வழக்கில் தாக்கல் செய்ப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மாநாட்டில் தேரர் அமைச்சருக்கு எதிராக பின்வரும் கூற்றுக்ளை முன்வைத்தார்.
1. வில்பத்து தேசிய சரணாலயம் அழிவடைதற்கு அமைச்சர் காரணமாக இருந்தார்.
2. வில்பத்து தொடக்கம் மன்னார் வரை முஸ்லீம் மக்களுக்கென தனியான வளையம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
3. இலங்கையில் மன்னார்- வில்பத்து பிறதேசத்தில் அராபிய குடியேற்றம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அமைசச்சர் முயலுகின்றார்.
4 அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றங்களை தாக்கி நிதித்துறை செயற்பாடுகளை தடுக்கும் ஒரு நபர் ஆவார்.
இந்த வழக்கின் வழக்காளியான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தேரரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை பல இடங்களில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததுடன் மன்னார் பிறதேசத்தில மேற்கொள்ளப்படும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தினனார்.
தேரரினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற வேறோரு ஊடகவியலாளர் மாநாட்டில் தேரரினால் அரங்கேற்றப்பட்ட நாடகமும் இஸ்லாமி சமயத்திற்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிராக அவர் செயற்பட்டு வருகின்றார் என்பதiனை கோடிட்டு காட்டுகிறது.
தேரரினால் அமைச்சருக்கு எதிராக கூறப்;பபட்ட கருத்துக்கள் அமைச்சரி ன் நட்பெயருக்கும் புகழுக்கும் பாரிய தீங்கு விளைவித்துள்ளமையினால் தேரரிடமிருந்து ரூபா 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *