இலங்கையிடமிருந்து அதி கூடியளவில் வைரங்களை கொள்வனவு செய்துவரும் பெல்ஜியம் அடுத்து இடம்பெறவுள்ள சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கான பாரியதோர் முயற்சியாகுமென பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
கொழும்பில் இது குறித்து பெல்ஜியத்தின் இலங்கைக்கான கௌரவ பிரதிநிதி பியரோ பிரின்ஜியர்ஸ் கருத்து வெளியிடுகையில் இலங்கையில் நடைபெறவுள்ள சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அனைவரினதும் கவனத்தை மிகவும் கவரத்தக்கதாகவும் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்ததாகவும் விளங்குகின்றது. உண்மையில் இது மிகவும் முக்கியமானதொரு மைல்கல்லாகவும் இலங்கைக்கான பாரிய முயற்சியொன்றாகவும் உள்ளதெனத் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த 26 பேரடங்கிய பெல்ஜிய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவினர் சகிதம் வருகை தந்திருந்த பிரதிநிதி பிரின்ஜியரஸ் கொழும்பில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நடைபெற்ற இலங்கையுடனான பெல்ஜியம் தூதுக்குழுவின் சந்திப்பின்போது கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் மத்தியில் உரையாற்றினார்.
இங்கு வருகை தந்துள்ள 26 பேரடங்கிய பெல்ஜிய தூதுக்குழுவுக்கு பொருளாதார வேலைவாய்ப்பு விஞ்ஞான ஆராய்ச்சி வர்த்தக மற்றும் தலைநகர் பிராந்திய பிரெசெல்ஸ் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் செலின் பிரிமோர் தலைமை தாங்குகின்றார்.
பிரெசெல்ஸ் தலைநகர் பிராந்தியமானது பெல்ஐpயத்தினட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஐந்திலொரு பங்கை உருவாக்குவதுடன் பெல்ஜியம் தலைநகர் பிரெசெல்ஸையும் ஐரோப்பிய நிறுவனங்களின் இருப்பிடங்களையும் உள்ளடக்கியுள்ளதுடன் பலம்வாய்ந்த சேவைத் துறையொன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அமைச்சர் பதியுதீன் உடனான சந்திப்பின்போது அமைச்சர் பிரெமொல்ட் தெரிவிக்கையில் இலங்கைக்ககும் பிரெசெல்ஸ் தலைநகர் பிராந்தியத்திற்குமிடையிலான வர்த்தக தொடர்பு கீழ்மட்ட நிலையிலேயே உள்ளதுடன் இது சம்பந்தமாக இன்னமும் உணரப்படாத சாதக நிலையே காணப்படுகிவதாக நாம் நம்புகின்றோம். இலங்கையுடன் கூட்டுப்பங்காளிகளாக இணையவிரும்பிடும் கணிசமான அளவிலா உயர் நிறுவனங்களை இன்று நான் இங்கு அழைத்து வந்துள்ளேன் உட்கட்டமைப்பு வலவகையான சிறப்புகளையுடைய இந்த நிறுவனங்களின் செயற்பாட்டுத்துறைகளோ இலங்கையின் புதிய நிர்மாணிப்புகளுடன் தொடர்புடையவையாகும். அவற்றில் சில ஏற்கனவே இலங்கைப் பரிச்சயமானவையாகவே உள்ளன.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் பதியுதீன் பேசுகையில் நான் தங்களை பிரெசெல்ஸில் இதற்கு முன்னர் சந்தித்திருந்தபோது எமக்கிடையேயான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய வழி முறைகள் குறித்து நாம் கலந்துரையாடியமை உங்களுக்கு நினைவிருக்கலாம். எமது பரஸ்பர உறவையும் முதலீட்டு செயற்பாடுகளையும் வளர்த்தெடுப்பதற்கு கொழும்புக்கான தங்களின் விஜயம் முக்கியத்துவமாக அமைக்கின்றது. புதிய நன்மையளிக்கும் வாய்ப்புக்களை உருவாக்கும் இரு நாடுகளினதும் தொழிலதிபர்களின் (வர்த்தப் புள்ளிகளின்) விஜயங்களை ஊக்கப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. கடந்த வருடம் பெல்ஜியத்துடனான இலங்கையின் வர்த்தகம் முதலீடு 826 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் இலங்கையில் 13 பெல்ஜிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இலங்கையில் முதலீடு செய்து வரும் பெல்ஜிய நிறுவனங்கள் 1.3 பில்லியன் டொலர் முதலீடுகள் கொண்ட தெற்காசிய சந்தையை அடைவதற்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடனான எமது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை பயன்படுத்திக்கொள்;ள முடியும் . பெல்ஜியத்திற்குத் தேவையான எந்த வகை ஆதரவையும் (வர்ததக ஆலோசகர்களாகவோ அல்லது முதலீட்டாளர்களாகவே இருக்கலாம்) வழங்குவதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை நாம் வழங்கியே தீருவோம்.
வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த போக்கினை காட்டியது. இது 2008 ஆம் ஆண்டு முதல் 11.2மூ வீதம் (2012 தவிர) உயர்ந்ததோடு 743,12 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
2012 ஆம் ஆண்டில்; இதன் ஒட்டு மொத்த வருவாய் 826,37 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தோடுஇருதரப்பு வர்த்தக நிலுவை கடந்த ஆண்டுகளில்; சாதகமாக காணப்பட்டது.
ஆண்டுதோறும் கணிசமான வைர தொகுதிகள் இருதரப்பு வர்த்தக இடையே ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. 2012 இல், பெல்ஜியம் இலங்கையில் இருந்து 241 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வைரங்களை பெற்றக்கொள்வதற்கு ;இங்கிலாந்து, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷியா, இஸ்ரேல், மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளோடு போட்டியிட்டது.
கௌரவ பிரதிநிதி பியரோ பிரின்ஜியர்ஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் நடைபெறவுள்ள சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அனைவரினது கவனத்தை மிகவும் ஈர்த்ததாகவும் மிகவும் முக்கயிமானதாகவும் விளக்குகின்றது. உண்மையில் இது மிகவும் முக்கியமான மைல்கலாக இருப்பதுடன் இலங்கைக்கான பாரிய முயற்சி ஒன்றாகவுமுள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் சீன சந்தைகளை பெறுவதென்பது மிகவும் கடினமே. மதிப்புள்ள சொத்துக்கள் போன்றனவற்றை இலங்கை கொண்டிருக்குமாயின் சீனச் சந்தைக்குள் இலங்கை காலடி எடுத்து வைப்பதற்குப் அமுலுக்கு வரப்போகும சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேருதவிபுரியம்
1980 ஆம் ஆண்டுக்காலப்பகுதியில நாம் ; பெர்கோகனன் லங்காஇ யுஆறு நிறுவனத்துடன் இணைந்தும் அதன் பின்னர் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லோட் ஸ்டார்இ ஜினசேன நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் திண்ம டயர் உற்பத்தியை ஆரம்பிக்க நான் தனிப்பட்ட முறையில் உதவியிருந்தேன் என்பதைக் கூறுவதிலும் நான் மகிழ்ச்சியடைக்கின்றேன். அக்காலம் (1980)தொட்டு இலங்கை தற்போது திண்மக் கைத்தொழில் டயர் விநியோகத்தராக மாறியுள்ளதுடன் அன்று தொடக்கம் இன்றுவரை 20 நிறுவனங்கள் எனது அடிச்சுவட்டைப் பின்பற்றி வருகினன்றன. அத்துடன் இலங்கை ஆசியாவில் சிறிய படகு கட்டும் இடமாக தன்னை நன்கு நிலைப்படுத்தியுள்ளதெனலாம்.
நாங்கள் கட்டிட நிர்மாணம் , உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கைத்தொழிற்துறை செயற்றிட்டங்களை மேற்கொள்வதில் பாரிய பெல்ஜிய நிறுவனமொன்றாகவே எமது நிறுவனம் விளங்கின்றது. மின் உற்பத்தி நிலையங்கள் ஹோட்டல்கள் டுபாயில் உள்ள வானளாவிய கட்டாங்கள் உள்ளிட்ட பல துறைகளில் நாம் கால் பதித்துள்ளோம.; துபாயில் அமைந்துள்ள உயர்ந்த கட்டிடங்களை நாம் தென் கொரியாவின் சாம்சங் இஎமிரேட்ஸ் மற்றும் அராப்டெக் ஆகியனவற்றோடு இணைந்து கட்டுமான வேலைகளினை பூர்த்தசெய்தோம் .
நாம் இப்போது கொழும்பில் உயர்ந்த கட்டிடங்கள் செய்ய எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே நாம் மொனராகலையில் அமைந்துள்ள நீர் முகாமைத்துவ திட்டம் உட்பட ஏனைய பலதிட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம். அத்துடன் 2012 ஆம் ஆண்டில் டீநளiஒ இன் மொத்த வருவாய் 2.8 பில்லியன் அமெரிக்க டொலராக பதியப்பட்டது. என பெல்ஜிய முதலீட்டாளர் தூதுக்குழுவினர் சகிதம் இணைந்துக்கொண்ட டீநுளுஐஓ நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் போல் கோல்போட் தெரிவித்தார்.