நேற்று புதன்கிழமை (23-04-2014) காலை 11 மணியளவில் பொதுபலசேன அமைப்பினர் கொழும்பு 3 கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள எனது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அனுமதி இன்றி உட்பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் மேற்கொண்ட அடாவடித்தனத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
அரசநிறுவனம் ஒன்றுக்குள் இவ்வாறு உட்பிரவேசிப்பது சட்டவிரோதம் செயலாகும். அதனை விட ஒவ்வொரு அறையையும் ஒவ்வொன்றாக சோதனை செய்வதும்; மாபெரும் குற்றம் இந்த நாட்டிலே எந்த வொருகாலத்திலும் இடம் பெறாத ஒருவிடயமாக உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக தாண்வமாடும் பொதுபல சேனா அமைப்பு இந்நாட்டில் சமாதானத்துடன் வாழும் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிவருகிறது.
முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த பொதுபல சேனாவின் முடிவில்லாத தாக்கம் பல விதமான முறையில் செயல்படுத்தப்பட்டது.
ஹலால் பிரச்சினையில் ஆரம்பித்து முஸ்லிம்களின் ஆடைகள் முஸ்லிம்களின் வர்த்தகம்,மதராஸா,வடக்கில் முஸ்லிம் மீள்குடியேற்றம், இறுதியாக முஸ்லிம்கள் தமது உயிருக்கு மேலாக கருதும் அர்குர்ஆனில் கை வைத்த பொதுபலசேன இன்று அமைச்சுக்;குள் நுழைந்து அனுமதியை பெறாமல் ஒவ்வொரு அறைகளுக்குள் நுழைத்து அடாவடித்தனத்தில் ஈடுப்பட்டனர்.
விடுதலை புலிகளைவிட அவர்களுடைய செயற்பாடுகள் மேசமாக இருப்பதாக நான் ஏற்கனேவே சுட்டிக்காட்டி இருந்தேன.; அத்துடன் இவர்களுடைய செயற்பாடு ஆபத்தினையும் அழிவினையும் ஏற்படுத்தும் முயற்சியாகவே தென்படுகின்றது.
இவர்களுடைய இந்த அநியாயத்துக்கும் அக்கிரமத்திற்கும் எதிராக தொடர்ந்து பேசிவரும் என்னுடைய குரலை தடுக்க முயற்சிக்கின்றனர். வடக்கு முஸ்லிம்களி;ன் மீள்குடியேற்றம் தொடர்பில் குற்றசாட்டுகளை சுமதிவரும் பொதுபலசேன எனது அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனத்தை காட்டியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஜாதிக்க பலசேனாவுடைய பொதுசெயலாளர் வண.வட்டரேக்க விஜித்த ஹிமியினை அமைச்சில் மறைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டினையும் முன்வைத்துள்ளார்கள.; தேவைகளின் நிமி;த்தம் அமைச்சுக்கள் எவரும் வந்து போகலாம்.இதற்கு தடை ஏதும் கிடையாது.
இவர்களுடைய அடாவடித்தனத்துக்கு ஒருபோதும் நான் அடிபணியப்போவது இல்லை. நியாத்துக்காகவும் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவும் போராடுவேன.; இதனை எவரும் தடுக்கமுடியாது.
இப்பொழுது பொதுபல சேனாவின் செயற்பாடு எல்லோர் மனதிலும் ஒரு கேள்வியாக இருக்கின்றது.
கடந்த முப்பது வருடகாலமகாக நாட்டில் இடம் பெற்ற கொடூரயுத்தம் பல உயிர்களை காவு கொண்ட மத்தியில் 2009 ஆம் ஆண்டில் சமாதானம் உதயமானது. இந்ந சமாதான சூழ்நிலை மத்தியிலும் பொதுபலசேன அரச நிறுவனத்திற்குள் அத்து மீறுவது அரசாங்கத்திற்கு பங்கம் விளைவிக்ககும் செயலாக அமைகின்றது.
இவர்களின் இழிவான இச்செயலானது இந்நாட்டில் வாழும் சகல இன மக்களினையும் பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது
ஜானதிபதி ஒருவரை நியமிக்கவும் முடியும் இல்லமால் செய்யவும் முடியும் என்று nகூறிவருகின்றார்கள். இது அரசாங்த்தின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. இவர்களின் செயற்பாடுகளை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்
.
ர்pஷாட் பதியுதீன்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்