ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொகுதிகளினை மீண்டும் புதுப்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இதுவரை காலமும் ஈரான் எதிர்கொண்ட வர்த்தக கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.ஆதனால் எங்கள் இருதரப்பு வர்த்தக உறவுகளினை பலப்படுத்துவதற்கான தருணமும் நெருங்கிவிட்டது என நான் நம்புகிறேன் என்று புதிதாக நியமிக்கபட்ட இலங்கைக்கான ஈரானிய தூதுரக விவகாரங்களுகான பொறுப்பதிகாரி ஹுசைன் இப்ராஹிம் கஹானி தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ மரியாதை அழைப்பினை ஏற்று, கடந்த 01 திகதி கொழும்பு நவம் மாவத்தையில் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இப்ராஹிம் கஹானி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கையில்:
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தகத்தினை புதுப்பிப்பதன் மூலம்; கூட்டு பொருளாதார ஆணைக்குழுவினை மீண்டு;ம் செயற்படுத்துவது முக்கியமான விடயாமாகும்.இந்த இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்புக்கான பொறுப்பை ஏற்று ஒத்தாசை வழங்குவதற்கான உங்கள் முயற்யினை நாம் வரவேற்கின்றோம்;.
ஈரான் எதிர்கொள்ளும் வர்த்தக கட்டுப்பாடுகள் இப்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது.ஆகவே இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தகத்தினை புதுப்பிப்பதற்கான நல்ல நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். தற்போது ஈரானில் காணப்படுகின்ற சாதகமான சூழ்நிலை இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்புக்கு இட்டுச்செல்லும் என்று நான் உணர்கின்றேன்.
உங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்க நானும் எனது அரசும் காத்திருக்கின்றோம்.எங்கள் வர்த்தக விவகாரம் வர்த்தக மேம்பாட்டு முயற்சிகள்; மற்றும்; வர்த்தககட்டுப்பாடுகள், தொடர்பில் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு முன்வைக்கப்படும் விடயங்கள் சாதகமான முன்னேற்ற போக்கு காணப்படுகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு 2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆண்டுவரை ஒரு சாதகமான போக்கினை காட்டியது, மேற்படி இவ் இருதரப்பு உறவு 2011 ஆம் ஆண்டு 1619,42 மில்லியன் டொலரினை எட்டிபிடித்த போதிலும், 2013 ஆண்டில் முதல் முறையாக 216,47 மில்லியன் டொலராக மொத்த வர்த்தகம் குறைந்து,எனினும் இருதரப்பு வர்த்தக இலங்கைக்கு சாதகமாகவே இருந்தது.
2013 ஆம் ஆண்டு, ஈரானுக்கான, ஏற்றுமதிகளாக தேயிலை, தெங்கு,முந்திரிகொட்டைகள், தேங்காய் நார், ஆக்சைடுகள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகியனவும் ஈரானில்; இருந்து முக்கிய இறக்குமதிகளாக பிளாஸ்டிக், மின்சாரமின்மாற்றிகள், மின் தடுப்பு கம்பிகள் , கேபிள் மற்றும் புல்டோசர் ஆகியனவும் காணப்பட்டன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஈரானிய தூதுரக அதிகாரிகள் கலந்துக்ககொண்டனர்.