கிருஷ்ணி இஃபாம்:

விஷ்பரூபம் எடுத்திருந்த வில்பத்து தேசிய வனவிலங்கு சரணாலய பிரச்சினையும் அதனோடு இணைந்த முஸ்லீம் குடியேற்றபிரச்சினையும் தற்போது ஆளும் கட்சி எதிர்கட்சி மற்றும் நாட்டிலுள்ள சகலரையும் ஈர்த்ததோடு ஐனாதிபதியின் கவனத்திற்கும் எட்டப்பட்டடுள்ளது.

இதுவரை மௌனித்திருந்த ஐனாதிபதிமகிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்பட அரச தலைமைத்துவங்கள் வெகுவிரைவில் தீர்வொன்றினை முன்வைக்கவுள்ளதாக அரச உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இத் தீர்வு இடம்பெயந்த முஸ்லீம் மக்களுக்கு சாதகமாக அமையும் என நம்பப்படுகின்றது.

இருந்தபோதிலும் பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பகுதியான வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படுவதாக கடும்போக்கு பௌத்தவாத அமைப்புகள் மற்றும் அரசாங்கத்திலுள்ள பௌத்த வாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொது பலசேன அமைப்பினர் தொடாந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சருமான ரிசாட் பதியுதீன் – முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணிகளிலேயே குடியமர்த்தப்படுவதாக நியாயத்தனை முன்வைக்கின்றார்.

சர்ச்சைக்குரிய இந்த முஸ்லிம் குடியேற்றம் பற்றி உண்மையான விடயத்தினை நேரில் சென்று அறிந்துக்கொள்வதற்காக 70 க்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் கொழும்பில் இருந்து கடந்த 22 ஆம் திகதி செய்வாய் கிழமை வில்பத்து சரணாலயத்திற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஏற்பாட்டில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஸ்தல நிலைமைகளினை அறிந்துக்கொள்ளும் வகையில் ஊடகவியலாளர்கள்- மீள்குடியமர்ந்த முஸ்லீம் மக்கள் இ பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இ கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இஅரச தரப்பு அதிகாரிகள் மற்றும் அரசு ஆகியோரினது நிலைப்பாடு என்ன வென்பதனை துருவி ஆராய்ந்தனர்

புத்தளத்திலிருந்து எழுவம் குளம் வழியாக மன்னார் நோக்கிச் சென்ற ஊடகவியலாளர்கள் முசலி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட மறிச்சிக்கட்டி கிராமத்தை அண்மித்தபோது சரணாலயத்துக்கு பகுதியில் மக்கள் மீளக்குடியேறியிருந்தமையை காணக் கூடியதாகவிருந்தது. எனினும், அவர்கள் தமது முன்னோர்கள் குடியிருந்த பகுதியிலேயே மீண்டும் மீள்குடியேறியுள்ளதாக தெரிவித்தனர்.
மரிச்சிக்கட்டுவான் மக்களின் குரல்

பொதுவாக, வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இன்று வில்பத்து குடியேற்ற விவகாரம்; பூகம்பமாக வெடித்துள்ளது. வில்பத்து விவகாரம் உட்பட முஸ்லிம்களின் அண்மைக்காலப் பிரச்சனைகளை முன்வைத்து தீவிர முனைப்பில் வன்னி மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மட்டுமே செயற்படுகின்றார். ஏன் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மௌனம் சாதிக்கின்றனர் திரண்டு வாருங்கள் எமது உரிமை பெற்றுத்தர கடற்படையினர் சுகிகரித்த எமது பூர்வீக காணிகள் எமக்கு வேண்டும் எமது காணிகளின் உரிமைகளினை நிரூபிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வரை வருவோம. ஆதனால் தான் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எல்லோரும் அணிதிரண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனோடு ஓன்று சேருங்கள் ; என்று அறைக்கூவுகின்றோம் என மரிச்சுகட்டுவான் கிராமவாசிகள் குரல் எழுப்பினர்.
1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் குடியேறினார். தொடர்ந்தும் புத்தளத்தில் அகதிவாழ்க்கை வாழ விரும்பாமையாலேயே தமது சொந்த இடங்களை சுத்தம் செய்து, மரிச்சுகட்டுவான் கிராமத்தில் தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.

மண் எங்களின் சொந்தமண் முசலி பிரதேச சபையின் தலைவர் வை.எம்.எஹியான்

முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட தமது சொந்த இடங்களிலேயே முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனரே தவிர, வில்பத்து காட்டுக்குள் எவரும் குடியேறவில்லை.

முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட 27 கிராமங்கள் இருக்கின்றன. இதில் முதன்மையான நான்கு கிராமங்களாக மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகியன விளங்குகின்றன. முள்ளிக்குளம் தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமமாகும். ஏனைய கிராமங்களில் 90 சதவீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர். 1990ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர், இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் குடியேறினர். தொடர்ந்தும் புத்தளத்தில் அகதிவாழ்க்கை வாழ விரும்பாமையாலேயே தமது சொந்த இடங்களை சுத்தம் செய்து, அங்கு தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.
வில்பத்து காடு என்று பிரசாரப்படுத்தப்படும் குறித்த பகுதி முசலி பிரதேசசபைக்குட்பட்ட மரைக்கார்தீவு கிராமமாகும். இங்கு முஸ்லிம் மக்களின் மையவாடி (வெற்றுடல்கள் புகைக்குமிடம்), பள்ளிவாசல், கிணறு என்பன இன்னமும் பழுதடைந்த நிலையில் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இப்படி இருக்கும்போது, தமது சொந்த இடத்தில் குடியேறுபவர்களைப் பார்த்து – காட்டுக்குள் குடியேறுகிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாகவிருக்கிறது.

இங்கு 96 குடும்பங்கள் தற்காலிக ஓலைக் குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 40 ஏக்கர் காணி போதுமானதாகும். இது விடயத்தில் அரசாங்கம் கூடிய கரிசணை காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை, அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு, சிலாவத்துறை, முள்ளிக்குளம் பகுதிகளிலுள்ள 500 ஏக்கர் காணியினை இலங்கை கடற்படை சுபீகரிப்பதற்கு எல்லைக் கல் நாட்டியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்த நடவடிக்கையும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார் எஹியான்.

கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் ரிசாட் பதியுதீன்
வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான ஒரு அங்குலமேனும் நாம் சுத்தம் செய்யவுமில்லை, மக்களை மீளக்குடியேற்றவுமில்லை. இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடத்திற்கு திரும்பிவந்து மீளக்குடியேறியிருக்கிறார்கள். அது தவிர எவரையும் சரணாலய பகுதிக்குள் குடியேற்றவில்லை. பொதுபலசேனாவின் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம். மன்னார் மறிச்சுக்கட்டியில் பரம்பரையாக வாழ்ந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த முஸ்லிம் வில்பத்து வனாந்தரத்தை சுத்தப்படுத்தி அங்கு முஸ்லிம்கள் எவரையும் குடியமர்த்தவில்லை. வில்பத்து எல்லையில் முஸ்லிம் கிராமங்கள் நான்கு இருக்கின்றன. அந்த கிராமங்களிலேயே 300 குடும்பங்கள் குடியேறியுள்ளனர்;,விலங்குகள்,மரங்கள் மற்றும் வனாந்தரங்களின் மீது அன்பு செலுத்துகின்ற நான்,வில்பத்துவை பாதுகாப்பேன்.

மறிச்சிக்கட்டு பிரதேசத்தில் 22 வருடங்களுக்குமுன் வாழ்ந்த மக்களே அங்கு மீளக்குடியமரவந்துள்ளனர்.

600 ஏக்கர் கொண்ட இவர்களது கணிகளை யுhத்தகாலத்தில் கடற்படையினர்அவர்களது முகாகளை அமைப்பதற்கு எடுத்துக்கொண்டதால் அவர்கள் மீளக் குடியேறமுடியாமல் உள்ளனர். இதனால் முசலி பிரதேச செயலகத்துக்குரிய மறிச்சிக்கட்டி மரைக்கார்தீவு பகுதியில் 73 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ள காணி வில்பத்து சரணாலயத்துக்குரிய பாதுகாப்பு பிரதேசம் என்பது நீதிமன்றத்தில் உறுதியானால் அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும.; இவ்வாறு வெளியேறும் 73 குடும்பங்களுக்கும் மாற்றுக் காணிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேற்படி இது சட்ட விரோதமான நடவடிக்கை என்பதால் இது குறித்து சம்பந்தப்பட்டதரப்பினருக்கு அறிவித்துள்ளோம். இந்தமக்களுக்கு இரு வாரங்களில் மாற்றுக் காணிகள் வழங்க பிரதேசசெயலாளர் உறுதியளித்துள்ளார்.

வில்பத்து எல்லையிலுள்ள காணிகளில் தற்போது குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு அரசசார்ப்பற்றநிறுவனங்கள் உதவிசெய்துவருகின்றன

மேலும் மறிச்சுக்கட்டுவில் 300 வீடுகளைக் கொண்ட ஜெசிம் சிட்டிவீடமைப்புத் திட்டம் மட்டுமேநிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பிரதேசம் வனவளப் திணைக்களத்தினால் அரசாங்கஅனுமதியுடன் விடுவிக்கப்பட்டபிரதேசமாகும். இவர்களுக்கு இக் காணிக்கானஉறுதியும் உண்டுஎனவும் அரசினால் தெரிபுசெய்யப்பட்டவர்களுக்கும் மட்டுமே இவ்வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டவையாகும்.மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டிவீடமைப்புத் திட்டம் இடம்பெயர்ந்தமக்களுக்காகசட்டபூர்வமாகநிர்மானிக்கப்பட்டது.

மறிச்சிக்கட்டுபிரதேசசெயலகபிரிவில் மூன்றுபள்ளிவாசல்கள் காணப்பட்டன. அவையுத்தத்தினால் சேதமாக்கபட்டநிலையில்உள்ளன.தற்பொழுதுஒருபள்ளிவாசல் மாத்திரமேஅங்குகட்டப்பட்டுள்ளது. பழையகிராமத்தில் இருக்கின்றபழையபள்ளிக்குஅருகிலேயேபுதியபள்ளிநிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிதாகவேறுஎந்தபள்ளிகளையோவீடுகளையோநிர்மானிக்கவில்லை.

மக்களின் காணிகள் கடற்படைமற்றும் இராணுவத்தினர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்கஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்குஅமையகாணி இல்லாதவர்களுக்குமாற்றுக் காணிகள் வழங்கப்படவேண்டும்.இந்தஅடிப்படையில் ஜனாதிபதிசெயலணியின் அறிவுறுத்தலுக்கமைய இந்தகாணிகள் வழங்கப்பட்டுள்ளன.

புத்திஜீவிகள்
வில்பத்து விவகாரத்தில் அரசாங்கம் தனது அதிகாரபூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் உள்ளமை இனங்களுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடையக்கூடும் என புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர். அத்துடன் இலங்கையில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் பிரச்சனைகளை அரசாங்கத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன
மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் அரசிடம் தெளிவான நிலைப்பாடும் திடமான கொள்கைத் திட்டம் இருக்கின்றபடியால் தான், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்கள் தமது பிரதேசங்களில் மீளக்குடியமரக் கூடிய நிலைமையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. பிரகடனப்படுத்தப்படாத காடுகளாக அல்லா விட்டாலும், கடந்த 30 ஆண்டு யுத்த காலத்தில் காடுகளாக மாறிவிட்ட சில இடங்களும் உள்ளன. இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அந்தந்த திணைக்களங்களைக் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மன்னாரிலும் வில்பத்து சரணாலயப் பகுதிகளிலும் நாங்கள் இதே வழிமுறைகளையே கடைப்பிடிப்போம். அவ்வாறே, நாட்டின் தேசிய சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட வனங்கள் உள்ளிட்ட பகுதிகளைப் பாதுகாக்கும் தேசிய கொள்கைத் திட்டங்களை அரசு கைவிடப்போவதில்லை
வில்பத்து சரணாலயப் பகுதிகளுக்குள்ளும் பல்வேறு கிராமங்கள் உள்வாங்கப்பட்டு, சிறிய அளவில் மக்கள் குடியிருப்புகள் உருவாகியிருக்கின்றமை எங்களுக்குத் தெரிந்த விடயம். யால சரணாலயக் காடுகளிலும் அப்படியான கிராமங்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த மரிச்சிக்கட்டிப் பிரதேசப் பிரச்சனையை மிகப்பெரிய பூதாகரமான பிரச்சனையாக மாற்றிக்காட்டப் பார்ப்பது
மரிச்சிக்கட்டி கிராம மக்களிடம் பூர்வ காணி உறுதி ஆவணங்கள் இருப்பதாக அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ள முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது சரணாலயப் பிரதேசம் என்று அரசின் இன்னொரு பங்காளியான ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது. பொது பல சேனா அமைப்பு இதனை ஒரு பிரச்சனையாக முன்வைத்து நடவடிக்கைளில் ஈடுபடுகிறது. இந்தப் பிரச்சனை இப்போது சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையாக மாறும் அபாயத்தை அரசு தடுக்கவில்லை என்று தானே எதிரணி கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

தீர்வு
வில்பத்து காடு அழிவதாக கூறுவதாயின் அதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் முஸ்லிம்க்கள் அல்லர். மக்களின் பாதுகாவலனாக உள்ள அரசாங்கமேயாகும் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலாயர் என யாராக இருந்தாலும் அனைவருக்கும் இவை சொந்தமானவை.குடியிருக்கவும் காணிகள் வேண்டும். உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் காணிகள் வேண்டும். இதனை அரசாங்கமே நிறைவேற்ற வேண்டும். காணியற்ற மக்களுக்கு காணியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் இதனை நிறைவேற்ற வேண்டும்.சரியான முறையில் காணிகளை மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
வில்பத்து வனம் அழிந்து போகிறது என்றால் அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டுமே அன்றி அப்பாவி முஸ்லிம் மக்கள் அல்ல.அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காது முஸ்லிம் மக்களுக்கோ வேறு நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பிரயோசனமில்லை.
பாதுகாக்கப்பட வேண்டிய நிலங்களை பாதுகாத்து கொள்வது போல் காணியற்றவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *