இன,மத வேறுபாடுகளை மறந்து நாட்டை முன்னேற்றுவது மாணவர்கள் கைகளில் உள்ளது. உங்களில் ஒருவரரான நானும் இந்த மகா நெகும புலமைபரிசில் பெற்று கல்வி கற்றவன். முல்லைத்தீவு மாணவர்கள் இன்று கல்வியில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளனர் என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
முல்லைதீவு பிரதேச சபையால் நேற்று (09)ஒழுங்கு செய்யப்பட்ட மகா நெகும புலமைபரிசில் வழங்கப்படும் நிகழ்ச்சி திட்டத்தில் விஷேட அதிதியாக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து அங்கு பேசுகையில்:
மாணவர்கள், இன,மத,வேறுபாடு பார்க்காது தமது கல்வியில் மேலும் சிறப்புற வேண்டும். மாணவர்களின் வளர்ச்சியின் பின்னால் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணை நின்றிருப்பார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை,தமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டுமென்றால் மாணவர்கள் தாம் கற்ற மாவட்டத்தில் வந்து பணிபுரிய வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கு பிரதம அதியாக கலந்து கொண்டார்.

இம் மகா நெகும புலமைபரிசில் வழங்கப்படும் நிகழ்ச்சி திட்டத்தனூடாக 98 மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *